உலக செய்திகள்
கனடா வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை..!!
ஒட்டாவா, இன்று 4-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். இதனிடையே ரஷியாவில் உள்ள தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள இரு பெரிய நகரங்களை சுற்றிவளைத்துள்ளதாக ரஷியா தெரிவித்தது. உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள இரண்டு பெரிய நகரங்களை முற்றுகையிட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன்- ரஷிய எல்லை, … Read more
இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கு செல்ல விரும்பும் காரணம் என்ன?
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் எதிரொலியால், யுத்த பூமியாய் உருமாறியிருக்கும் உக்ரைனில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் நிலைமை கவலையளிக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பயமும், அச்சமும் எப்போது தீரும்? போரினால் படிப்பு தடைபட்ட நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வெளியேற்றும் இந்திய அரசின் முயற்சியும் தடைபட்டுள்ளது. உக்ரைன் தனது வான்வெளியில் சிவிலியன்கள் விமான பறப்புக்கு தடை செய்ததால், இந்தியர்களை வெளியேற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் பல இந்திய … Read more
உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க், ஜப்பானிய பணக்காரர்!
கீவ்: ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போரில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைனுக்கு உலக நாடுகளும், தனிநபர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதில், எலான் மஸ்க் மற்றும் ஜப்பானிய பணக்காரர் ஒருவரின் உறுதுணை கவனத்துக்குரியதாக இருந்தது. போர் தொடங்கியது முதல் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்து வந்தார். ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 350 … Read more
மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு?
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் … Read more
கனடா நாட்டின் வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை
உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைப்பு … Read more
Toilet Rules: கழிப்பறை பயன்பாடு தொடர்பாக கடுமையான விதிகள் உள்ள ‘நாடுகள்’ !
ஒவ்வொரு நாட்டிலும் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமலில் உள்ளன. சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்ட விதிக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால், உலகில் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடர்பாக சில விதிகள் உள்ளன என்றால், ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா. இதில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அடங்கும். சிங்கப்பூரில் மோசமான பழக்கவழக்கங்களுக்கு கடுமையான தண்டனைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கழிப்பறையை உபயோகப்படுத்தியக்குப் பிறகு ஃப்ளஷ் செய்யாத பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொது கழிப்பறையை பயன்படுத்தும் பலர் இது போன்று பொறுப்பில்லாமல் … Read more
ரஷ்ய ராணுவ நடவடிக்கை | கார்கிவ் மீட்பு; சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு – உக்ரைன் பலப்பரீட்சை
கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை 4வது நாளை எட்டியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தின் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை கோரி முறையிட்டுள்ளது. தனது படையெடுப்பை நியாயப்படுத்தி இன அழிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யா தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையில், உடனடியாக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட … Read more
BREAKING: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் சம்மதம்!
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த நான்கு நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும், ரஷ்ய … Read more