ரஷ்ய தாக்குதலின் 4ஆம் நாள்: கார்கிவ் கைப்பற்றப்பட்டது; உலக நாடுகள் உதவி; இணைய சேவை வழங்கினார் எலான் மஸ்க்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இணைய சேவை, ராணுவ ஆயுதங்கள், நிதியுதவி என உக்ரைனுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. அதேவேளையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 471 உக்ரைன் ராணுவத்தினரையும் ரஷ்யப் படைகள் கைது செய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி உக்ரைன் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் 198 பேர் பலியாகியிருந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உக்ரைனில் இதுவரை … Read more

உக்ரைன் – ரஷ்யா போர்: 3 குழந்தைகள் உட்பட 198 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும், நவீன ஆயுதங்களை கொண்டு பல்முனை தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கீவ்-யை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. கீவ்-இல் இருந்து 30 கி.மீ., தொலைவில் ரஷ்ய படைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகள் தங்கள் … Read more

உக்ரைன் மக்களுக்கு உதவ முன்வந்த எலான் மஸ்க்.. ஸ்டார் லிங்க் மூலம் இணைய சேவை வழங்க உறுதி <!– உக்ரைன் மக்களுக்கு உதவ முன்வந்த எலான் மஸ்க்.. ஸ்டார் லிங்… –>

உக்ரைனில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக் கோள் மூலம் இணையசேவை வழங்கப்படும் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பெரும்பாலான பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் துணை பிரதமரும், அமைச்சருமான மைக்கைலோ பெடோரோவ், ரஷ்யாவின் தாக்குதலை குறிப்பிட்டு, உக்ரைன் மக்களுக்கு இணைய சேவை வழங்குமாறு எலன் மஸ்கிடம் கோரிக்கை … Read more

4-வது நாளாக தொடரும் போர்: கார்கிவ் நகரில் தாக்குதல் நடத்தும் ரஷியா

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் கீவில்  இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரெயில் … Read more

நிலைமை சரியில்லை; எல்லைகளைக் கடக்க முயற்சிக்க வேண்டாம்: உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

கீவ்: உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதல் 3வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள ராணுவ தளத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், ராணுவத் தளத்தை ரஷ்யப் படைகள் நெருங்கவிடமாட்டோம் என்று உக்ரைன் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக களத்தில் உக்ரைன் தனித்துப் … Read more

தெருவில் வாக்கிங் போன அதிபர்.. செம தில்லு.. அந்த பேக்கிரவுண்ட் பில்டிங் பார்த்தீங்களா!

நான் சரணடைய மாட்டேன்.. எங்கும் தப்பி ஓடவும் மாட்டேன். சரணடையப் போவதாக வரும் செய்திகள் வதந்தி என்று உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலின்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை. உக்ரைன் படையினர் தொடர்ந்து தீரத்துடன் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் ஜெலின்ஸ்கி ரஷ்யப் படையினரிடம் சரணடையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனால் உக்ரைன் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம், ரஷ்யப் படையினரிடம் … Read more

கார்பன் உமிழ்வு இல்லாத விமானத் தயாரிப்பில் ஏர்பஸ் மும்முரம்! <!– கார்பன் உமிழ்வு இல்லாத விமானத் தயாரிப்பில் ஏர்பஸ் மும்முரம்! –>

கார்பன் உமிழ்வு இல்லாத முதல் விமானத்தை தயாரிக்கப் போவதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனம் தனது ஏ380 ஜெட்லைனர் விமானத்தில் சில மாற்றங்களைச் செய்து வருவதாகவும், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் விமானங்களை இயங்கச் செய்யும் ஆய்வுகள் நடந்து வருவதாகவும் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கார்பன் உமிழ்வு முற்றிலும் இல்லாத மற்றும் புகையற்ற விமானங்களை வரும் 2035ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

கார் மீது ஏறிய ரஷிய ராணுவ டாங்கி- வலைதளத்தில் பரவிய புகைப்படத்தால் பரபரப்பு

கிவ்: உக்ரைன் நாடு மீது ரஷிய ராணுவம் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் அதிபர் மாளிகையை கைப்பற்ற தலைநகர் கிவ் நோக்கி ராணுவத்தின் டாங்கிகள் நகர்ந்து வருகிறது. அவை விளை நிலங்கள் வழியாக செல்வதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகி விட்டதாக உக்ரைன் மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ரஷிய போர் விமானங்கள் வீசிய ராக்கெட் குண்டுகளால் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டது. இதற்கிடையே உக்ரைனின் ஒபலோனின் நகர் பகுதிக்குள் நுழைந்த ராணுவ டாங்கிகள் அங்கிருந்த சாலைகள் … Read more

ஏவுகணை தாக்குதலில் தப்பிய ஆசிரியை | Dinamalar

கீவ்,-உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆசிரியையின் படம், ‘போர் முகம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனில் ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து வருகிறது. ராணுவ தளங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கார்கிவ் நகரின் சுகுவேவ் என்ற இடத்தில் வசிக்கும் ஆசிரியை ஒலேனா குரிலே, 52, என்பவர் வீட்டின் … Read more