’எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல’ – அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஆவேசம்

கீவ்: ரஷ்ய படைகள் நெருங்குவதால் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள் என்ற அமெரிக்காவின் ஆலோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார். ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், ‘தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால் ஜெலன்ஸ்கி இந்த ஆலோசனை ஏற்க மறுத்திருக்கிறார். “சண்டை இங்கேதான் நடக்கிறது. எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார் என்று ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கீவ் நகரிலிருந்து … Read more

எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை அண்டை நாட்டு எல்லைகளுக்கு வரச்செய்து அங்கிருந்து விமானம் மூலம் மீட்டு வர முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக சிறப்பு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ருமேனியா, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து … Read more

உக்ரைனில் போர் தீவிரம்: நாட்டின் எல்லையை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள் <!– உக்ரைனில் போர் தீவிரம்: நாட்டின் எல்லையை விட்டு குடும்பம்… –>

உக்ரைனில் போர் தீவிரம் அடைந்துள்ளதால் உயிரைக் காக்க கையில் கிடைத்த உடைமைகளுடன் நாட்டின் எல்லையை விட்டு குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். பலர் வீடுநிலம் போன்ற சொத்துகளையும் கைவிட்டு சென்றனர். போலந்து, ஸ்லோவேக்கியா ஆகிய அண்டை நாடுகளில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.அங்கு பல்லாயிரக்கணக்கில் உக்ரைன் மக்கள் குழந்தைகளுடன் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைனில் குண்டு வெடிப்பில் காயம் அடைந்த பலரும் ஆம்புலன்சுகள் மூலமாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவதால் எல்லைகளில் ஆம்புலன்சுகளின் சத்தங்களும் அதிகளவில் கேட்கின்றன. Source link

தென்கொரியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா

சியோல்: தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அந்த வகையில் அங்கு கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1½ லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 28 லட்சத்து 31 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வரும் அதே வேளையில் கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக அதிகரித்து … Read more

உக்ரைன் போரை மாதிரியாக வைத்து தைவான், இந்தியாவை சீனா தாக்க திட்டம்?| Dinamalar

பெய்ஜிங்: ரஷ்ய-உக்ரைன் போரை முன்மாதிரியாக வைத்து தைவான், இந்தியாவைத் தாக்க சீனா திட்டமிடுவதாக கருத்து முன்வைக்கப்படுகிறது. சீனா தொடர்ந்து பல ஆண்டு காலமாக தனது அண்டை நாடான தைவானை தன்வசம் ஆக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிறிய தீவு நாடான தைவானில் ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பிரதமர் சாய் இங் வென் பல ஆண்டுகாலமாக தைவானை சுற்றி அச்சுறுத்தல் ஈடுபடும் சீன கடற்படை மற்றும் விமானப் படைக்கு தங்கள் படை மூலம் பதிலடி … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா – உக்ரைனில் 3-வது நாளாக ரஷ்யா குண்டுமழை: ரஷ்ய ராணுவ தாக்குதலில் 198 பேர் உயிரிழப்பு – 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம்

உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பங்கேற்காமல் இந் தியா புறக்கணித்தது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் 800 ராணுவ … Read more

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உக்ரைன்: என்னவாகும் உலகம்!?

போர் என்ற வார்த்தைக்குப் பதிலாகத் தாக்குதல், ஊடுருவல், எல்லையில் பதற்றம் போன்றவற்றையே சமீபகாலமாக அதிகமும் கேள்விப்பட்டு வருகிறோம். ஆங்காங்கே சில அண்டை நாடுகளுக்குள் நடைபெறும் மோதல்களும்கூட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சில பெரிய நாடுகளின் தலையீட்டினால் அப்படியே அமுங்கிவிடுவதுதான் வழக்கம். தைவான், இந்திய எல்லைகளில் சீனாவில் அத்துமீறல்களும் உக்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளின் மீது ரஷ்யா தோற்றுவிக்கும் பதற்றங்களும் இதிலிருந்து விதிவிலக்காக இருந்துவருகின்றன. இதர பெரிய நாடுகள் இவ்விஷயங்களில் தலையிடுவதெல்லாம் ரகசியப் பிரமாணங்களுக்கு உட்பட்டு மறைமுகமாகவே … Read more

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழப்பு <!– வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உ… –>

வியட்நாமில் சுற்றுலா படகு மூழ்கியதில் 13 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஹனோய்க்கு தெற்கே 800 மைல் தொலைவில் உள்ள ஹோய் ஆன் அருகே 39 சுற்றுலாப் பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அலைகள் வேகமாக எழுந்ததால் அலைக்கழிக்கப்பட்ட படகு திடீரென கவிழ்ந்தது. 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 4 பேர் காணாமல் போனதாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. காணமால் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என … Read more

உக்ரைனுக்கு உதவும் நட்பு நாடுகள் – வான் வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா

மாஸ்கோ: உக்ரைன் மீதான படையெடுப்பால் ஐரோப்பிய நாடுகளுடனான ரஷிய உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.  ரஷியாவுக்கு எதிராக போரிடும் வகையில் உக்ரைனுக்கு, நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேலும் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள்,  ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளன.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கும் வகையில் … Read more

சரணடைய மாட்டோம்; உக்ரைன் அதிபர் ஆவேசம்| Dinamalar

கீவ்; -ரஷ்யப் படைகளிடம் சரணடையும்படி தன் ராணுவத்துக்கு உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ”நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்; சரணடைய மாட்டோம்,” என அவர், ‘வீடியோ’ வில் செய்தி வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள், தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கீவ் நகரை ரஷ்யப் படைகள் நெருங்கியுள்ளதால், தன் படைகளை சரணடையும்படி, உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாக தகவல் வெளியானது. மேலும் அவர் நாட்டை … Read more