‘No War Please’ – ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆன்ட்ரி ரூப்லெவின் கவனிக்கத்தக்க பதிவு

மாஸ்கோ: ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ், துபாய் சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவில், கேமரா முன்பு ‘No War Please’ என்று பதிவு செய்தார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடர்கிறது. இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள், 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரிக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை … Read more

யாரு இவரா காமெடியன்?.. சூப்பர் "ஹீரோ"வாக மாறிய உக்ரைன் அதிபர்!

உக்ரைன் நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் கூட உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலினிஸ்கிக்கு திடீர் மவுசு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், படு தில்லாக தலைநகரை விட்டு ஓடாமல் தைரியமாக தங்கியிருப்பதுதான். பல்வேறு நாடுகளிலும் ராணுவம் புரட்சி செய்யும், போராளிகள் நாட்டைக் கைப்பற்றுவார்கள். அதுபோன்ற சமயங்களில் எல்லாம் அந்த நாட்டுத் தலைவர்கள் மக்களையும், நாட்டையும் அம்போ என விட்டு விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிப் போய் விடுவார்கள். ஈழத்தில் கூட அப்படித்தான் வரதராஜ பெருமாள் தப்பி … Read more

உக்ரைன் தலைநகர் கீவ்வில் போருக்கு மத்தியில் பிறந்த பெண் குழந்தை <!– உக்ரைன் தலைநகர் கீவ்வில் போருக்கு மத்தியில் பிறந்த பெண் க… –>

போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உயிருக்கு பயந்து மெட்ரோ சுரங்கத்தில் பதுங்கியிருந்த கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள், தொடர்ந்து ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. ஆங்காங்கே குண்டுகள் வீசப்படுவதால் மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள சுரங்கப்பாதைகளிலும், பதுங்குக் குழிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், கீவ்-வில் உள்ள மெட்ரோ சுரங்கம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த 23 வயதான நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி … Read more

ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவோம் – ஜெர்மனி அறிவிப்பு

வியன்னா: ரஷிய படையெடுப்பால் தவித்து வரும் உக்ரைனுக்கு,  சில ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருவதாக  டெல்லியில், இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்தார்.  இந்நிலையில், உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை நேரடியாக அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.  இது தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் பீரங்கி … Read more

தாமதமான அறிவிப்பே நாங்கள் சிக்கிக் கொள்ள காரணம்; உக்ரைன் மாணவர்கள்| Dinamalar

கீவ்: ‘தாமதமான அறிவிப்பே, நாங்கள் சிக்கிக் கொள்ள காரணமாகி விட்டது’ என, உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் கூறியுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கோபால் மகன் ஸ்ரீதரன், 21. உக்ரைனில் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்தான், மாணவர்களுக்கு இந்திய துாதரகம் வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களால், உடனடியாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் ஸ்ரீதரன் அளித்த பேட்டி:பல்கலையில், … Read more

இந்திய பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை – ஆதரவு தர வேண்டுகோள்

கிவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 219 இந்தியர்களுடன் முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது

உக்ரைனில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல்கட்டமாக 219 பேர் ருமேனியாவில் இருந்து இந்திய விமானம் கிளம்பியுள்ளது. உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ராணுவம் … Read more

"சர்" என்று பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. அடுக்குமாடிக் குடியிருப்பு காலி.. பதட்டத்தில் கீவ்!

கீவ் நகரில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று அடுக்கு மாடிக் குடியிருப்பில் தாக்கியதில் அந்தக் கட்டடத்தின் பல தளங்கள் சேதமடைந்தன. உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று காலை கீழ் நகரின் தென் மேற்குப் பகுதியில் 2 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. எதைக் குறி வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஏவுகணை அடுக்கு மாடிக் குடியிருப்பில் வந்து அந்த கட்டடத்திற்கு பெரும் சேதத்தை … Read more

ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள்..! <!– ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள்..! –>

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பெருமளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.  ரஷ்யாவின் வங்கித் துறை வணிகத்தில் 80 விழுக்காட்டைக் கொண்டுள்ள முதல் 10 வங்கிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.அமெரிக்க நிதித்துறை அமைப்பின் கீழ் பரிமாற்றங்களைச் செய்ய ரஷ்யாவின் ஸ்பெர்வங்கிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விடிபி மற்றும் மூன்று வங்கிகளுக்கு அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் … Read more

பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு- தாக்குதல் தொடரும் என ரஷியா தகவல்

உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி தாக்குதல் நடத்தி … Read more