ஐ.நா.,வில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்… தோல்வி! ; ஓட்டெடுப்பை தவிர்த்தது இந்தியா| Dinamalar

நியூயார்க்-உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்தும், உடனடியாக படைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. ரஷ்யா தன், ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தியதால், ஓட்டெடுப்பு தோல்வியடைந்தது. இந்தியா, சீனா, யு.ஏ.இ., ஆகியவை ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தன.அண்டை நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில், அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்து, … Read more

உக்ரைனுக்கு மேலும் ரூ. 26 ஆயிரம் கோடி ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் … Read more

ரஷ்ய ராணுவத்தை தடுக்க பாலத்தை தகர்த்து மனித வெடிகுண்டாக சிதறிய உக்ரைன் வீரர்

கீவ்: ரஷ்யாவின் ராணுவ டாங்கியை தடுப்பதற்காக உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் குண்டு வைத்து பாலத்தை தகர்த்து தானும் உயிர் தியாகம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள், 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக … Read more

இந்தியாவிடம் ஊமைக் குசும்பு செய்த உக்ரைன்.. பழசை மறக்க முடியாதே பரமா!

உக்ரைனை விட ரஷ்யாவின் பக்கம் இந்தியா அதிகம் சாய்ந்து நிற்க சில முக்கிய காரணங்கள் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நாடுதான் உக்ரைன் . அதை இந்திய மக்களால் மறக்க முடியாது. அப்படி என்ன நமக்கு தீங்கு செய்து விட்டது உக்ரைன் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். அதைப் பற்றிப் பார்க்க நாம் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும். 1998ம் ஆண்டு..மத்தியில் வாஜ்பாய் அரசு பதவியில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பாரத ஒரு அதிரடியை அரங்கேற்றினார் … Read more

ரஷ்ய அதிபருக்கு கண்டனம்.. உலக நாடுகளில் போராட்டம்..! <!– ரஷ்ய அதிபருக்கு கண்டனம்.. உலக நாடுகளில் போராட்டம்..! –>

உக்ரைன் மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ரஷ்யா அரசுக்கு எதிராக சொந்த நாட்டு மக்களைப் போலவே பிற நாட்டினரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ரஷ்யாவிலேயே எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக மாஸ்கோ, புனித பீட்டர்ஸ்பெர்க் உள்பட 51 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் இதுவரை 1,400 பேர் கைது செய்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில், … Read more

ருமேனியாவில் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் டெல்லி புறப்பட்டது இரண்டாவது விமானம்

புக்கரெஸ்ட்: உக்ரைனில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் … Read more

உக்ரைன்: சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது ஏறிய ராணுவ டாங்கி – அதிர்ச்சி வீடியோ

கிவ்,     உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி … Read more

'இந்தியா இயன்றதை செய்யும்' – உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடியுடன் போர் சூழல் குறித்து பேசியுள்ளார். இதில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கோரிக்கை வைத்த நிலையில், அவரிடம் இந்தியா இயன்றதை செய்யும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக … Read more

ருமேனியா டூ மும்பை… உக்ரைனில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய இந்தியர்கள்!

சோவித் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷியா அதிரடியாக போர் தொடுத்துள்ளது. தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நடத்திவரும் தொடர் மும்முனை தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தினருடன் சேர்ந்து பொதுமக்களும் மடிந்து வருகின்றனர். ரஷிய ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையே போரின் காரணமாக பணி நிமித்தமாகவும், உயர் கல்விக்காகவும் உக்ரைனில் தங்கியிருக்கும் 5,000 தமிழர்கள் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் நிலை என்னவாகும் என்ற … Read more

உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்குங்கள்- ரஷிய ராணுவத்திற்கு உத்தரவு

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் … Read more