ரஷ்ய படைகளை தடுக்க பாலத்தை தகர்த்து தன்னையும் அழித்துகொண்ட உக்ரைன் வீரர்| Dinamalar

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து பாலத்தை தகர்த்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் ராணுவ வீரரான விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் கிரிமியா மற்றும் உக்ரைன் நிலப்பரப்பை இணைக்கும் முக்கிய இடமான பாலம் அருகே ரஷ்ய படைகள் நுழைந்து வருவதை கண்டு அங்கு வெடி குண்டுகளை வைத்து தன்னைத் தானே வெடிக்கச் செய்து … Read more

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு!

புதுடெல்லி, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இருந்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரஷியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனை தொடர்ந்து, ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இன்று அதிகாலை 15 நாடுகள் கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு … Read more

Russia-Ukraine conflict: பேஸ்புக்கிற்கான அணுகலை மட்டுப்படுத்தும் ரஷ்யா! காரணம் இதுதான்

ரஷ்யா-உக்ரைன் மோதல்: பேஸ்புக்கிற்கான அணுகலை ரஷ்யா மட்டுப்படுத்தியிருக்கிறது ரஷ்ய ஊடகங்களின் கணக்குகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பேஸ்புக் “அடிப்படை மனித உரிமைகளை” மீறுவதாக ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் குற்றம் சாட்டினார்.  ரஷ்ய அதிகாரிகள் நாட்டில் பேஸ்புக்கை ஓரளவு கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு சமூக ஊடக தளம் நான்கு ரஷ்ய ஊடகங்களின் கணக்குகளை கட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது.  மேலும் படிக்க | உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ … Read more

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 198 பேர் உயிரிழப்பு, 1,110+ காயம்

கீவ்: மூன்றாவது நாளாக ரஷ்ய தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் உக்ரைனில் 198 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதில் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதால், … Read more

3,500 ரஷ்ய வீரர்கள் பலி – பதிலடி கொடுக்கும் உக்ரைன்!

ரஷ்யாவைச் சேர்ந்த 3,500 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. சோவியத் யூனியன் அமைப்பில் இருந்து, உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, ரஷ்யா – உக்ரைன் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, உக்ரைன் அச்சுறுத்தும் வகையில், எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. உக்ரைன் … Read more

கீவ்வில் ரஷ்ய பீரங்கி வாகனம் ஒன்று, முதியவர் சென்ற காரை நசுக்கி அழித்த காட்சிகள் <!– கீவ்வில் ரஷ்ய பீரங்கி வாகனம் ஒன்று, முதியவர் சென்ற காரை ந… –>

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதலின் கோரத்தை விளக்கும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. கீவ் நகருக்கு செல்லும் சாலை வழியே முன்னேறிய ரஷ்ய பீரங்கி படையினர் வழிநெடுகிலும் தாக்குதல் தொடுத்த வண்ணம் சென்றனர். இதில் சாலையில் எதிரே வந்த உக்ரைன் முதியவரின் காரின் மீதும் கனத்த பீரங்கியை ஏற்றி நசுக்கி விட்டு சென்ற கொடூர காட்சிகள் வெளியாகி உள்ளன. பீரங்கி படைகள் அங்கிருந்து அகன்ற பின்னர், காரில் இருந்து முதியவரை காயத்துடன் மீட்டவர்கள், இந்த காட்சிகளை … Read more

அரசியல் ஆதரவு கொடுங்கள்… இந்திய பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷிய படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் பதட்டமும், பீதியும் ஏற்பட்டு உள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளையும் ரஷிய படைகள் தாக்குகின்றன.  உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்தில் இணைந்த பொதுமக்களுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் … Read more

போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கவலையளிக்கிறது – உக்ரைன் அதிபரிடம் வருத்தம் தெரிவித்த இந்திய பிரதமர்

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் … Read more

Support Ukraine: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை கோரும் உக்ரைன் அதிபர்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவு தரவேண்டும் என உக்ரைன் அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடினார். தற்போது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் படையெடுப்பு குறித்து இந்தியப் பிரதமரிடம் தகவல்களை தெரிவித்த உக்ரைன் அதிபர், கிரெம்ளினுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவின் ஆதரவைக் கோரினார். Prime Minister Narendra Modi spoke with Ukraine President Volodymyr … Read more

உக்ரைன் துயரம் | ரஷ்யாவைக் கட்டுப்படுத்த சர்வதேச சட்டங்களுக்கு அதிகாரம் இல்லையா? – ஒரு தெளிவுப் பார்வை

“அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றால், அதை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் கூட அதை அத்துமீறுபவராக இருக்ககூடாது. அப்படியிருந்தால் அமைதிக்கு குந்தகம்தான். அதைத்தான் ரஷ்யா செய்து கொண்டிருக்கிறது.” ”உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுகிறேன்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரி 24-ஆம் தேதி அறிவிக்கிறார். அது ரஷ்யாவில் பின்னிரவு, இந்தியாவில் அதிகாலை. இந்தியாவில் காலை 8 மணிச் செய்திகளிலேயே ரஷ்யாவின் முதல் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. பொழுது விடிவதற்கு முன்னதாக … Read more