ரஷியாவுக்கு கண்டனம், உக்ரைனுக்கு ஆதரவு… உலகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்

டோக்கியோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவை சுற்றி வளைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகளும் சண்டையிட்டு வருகின்றனர். போர் தீவிரமடைந்ததால் பொதுமக்கள் பதுங்கு குழிகளிலும் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.  போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. எனினும் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இப்போது இல்லை.  இது ஒருபுறமிருக்க ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராகவும், … Read more

பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு| Dinamalar

மாஸ்கோ: பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு சொந்தமாக ரஷ்யாவில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது 3வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து , அமெரிக்கா, பிரிட்டன் , ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் உள்ள … Read more

மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நள்ளிரவில் ஏவுகணை மூலம் தாக்கிய ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ்: உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப்படைகள் நள்ளிரவு நகரில் கீவ் நகரில் மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க … Read more

'வீழ்வேனென்று நினைத்தாயோ?' – ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி!

ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதாகவும், தலைநகர் கீவ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த மூன்று நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ … Read more

தலைநகர் கீவ், மற்றும் சுற்றுப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது – உக்ரைன் அதிபர் <!– தலைநகர் கீவ், மற்றும் சுற்றுப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட… –>

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யப் படைகள் சூழ்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நகரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள், தங்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாட்டை பாதுகாக்க முன்வருமாறு உக்ரைன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, போரிட துணிந்து வருபவர்கள் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ரஷ்ய படைகளை தங்களது ராணுவம் நிலைகுலைய வைத்துள்ளதாகவும், அவர்களின் அனைத்துவிதமான போர் திட்டங்களையும் முறியடித்துள்ளதாகவும் செலன்ஸ்கி கூறினார். … Read more

ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்த உக்ரைன் ராணுவ வீரர்

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் … Read more

ரஷ்யாவின் தாக்குதல் திட்டத்தை முறியடித்துள்ளோம்: உக்ரைன்| Dinamalar

கீவ்: ரஷ்ய படைகளின் தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: கீவ் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நகரை பாதுகாக்க முன்வருபவர்களுக்கு ஆயுதங்களை தர தயாராக உள்ளோம். இந்த போரை நிறுத்த விரும்புகிறோம். அப்போது தான் அமைதியாக வாழ முடியும். ரஷ்யாவின் தாக்குதல் திட்டத்தை முறியடித்துள்ளோம். போரை எதிர்த்த ரஷ்யர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். … Read more

2022 உலகக் கோப்பை கால்பந்து  தகுதிச் சுற்றில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம்: போலந்து

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘2022 உலகக் கோப்பை கால்பந்து’ தகுதிச் சுற்றில், ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்பை மீறி, உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதால், தலைநகர் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் இந்தப் படையெடுப்பை பல நாடுகள் விமர்சித்து வருகின்றனர். ரஷ்யா மீதும், … Read more

உக்ரைன் போர் முடியாது.. இழுத்துக்கிட்டே போகும்.. குண்டைப் போடும் மேக்ரான்!

உக்ரைன் போர் இப்போதைக்கு முடியாது. நீண்டதொரு போராக இது மாறும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அதகளம் செய்து கொண்டிருக்கிறது. சில நகரங்களைப் பிடித்து விட்ட ரஷ்யப் படை தற்போது கீவ் நகரை வளைத்து நிற்கிறது. விரைவில் கீவ் நகரம் வீழலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்கு யாரும் உதவவில்லை என்று அதன் அதிபர் விலாடிமிர் ஜெலின்ஸ்கி உருக்கமாக பேசியதைத் தொடர்ந்து தற்போது ஐரோப்பிய … Read more

அமெரிக்கா ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று கவனித்து வரும் சீனா <!– அமெரிக்கா ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று கவனித்த… –>

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், அமெரிக்கா ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று சீனா கவனித்து வருகிறது. தைவான் மீது நாளை சீனாவும் படையெடுப்பதற்கான சூழ்நிலையை இந்தப் போர் உருவாக்கியுள்ளது. தைவான் மீது சீனாவின் போர் விமானங்கள் பறப்பது குறித்து ஆசியாவே கவலை கொள்ளும் சூழல் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பினால் நாளை தைவானுக்கும் அந்த நிலை உருவாகும் என்று சீனா கருதுகிறது. ஆயினும் இரு சூழ்நிலைகளும் வெவ்வேறு என்றும் தைவான் … Read more