கொரோனா தொற்றுக்கு தாவரத்தில் இருந்து தடுப்பூசி

டொரோன்டோ:கொரோனா பரவலை தடுக்க தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை உலகிலேயே முதன் முறையாக கனடா அங்கீகரித்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் வாயிலாக உலகிலேயே தாவர தடுப்பூசியை அறிமுகம் செய்த முதல் நாடு என்ற பெருமையை கனடா பெற்றுள்ளது. இது குறித்து கனடா அரசின் நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது: கனடாவை சேர்ந்த ‘மெடிகாகோ’ நிறுவனம் தாவரத்தில் இருந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 18 … Read more

’சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கேயேதான் இருக்கிறோம்’: உக்ரைன் அதிபர் செல்ஃபி வீடியோ வெளியீடு

கீவ்: “தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்திட நாங்கள் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவம் இங்கு தான் இருக்கிறது. குடிமக்கள் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கு இருக்கிறோம். இப்படித்தான் இருப்போம்” என்று பேசி செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீது பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. முதல் நாளிலேயே வான்வழிக் கட்டமைப்பை கையகப்படுத்தியது. இரண்டாவது நாளான நேற்று உக்ரைனுக்குள் தரை … Read more

கீவ் தெருக்களில் ரஷ்யப் படை.. "ரத்தக் காட்டேறி" படம் போல.. திகில் சண்டை!

கீவ் நகருக்குள் புகுந்துள்ளது ரஷ்ய ராணுவம். தெருக்களில் ரஷ்ய ராணுவத்திற்கும், உக்ரைன் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு முழுவதும் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இரவு முழுவதும் சண்டை நடந்த நிலையில் அதிகாலையில் துப்பாக்கிச் சண்டை நின்றது. தலைநகர் முழுவதும் ஒரு விதமான மயான அமைதி நிலவுவதாக ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் ஷெர்பா கூறியுள்ளார். பறவைகளின் சத்தம் கேட்கிறது. அமைதி நிலவுகிறது. சண்டை சற்று ஓய்ந்துள்ளது. ஏதோ … Read more

இவர்கள் தான் இந்த போரின் முதல் கைதிகள்..! ரஷ்யாவில் போருக்கு வலுக்கும் எதிர்ப்பு <!– இவர்கள் தான் இந்த போரின் முதல் கைதிகள்..! ரஷ்யாவில் போரு… –>

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரில், தங்களிடம் சிக்கிய முதல் ரஷ்யக் கைதிகள் என இருவரது புகைபடத்தை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் போருக்கு வலுக்கும் எதிர்ப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷ்ய ராணுவத்திடம் பெண் ஒருவர் தைரியமாக சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலானது. தங்கள் நாட்டில் விளைந்த சூரியகாந்தி மலர்களின் … Read more

உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவோம்- நேட்டோ அறிவிப்பு

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷியா போரை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன. ஆனால் தற்போது உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் ரஷிய படைகளுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோவும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, “தங்களுக்கு எந்த நாடும் … Read more

அரசியல்வாதிகளின் உத்தரவுக்கு காத்திராமல் உதவ வாருங்கள்- உக்ரைன் அதிபர்| Dinamalar

கீவ்: அரசியல்வாதிகளின் உத்தரவுக்கு காத்திராமல் உதவ வாருங்கள் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி போர் பயிற்சிகள் அனுபவம் வாய்ந்த ஐரோப்பிய வீரர்களை ரஷ்யாவுடன் மோத உக்ரைனுக்கு அழைத்துள்ளார். உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களை ரஷ்யா ஆக்கிரமித்து வரும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதில் தாமதம் காட்டி வருவதால் ஜெலன்ஸ்கி இந்த அழைப்பை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் அரசியல்வாதிகளின் … Read more

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தோற்கடித்த ரஷ்யா: இந்தியா வாக்களிக்காதது ஏன்?

ஜெனீவா: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, அல்பேனியா முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை 11 நாடுகள் அங்கீகரிக்க இந்தியா, சீனா, யுஏஇ ஆகிய நாடுகள் தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை. இந்நிலையில், தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தோற்கடித்தது ரஷ்யா. ரஷ்யா ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்த உறுப்பினர் என்பதால் அதன் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது. இருப்பினும், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உலக … Read more

வான்வழி தாக்குதல்: உக்ரைன் மக்களுக்கு எச்சரிக்கை!

உக்ரைன் மீது இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனில் உள்ள விமான தளங்கள், ராணுவ சொத்துக்கள் மீதே குறிவைத்துள்ளோம்; அதிக மக்கள் உள்ள பகுதிகள் எங்கள் இலக்கு அல்ல என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்ய தாக்குதலால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு அடிபணிய மாட்டோம் எனவும், மக்கள் யாரும் பதற்றமடையத் தேவையில்லை எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். அதேசமயம், உக்ரைன் நாட்டின் கீவ் உள்ளிட்ட முக்கிய … Read more

ரஷ்யா மீதும், அதிபர் புதின் மீதும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்தது ஐரோப்பிய யூனியன் <!– ரஷ்யா மீதும், அதிபர் புதின் மீதும் கடுமையான பொருளாதாரத் … –>

ரஷ்யா மீதும், அதிபர் புதின் மீதும் ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள அதிபர் புதின், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோ உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் போரைத் தொடர்ந்து நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஒருமித்த ஆதரவைத் தெரிவித்தன. தேவையில்லாத தூண்டுதல் இல்லாத போரைத் தொடங்கிய புதினுக்கு கடும் … Read more

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கீவ் நகரில் உள்ள ராணுவ தளத்தைக் … Read more