சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மீது விழும் ஆபத்து: ரஷ்யா| Dinamalar

மாஸ்கோ : ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என, ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா மீது, அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் கூறியதாவது:ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு அமெரிக்கர்கள், இரண்டு ரஷ்யர்கள், ஒரு … Read more

Russia-Ukraine crisis: நேரடியாக களத்தில் இறங்கிய உக்ரைன் அதிபர்

ரஷ்யா நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து, கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எவ்வளவு மாறிவிட்டார் என்பதைப் பற்றி இன்று பேசுவோம். நேற்று, ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்த ஜெலென்ஸ்கி வந்தபோது, ​​அவர் கோட் அணிந்திருந்தார், ஆனால் இன்று அவர் செய்தியாளர் சந்திப்புக்கு வரும்போது, அவர் சட்டையுடன் இருந்தார். இதிலிருந்து, ஜெலென்ஸ்கியின் மீது எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம் மற்றும் இந்த அழுத்தம் இன்று அவரது அறிக்கையில் … Read more

தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் கடும் மோதல்; உதவி கோருகிறார் உக்ரைன் அதிபர் – ஆயத்தமாகும் அமெரிக்க படை

கீவ்: உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. அந்த நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே நேற்று நீண்ட நேரம் கடுமையான சண்டை நீடித்தது. போர் தீவிரமானதால் பெரும் பதற்றம் எழுந்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. … Read more

'உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்!' – ரஷ்யா திடீர் அறிவிப்பு!

உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என, ரஷ்யா அறிவித்துள்ளது. சோவித் யூனியன் அமைப்பில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்து, ரஷ்யா – உக்ரைன் இடையே தகராறு இருந்து வருகிறது. மேலும், எல்லைப் பிரச்னையும் இரு நாடுகளுக்கு இடையே இருந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக, எல்லையில், … Read more

நேட்டோ அமைப்பில் சேர முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்… ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை <!– நேட்டோ அமைப்பில் சேர முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்…. –>

நேட்டோ அமைப்பில் சேர முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் என ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது. நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் திட்டமிட்டதைத் தொடர்ந்து அதன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, மேலும் சில நாடுகளை எச்சரித்துள்ளது . இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் மேற்கத்திய நாடுகளையும் அவர் எச்சரித்துள்ளார். Source link

ரஷியா-உக்ரைன் இருநாட்டு படை பலம்

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை அதிர வைத்துள்ளது. இந்த போர் பற்றிய உண்மைகள் கிறங்கடிக்கும். ஆமாம், உக்ரைனின் ஆயுதப்படைகள் ரஷியாவுக்கு எதிராக எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்பிட்டு அறிகிற போது, கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. உக்ரைனைவிட ரஷியா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமோ அதிகம். ஆனால் ஒன்று, உக்ரைனிடம் இருந்து ரஷியாவுக்கு வருகிற ராணுவ சவால் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ரஷியா 1990-களில் பிரிந்த செசன்யா, 2008-ல் … Read more

உக்ரைன் பதுங்கு குழியில் தங்கியிருக்கும் பெங்கரூளு மாணவியின் வீடியோ வைரல்| Dinamalar

கீவ்: உக்ரைன் பதுங்கு குழியில் தங்கியிருக்கும் பெங்கரூருவைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் தற்போது உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களை தாக்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்திருந்தார். குறிப்பிட்ட ராணுவ முகாங்களில் மட்டுமே தாக்குதல் நடத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனாலும் உக்ரைன் அரசு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவர்களை போர் ஏற்படும் சூழலில் பதுங்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள பதுங்கு குழிகளில் தங்க வலியுறுத்தியது. இதனை … Read more

உக்ரைனில் ரஷ்யாவின் உக்கிரம் ஏன்?

லியோ டால்ஸ்டாய் தனது ‘போரும் அமைதியும்’ நாவலை இவ்வாறு தொடங்குகிறார், “நல்லது இளவரசே! ஜெனோவும் லுக்காவும் தற்போது நெப்போலியன் போனபார்ட்டின் குடும்பத்தின் வசமுள்ள நிலப்பரப்புகள் அன்றி வேறில்லை.’’ உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து 2014-ம் ஆண்டிலிருந்து தன்னாட்சி உரிமை கோரி வரும்டானெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா முறையான அங்கீகாரம் அளித்தபோது, எனக்கு ‘போரும் அமைதியும்’ நாவலின் முதல் வரிகள்தான் நினை வுக்கு வந்தன. ரஷ்யாவுக்கு ஏன் பதற்றம்? ரஷ்யாவின் நிலப்பரப்பு கற்பனைக்கு … Read more

யுத்தத்தை முடிக்க.. வெட்டி வீராப்பை விட்டு விட்டு.. இறங்கி வருவாரா உக்ரைன் அதிபர்?

அமெரிக்காவின் உள்நோக்கத்திற்கு அடி பணிந்து போகத் தயாராக இருக்கும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலின்ஸ்கி, ரஷ்யாவின் உண்மையான கவலைகளை புறம் தள்ளி விட்டு அந்த நாட்டுடன் மோதல் போக்கில் ஈடுபட்டிருப்பதுதான் உக்ரைன் செய்த பெரிய தவறு. தனது தவறுகளை உணர்ந்து ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட உக்ரைன் முன்வந்தால் மட்டுமே போர் நிற்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. உளவாளியாக இருந்து அரசியலில் புகுந்து அதிபரானவர் புடின். இதுவரை நாம் பார்த்த ரஷ்ய அதிபர்களிலேயே மிக மிக வித்தியாசமானவர். … Read more

குடியிருப்புகள் மீது தாக்குதல்.. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு..! <!– குடியிருப்புகள் மீது தாக்குதல்.. உக்ரைன் அதிபர் குற்றச்சா… –>

கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்யப் படையினர் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் வாலோடிமிர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கில் ரஷ்யாவிலும், பெலாரசிலும் இருந்து உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படையினர் நேற்றே செர்னோபில் அணுவுலையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இன்று தலைநகர் கீவின் வடகிழக்கிலும், கிழக்கிலும் இருந்து ரஷ்யப் படையினர் தாக்குவதாகவும், அவர்களை எதிர்கொண்டு உக்ரைன் வீரர்கள் போரிடுவதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யப் படையினர் தாக்குவதாகவும், கீவில் ஆங்காங்கே குண்டுவெடிக்கும் … Read more