செர்னோபிலில் அணு உலையை ரஷ்யா நேற்று கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில், வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பு <!– செர்னோபிலில் அணு உலையை ரஷ்யா நேற்று கைப்பற்றியதாக கூறப்பட… –>

செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 2ஆவது நாளாக தொடரும் நிலையில், ரஷ்ய படைகள் செர்னோபிலில் உள்ள அணு ஆலையை கைப்பற்ற முயல்வதாகவும், இது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்நிலையில், செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து காமா கதிர்வீச்சு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உக்ரைன் அணுசக்தி … Read more

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இன்று 2 விமானங்கள் இயக்கம் – ஏர் இந்தியா தகவல்

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் காரணமாக  அங்குள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு இன்று இரண்டு விமானங்கள் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து வெளியேறும் பாதைகள் குறித்த விபரங்களை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் … Read more

உக்ரைன் ராணுவத்துக்கு| Dinamalar

திடீர் அழைப்புஉக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.“உக்ரைனில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றினால், பேச்சு நடத்தி எளிதில் தீர்வு காண முடியும்,” என புடின் தெரிவித்துள்ளார். திடீர் அழைப்புஉக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை … Read more

ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனை..!

பீஜிங், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து … Read more

உக்ரைன் போர் எதிர்வினை: விளாடிமிர் புதின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்புடைய சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது புதின் போர் தொடுத்துள்ளதை அடுத்து, இந்த சொத்து முடக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய படைகள் இரண்டாவது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்ய வான்வழி கட்டமைப்புகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ள நிலையில், உலக அளவில் இதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. போரை நிறுத்தக் கோரி உலக நாடுகள் பலவும் … Read more

ஐநாவில் தீர்மானம்: அமெரிக்காவா, ரஷியாவா… இந்தியாவின் ஆதரவு யாருக்கு?

கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்கள் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். ரஷியாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தும்படி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் உலக நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தன. இதனை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் … Read more

ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் எங்கெங்கு ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறது என்ற தகவல் வெளியீடு <!– ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் எங்கெங்கு ஊடுருவி தாக்குதல் நடத… –>

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் எங்கெங்கு ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் உக்ரைனின் லூஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் ஏற்கனவே பல ஆண்டுகளாக ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அந்த பகுதிகள் வழியாக Kramatorsk, Dnirpro பகுதிக்குள் ரஷ்ய படை ஊருவியுள்ளது. அதேபோல, ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கார்கீவ் பகுதியிலும் … Read more

ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம்

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷிய ஆக்ரமிப்பு ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை குலைத்து விட்டதாக  நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் மீது நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட இந்த படையெடுப்பிற்கு … Read more

உக்ரைன் தலைநகரை சூழ்ந்தது ரஷ்ய ராணுவம் :பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார் என அதிபர் புடின் அறிவிப்பு| Dinamalar

மாஸ்கோ : உக்ரைனின் ராணுவ தளங்கள் நகரங்களை வான்வழி தாக்குதல் வாயிலாக அழித்து வரும் ரஷ்ய படையினர் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில் ”உக்ரைனுடன் பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா நேற்று இரண்டாவது நாளாக தாக்குதல்களை தொடர்ந்தது. தலைநகர் கீவ்வில் அதிகாலை முதலே குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்க துவங்கியதாக … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆதரவு அளிக்க வேண்டும்- இந்தியாவுக்கு ரஷ்ய அரசு வேண்டுகோள்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன்- ரஷியா  விவகாரம் தொடர்பாக  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைனில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் தெரிவித்தன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.  இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் … Read more