'பேச்சுவார்த்தை நடத்துங்க!' – புடினிடம் ஜின்பிங் வலியுறுத்தல்!

உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார். சோவித் யூனியன் அமைப்பில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்து, ரஷ்யா – உக்ரைன் இடையே தகராறு இருந்து வருகிறது. மேலும், எல்லைப் பிரச்னையும் இரு நாடுகளுக்கு இடையே இருந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. … Read more

ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடை <!– ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடை –>

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ள நிலையில், 2-வது நாளாக தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், தைவான்,ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை, ராஜாங்க ரீதியான பயணத் தடை உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளன.  கச்சா எண்ணெய் மற்றும்  இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலம் அதிக வருமானத்தை பெற்று … Read more

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்- சீன அதிபரிடம் சொன்ன புதின்

பீஜிங்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 2-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி தாக்குதல் … Read more

உக்ரைனுக்கு சுவீடன் ராணுவ உதவி| Dinamalar

கீவ்: ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கி உள்ளது சுவீடன் அரசு கடந்த இரண்டு தினங்களாக உக்ரைன் நாட்டு மீது ரஷ்யாதாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நேட்டோ நாடுகளிடம் தங்களுக்கு உதவுமாறு உக்ரைன் கேட்டுக்கொண்டது. இருப்பினும் நேட்டோ நாடுகள் ராணுவ உதவியோ அல்லது மற்ற எந்தவகையிலான உதவியோ செய்யாமல் மவுனம் காத்து வந்தன. இதனையடுத்து உக்ரைன் அதிபர் தங்களை காத்துக்கொள்ள தங்களுக்கு வழி வகை தெரியும் எனவும் அவர்கள் வேண்டுமானால் அஞ்சலாம் … Read more

உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க தயார் – ஹங்கேரி அறிவிப்பு

புடாபெஸ்ட், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.  இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரும்பாலான மக்கள் உக்ரனை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.  உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை அழைத்துவர நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைன் வான்பகுதி … Read more

உக்ரைன் விவகாரத்தில் எங்களை இந்தியா ஆதரிக்க வேண்டும்: ரஷ்யா

மாஸ்கோ: “உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தின்போது, எங்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்” என்று ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் பேசும்போது, “இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையாகவும் சுதந்திரமாகவும் உள்ளது. நாங்கள் அதை பாராட்டுகிறோம். தற்போதைய நிலவரம் குறித்தும், அதற்கான காரணத்தையும் இந்தியா நன்கு புரிந்து வைத்திருக்கிறது. நாங்கள் இந்தியாவின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்து புதிய தீர்மானத்தை … Read more

திரும்பி போங்க… ரஷ்ய படைகளை தனி ஆளாக எதிர்த்த உக்ரேனிய நபர்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உக்ரைன் நாட்டு மக்களை உறக்கவிடாமல் செய்து வருகிறது. அதுபோக இங்குள்ள சுமார் 16,000 இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் ரஷ்ய படையின் நாசக்கார குண்டுகளுக்கு மத்தியில் உயிர் பயத்துடன் தவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு படைகளை ரஷ்ய படை துவம்சம் செய்து வரும் சூழலில் இன்னும் சில மணி நேரத்தில் கீவ் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போரை விரும்பாத … Read more

சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கியிருக்கும் உக்ரைன் மக்கள்: பாட்டுப் பாடி ஆறுதலுக்குள்ளாகிக் கொள்ளும் வீடியோ வைரல் <!– சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கியிருக்கும் உக்ரைன் மக்கள்: ப… –>

1000-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டோம்- உக்ரைன் தகவல்

உக்ரைன் மீது ரஷியா இன்று 2-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் சார்பில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்யா| Dinamalar

மாஸ்கோ: சண்டையை நிறுத்தினால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் நகரை நெருங்கிவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதுடன் பதிலடி கொடுத்து வருகின்றன. ரஷ்யாவிற்கு மேலும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்ய படைகளின் தாக்குதலில் மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் பலி … Read more