உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்- ரஷியா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் … Read more

நேட்டோவிடமும் அணு அயுதம் இருக்கிறது: பிரான்ஸ் எச்சரிக்கை| Dinamalar

பாரிஸ்: ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சமுள்ள நிலையில், நேட்டோவிடமும் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை புடின் புரிந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. உலக நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷ்யா உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வருகிறது. தலைநகர் கீவில் இன்று தாக்குதலை தொடங்கியுள்ளனர். ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி தருகிறது. நாட்டை காக்க நினைக்கும் குடிமக்களுக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனில் … Read more

உக்ரைனில் பரிதாபம்: பிரியும் மகள், கதறும் தந்தை, உலகத்தை உருக வைத்த வீடியோ

பல வாரங்களாக தொடர்ந்துகொண்டிருந்த ரஷ்யா உக்ரைன் இடையிலான உச்சக்கட்ட பதற்றம் நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. வியாழனன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது தேவையற்ற ஒரு தாக்குதலைத் தொடங்கினார். அதிகாலை துவங்கிய இந்த தாக்குதலால் பலர் தங்கள் வீடுகளை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் தங்கள் குடும்பங்களை பிரிய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.  உக்ரைனிலிருந்து வெளிவரும் புகைப்படங்களிலிருந்தும், அந்த புகைப்படங்களில் இருக்கும் மக்களின் கண்களில் காணப்படும் அச்சத்திலிருந்தும் அங்குள்ள சூழலை நன்றாக … Read more

'பாசிசவாதிகளே… இங்கே உங்களுக்கு என்ன வேலை?' – ரஷ்ய வீரரிடம் நேருக்கு நேர் வாதிட்ட உக்ரைன் வீரமங்கை

ஹெனிசெஸ்க்: ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரரிடம், “உங்களுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை?“ என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ பாராட்டுகளைக் குவித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவ நடவடிக்கை வலுத்துள்ளது. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியே “நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்“ என்று வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய ராணுவ வீரரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார் பெண் ஒருவர். அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் ரஷ்ய வீரரிடம் வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ … Read more

கொதிக்கும் போர்க்களம்.. உக்கிரத்தில் உக்ரைன்.. முகிழ்த்து நின்ற காதல் பூ!

போரில் சிக்கியுள்ள உக்ரைனில் காதலர்கள் எதற்கும் கலங்காமல் நிற்கும் புகைப்படங்கள் நிறைய வெளியாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். நேட்டோ அமைப்பில் சேரத் துடியாய் துடிக்கிறது உக்ரைன். உக்ரைனை எப்படியாவது நேட்டோ அமைப்புக்குள் கொண்டு வர அமெரிக்காவும் ஏகப்பட்ட நரித்தனங்களை செய்து வந்தது. பொறுத்துப் பார்த்த ரஷ்யா இப்போது உக்ரைனை போட்டுத் தள்ள ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் 2ம் உலகப் போருக்குப் பின்னர் இப்படியானதொரு தாக்குதலை யாரும் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு … Read more

ரஷ்யா மீது தீவிரமான பொருளாதாரத் தடைகள் விதிக்கத் திட்டம் – ஜப்பான் பிரதமர் <!– ரஷ்யா மீது தீவிரமான பொருளாதாரத் தடைகள் விதிக்கத் திட்டம் … –>

ரஷ்யா மீது தீவிரமான பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து ஜப்பானில் உள்ள ரஷ்ய நிதி நிறுவனங்கள், தொழிலதிபர்கள், ராணுவ நிறுவனங்கள் மீது தீவிரமான தடைகளை விதிக்க உள்ளதாக புவியோ கிஷிடா தெரிவித்துள்ளார். அவர்களின் சொத்துக்களை முடக்க உள்ளதாகவும், ரஷ்ய ராணுவ நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள 120 ஜப்பானியர்களை மீட்க போலந்துடன் ஜப்பான் தூதரகம் … Read more

பிரிட்டன் விமானங்கள் தரையிறங்க, வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷிய வீரர்கள், உக்ரைன் ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களில் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர்.  உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இன்று நடைபெற்ற சண்டையில் உக்ரைன் ராணுவ விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், … Read more

உக்ரைனுக்கு உடனடி நிதியுதவி வழங்க தயார்: உலக வங்கி| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யாவின் தாக்குதலால் சிக்கி தவிக்கும் உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 2வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்விற்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கி தரப்பில், ‛உக்ரைனுக்கு நிதியுதவி உள்ளிட்ட தேவைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் … Read more

'போர் வேண்டாம்.. எங்களுக்கு அவமானமாக இருக்கிறது'- ரஷ்ய மக்கள் முழக்கம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: போர் வேண்டாம்! “No to war!” என்ற முழக்கத்துடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் பிப்ரவரி 24, 2022. வழக்கமான நாளாக அமையவில்லை. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் அறிவித்த விநாடிகளில் கிழக்கு உக்ரைன் அதிரத் தொடங்கியது. 2 ஆம் நாளான இன்று தலைநகர் கீவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதில் உக்ரைன் நாட்டவரும் அடங்குவர். … Read more

அதிகாலையில் குலுங்கிய பூமி… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

எரிமலைகள் சூழ்ந்த நாடு என்பதால் இந்தோனேசியாவுக்கு எப்போதும் நிலநடுக்க அபாயம் உண்டு. இந்தியா போன்ற நாடுகளுக்கு பருவமழை எப்படியோ அதுபோன்ற இந்தோஷியாவில் எரிமலைகள் குமுறுவதும், நிலநடுக்கமும். அந்த நாட்டு மக்களுக்கு நிலநடுக்கம் பழக்கப்பட்டதுதான் என்றாலும், அவர்களை அதிர்ச்சி அடைய செய்யும்படியாக இன்று அதிகாலை அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் பக்கிடிங்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. உக்கிரமடையும் உக்ரைன் போர் – பொது மக்கள் … Read more