‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’-கரோனாவிலிருந்து மீளும் நிலையில் போர் அவசியம்தானா?

இரண்டு பழமொழிகள்: ‘பழி ஓரிடம், பாவம் ஓரிடம்’; ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’. உக்ரைன் மீதான ரஷ்யப் போரில் இந்தியாவின் நிலை இதுதான். சர்வதேச அரங்கில் எல்லா நேரங்களிலும், எல்லா பிரச்சினைகளிலும் இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நல்ல தோழனாக இருக்கும் நாடு – ரஷ்யா. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு சாதகமாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துகிற நல்ல நண்பன். ஆனால், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு மிக நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. ‘நேட்டோ’ … Read more

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி தயாராக உள்ளதாக அறிவிப்பு <!– உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி தயாராக உள்ளதாக அறிவ… –>

உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நிதியுதவி வழங்க உலக வங்கி தயாராக உள்ளதாக உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுவதால், உக்ரைன் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று உக்ரைன் நாட்டு அதிபரை மல்பாஸ் சந்தித்து, உக்ரைன் மீதான உலக வங்கி … Read more

துனிசியா நாட்டில் இஸ்ரேலிய நடிகை படத்துக்கு தடை

துனிஸ் : இஸ்ரேலிய நடிகை கேல் கடோட் நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியா திடீர் தடை போட்டுள்ளது. இதன் பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன. நடிகை கேல் கடோட், இஸ்ரேல் ராணுவத்தின் பணியாற்றி உள்ளார், இவர், பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை ஆதரிக்கிறார் என்று கூறப்படுவதால், துனிசியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக துனிசியா திரையரங்குகளில் இருந்து, அவர் நடித்துள்ள ‘டெத் ஆன் தி நைல்’ என்ற திரைப்படம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இந்தப்படம் இங்கிலாந்து … Read more

ரஷ்யா – உக்ரைன் பகை வளர்ந்த பின்னணி…

சோவியத் யூனியனில் ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன் பகை நாடான கதை.. 1991 ஆக. :சோவியத் யூனியன் உடைந்த பின் 14 நாடுகள் சுதந்திர நாடாகின. இதில் உக்ரைனும் ஒன்று. லியோனிட் கிராவ்சுக் முதல் அதிபரானார். 2004:ரஷ்ய ஆதரவாளரான விக்டர் யனுகோவிச் அதிபரானார். ஆனால் இதில் முறைகேடு நடந்ததாக ‘ஆரஞ்சு புரட்சி’ பெயரில் மறுதேர்தல் நடத்த போராட்டம் வெடித்தது. விக்டர் யுஷ்செங்கோ அதிபராக தேர்வு. 2005:இவர் உக்ரைனை நேட்டோ, ஐரோப்பிய யூனியனில் இணைப்பதாக உறுதியளித்தார். 2008:உக்ரைன் ஒருநாள் … Read more

விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி

உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமரர் நரேந்திர மோடியுடன் பேசினார். நேற்று இரவு (பிப்ரவரி 24, 2022 வியாழன்) விளாடிமிர் புட்டினுடனான தொலைபேசி உரையாடலின்போது (India – Russia Talk), ​​உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவை வலியுறுத்தினார். “வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பிலிருந்தும் … Read more

ரஷ்யா மீது ஜி7 நாடுகள் பொருளாதார தடை: உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். உக்ரைனில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, அழிவுக்கு ரஷ்யாவே காரணம். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது ஏற்கெனவே … Read more

உக்ரைன் மீதான போர், ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனையாக இருக்கும் – பிரான்ஸ் அதிபர் <!– உக்ரைன் மீதான போர், ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுன… –>

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனையாக இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் போருக்கு பலமான முறையில் பிரான்ஸ் பதிலடி தரும் என்றும் அவர் கூறினார். ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாகவும் அது ரஷ்யாவின் ராணுவத்தை மட்டுமின்றி அதன் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்யும் என்றும் மாக்ரோன் தெரிவித்தார். தொலைபேசியில் நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்திய மாக்ரோன், இந்தப் போரை பதற்றமில்லாமல் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் எதிர்கொள்வோம் என்று … Read more

நாட்டை காக்க உக்ரைன் மக்கள் முன் வர வேண்டும் – அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு

கீவ்: ரஷியா தாக்குதலால் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷியா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள், அமைதியான … Read more

ரஷ்யாவை இரும்புத் திரைக்குள் பூட்டி வைக்க யாராலும் முடியாது| Dinamalar

மாஸ்கோ:”ரஷ்யா போன்ற நாடுகளை இரும்புத் திரைக்குள் பூட்டி வைக்க யாராலும் முடியாது,” என, அந்நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடை விதிக்கப்படும் என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன. இது குறித்து டிமித்ரி பெஸ்கோ கூறியதாவது:பொருளாதார தடைகளால் ரஷ்யா போன்ற நாட்டை இரும்புத் திரை போட்டு பூட்டி வைக்க யாராலும் முடியாது. சில நாடுகளுடன் எங்களுக்கு ஏற்கனவே பிரச்னைகள் இருந்துள்ளன. அதற்காக … Read more

மூண்டது போர்! – உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரே வாரத்தில் இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. சற்று முன்னர் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜெனீவாவில் … Read more