அமெரிக்க எச்சரிக்கை முதல் புதினின் போர் அறிவிப்பு வரை – உக்ரைன் நெருக்கடியின் சமீபத்திய டைம்லைன்

மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தத் தொடங்கிய நிலையில் ரஷ்ய அதிபரின் உத்தரவும் வெளியானது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 18 முதல் 60 வயதுடைய அனைவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போர் தொடங்கியுள்ள நிலையில் இது மிகப் பெரிய மனித உயிர்கள் இழப்புக்கு வித்திடும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பேற்க … Read more

உக்ரைனுக்கு உதவ நேட்டோ படைகளை அனுப்பும் திட்டம் இல்லை – அந்த அமைப்பின் தலைவர் <!– உக்ரைனுக்கு உதவ நேட்டோ படைகளை அனுப்பும் திட்டம் இல்லை – அ… –>

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவ நேட்டோ படைகளை அனுப்பும் திட்டம் இல்லை என அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டா ஆகும். அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். இந்த … Read more

செர்னோபில் நகரை கைப்பற்றியது ரஷியா – அணுமின் நிலையம் மீதான தாக்குதலால் கதிர்வீச்சு அபாயம்

கீவ்: உக்ரைன் மீது நேற்று போர் தொடங்கிய ரஷிய படைகள் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதல்களை நடத்தின. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.   அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் பாதுகாப்புத் தளங்களையும் ரஷியா தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.  நேற்று … Read more

பகை வளர்ந்த பின்னணி…| Dinamalar

சோவியத் யூனியனில் ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன் பகை நாடான கதை..1991 ஆக. :சோவியத் யூனியன் உடைந்த பின் 14 நாடுகள் சுதந்திர நாடாகின. இதில் உக்ரைனும் ஒன்று. லியோனிட் கிராவ்சுக் முதல் அதிபரானார்.2004:ரஷ்ய ஆதரவாளரான விக்டர் யனுகோவிச் அதிபரானார். ஆனால் இதில் முறைகேடு நடந்ததாக ‘ஆரஞ்சு புரட்சி’ பெயரில் மறுதேர்தல் நடத்த போராட்டம் வெடித்தது. விக்டர் யுஷ்செங்கோ அதிபராக தேர்வு.2005:இவர் உக்ரைனை நேட்டோ, ஐரோப்பிய யூனியனில் இணைப்பதாக உறுதியளித்தார். 2008:உக்ரைன் ஒருநாள் எங்கள் கூட்டமைப்பில் இணையும் … Read more

'நான் இப்போது அதிபராக இருந்திருந்தால்…..’ – ரஷிய தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் கருத்து

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.  ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷிய தாக்குதல் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.  … Read more

பேரிழப்பு ஏற்படும்; அதற்கு ரஷ்யாவே பொறுப்பாகும்: புதினுக்கு அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் இதனால் பெரியளவில் மனித உயிர்கள் இழப்பைச் சந்திக்கும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தநிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் … Read more

போரை உடனே நிறுத்துங்க: ரஷிய அதிபர் புதினை வலியுறுத்திய பிரதமர் மோடி!

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவை, போரை நிறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி சொல்ல வேண்டும் என்று டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் மூலம் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்றுகொள்ளும் விதமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி இன்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி புதினிடம் அவர் வலியுறுத்தினார். அத்துடன் இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் நேர்மையான முறையில் தீர்வு காண … Read more

உக்ரைன் மீதான படையெடுப்பு கட்டாய நடவடிக்கை – ரஷிய அதிபர் புதின் கருத்து

மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுப்பு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன்  ரஷிய அதிபர் புதின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதால், வேறு வழிகளில் எதிர்வினையாற்ற இயலாது என்று விளக்கினார்.  உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் புதின் குறிப்பிட்டார். மேலும் உலகப் பொருளாதாரத்தில் ரஷ்யா ஒரு அங்கமாகவே உள்ளதால், உலகப் பொருளாதார அமைப்பைச் சேதப்படுத்த நாங்கள் விரும்பவில்லை … Read more

விடாமல் குண்டு மழை பொழியும் ரஷியா ; மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம்

லண்டன் உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.  ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது … Read more