உக்ரைன் விவகாரத்தில் இம்ரான்கான் கூறிய கருத்தால் சர்ச்சை – அமெரிக்கா பதிலடி <!– உக்ரைன் விவகாரத்தில் இம்ரான்கான் கூறிய கருத்தால் சர்ச்சை … –>

ரஷ்யா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், உக்ரைனுக்கு எதிரான இந்த போர் தருணத்தில் ரஷ்யாவில் இருப்பது மிகுந்த உற்சாகமளிப்பதாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக புதன்கிழமை இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தன்னை வரவேற்ற அதிகாரிகளிடம் தாம் ரஷ்யா வந்திருந்த நேரம் பார்த்து போர் நடைபெறுவதாகவும், இது மிகுந்த உறசாகமளிப்பதாகவும் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. போர் … Read more

பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள்- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

கீவ்: உக்ரைனுக்குள் ரஷிய படைகள் ஊடுருவி உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் போர் விமானங்களின் சத்தம், வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. வான்எல்லை மூடப்பட்டதால் உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. அதில், ‘உக்ரைனில் ராணுவச் சட்டம் அமலில் … Read more

பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்ய பயணம்: அமெரிக்கா, ஐரோப்பா அதிருப்தி| Dinamalar

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சமயத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்றிருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதித்துள்ளன. பிரச்னைக்குரிய இச்சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது பயணத்தை ரத்து செய்யாமல் திட்டமிட்டபடி மாஸ்கோவிற்கு சென்றுள்ளார். … Read more

ரஷிய தாக்குதலில் 40 வீரர்கள், பொதுமக்கள் 10 பேர் பலி – உக்ரைன் அரசு அறிவிப்பு

கீவ், உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 100 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது.   உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் எனவும் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் வீரர்கள் … Read more

'ஒரேநாளில் அழிக்கப்பட்ட ராணுவத் தளங்கள்' – உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும் உலகளாவிய அதிர்வுகளும்

பல வாரங்களாக நீடித்து வந்த பதற்றம் ஒரே நாளில் உக்கிரமடைந்து, உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்ய படைகள் முன்னேறும் வேகத்தைப் பார்க்கும்போது, உலக அளவில் பெரும் பதற்றமும் கவலையும் அதிகரித்துள்ளது. உக்ரைனின் 11 விமானப்படைத் தளங்கள் உள்ளிட்ட 70 ராணுவத் தளங்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டதாக கூறுகிறது ரஷ்யா. அதேவேளையில், தலைநகர் கீவ் நகரில் தாக்குதல் நடந்து வருவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய அதிருப்தி இன்று, நேற்று தோன்றியது … Read more

உக்ரைன் பதிலடியில் ரஷ்யப் படையினர் 50 பேர் பலி.! <!– உக்ரைன் பதிலடியில் ரஷ்யப் படையினர் 50 பேர் பலி.! –>

ரஷ்யப் படையினர் பல முனைகளிலும் உக்ரைனுக்குள் முன்னேறிச் செல்லும் நிலையில், உக்ரைன் படையினரின் பதிலடியில், ரஷ்ய வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுயிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வீடுகள் வாகனங்கள் சேதமடைந்ததுடன் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் குண்டுவீச்சு, ஏவுகணைத் தாக்குதல் ஆகியவற்றால் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதம் ஏந்திப் போராட விருப்பமுள்ள எவரும் படையில் சேர்ந்து போரிடலாம் எனப் பொதுமக்களுக்கு உக்ரைன் … Read more

உக்ரைன் கீவ் நகரம் அருகே விழுந்து நொறுங்கியது ராணுவ விமானம்- 14 பேர் கதி என்ன?

ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. இதற்கு மத்தியில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் 14 … Read more

இந்தியர்களிடம் மோசடி நேபாளத்தினர், சீனர் கைது| Dinamalar

காத்மாண்டு:நேபாளத்தில், இந்தியர்களை குறிவைத்து, ‘ஆன்லைன்’ வாயிலாக கடன் தந்து மோசடிகளில் ஈடுபட்ட, சீன நாட்டினர் உட்பட 117 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.நம் அண்டை நாடான நேபாளத்தில், ஆன்லைன் வாயிலாக கடன் தருவதாக கூறி நடக்கும் மோசடி சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.கடந்த 21ம் தேதி, இந்த மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, தலைநகர் காத்மாண்டு மற்றும் பக்தாபூர் மாவட்டத்தில் உள்ள சில இடங்களில், போலீசார் சோதனை நடத்தி 117 பேரை … Read more

இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு துணை நிற்கும் – போரிஸ் ஜான்சன்

லண்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் சிறப்பு ராணுவ … Read more

ரஷ்யா உக்ரைன் மோதல்: இந்தியாவின் கவலைகளுக்கான காரணங்கள்..!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால், நாட்டின் பல பகுதிகளில் இந்திய குடும்பங்களின் கவலை அதிகரித்துள்ளது. உண்மையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் காரணமாக சிக்கியுள்ளனர். உக்ரைனில் சுமார் 18,000 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இது தவிர, சுமார் 8,000 இந்தியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உக்ரைனில் 76000 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அதில்  சுமார் 19000 பேர் இந்திய … Read more