”நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா” – உக்ரைன் அதிபர்

கிவ்: “இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகள் தாக்கியதுபோல் எங்கள் நகரை ரஷ்யா தாக்கியுள்ளது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பேசினார். உக்ரைன் மீதான தாக்குதலை நிராகரிக்குமாறு ரஷ்ய மக்களுக்கு வீடியோவில் நேரடி வேண்டுகோள் விடுத்தார். ரஷ்யர்களை நோக்கி அவர், “நீங்கள் எதற்காக, யாருடன் சண்டையிடுகிறீர்கள்? உங்களில் பலர் உக்ரைனுக்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களில் பலருக்கு உக்ரைனில் குடும்பம் … Read more

படைபலமிக்க ரஷ்யாவை உக்ரைன் எதிர்கொள்வது மிகக் கடுமையான சவால் ; வல்லுநர்கள் கருத்து <!– படைபலமிக்க ரஷ்யாவை உக்ரைன் எதிர்கொள்வது மிகக் கடுமையான சவ… –>

படைபலமிக்க ரஷ்யாவை உக்ரைன் எதிர்கொள்வது மிகக் கடுமையான சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேரும், அதன் ஆயுதப் படைகளில் 9 இலட்சம் வீரர்களும் உள்ளனர். ரஷ்யாவிடம் 2840 பீரங்கிகள் உள்ளன. இது உக்ரைனில் உள்ளதைப் போல் மூன்று மடங்காகும். எனினும் அவர்கள் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும், உயிரிழப்பும் நேரக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு போரின்றியே கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றிக் கொண்டது. அதன்பின்னர் … Read more

உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை… சண்டையில் ஏராளமானோர் பலி

கீவ்: ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்கின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.  அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. ரஷிய போர் விமானங்கள் … Read more

” பிரதமர் மோடி தலையிட வேண்டும் ” – உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்

கியூ: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா கொத்துக்குண்டுகளால் தாக்கி வருகிறது. இதில் இந்தியா தலையிட வேண்டும் எனவும், ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ராணுவ நடவடிக்கை ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது … Read more

“ஜெர்மனியின் நாஜி படையைப் ரஷியா தாக்குதல் நடத்துகிறது” – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

கீவ், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படைகள் தாக்கியது போல் உக்ரைன் மீது ரஷ்யா … Read more

Russia Ukraine News: உக்ரைனின் உடனடித் தேவைகள் என்ன? உக்ரைன் அமைச்சரின் பட்டியல்

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியது தொடர்பாக நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன. இந்த நிலையில் உக்ரைனின் தற்போதைய அவசரத் தேவை என்ன? தெரிந்துக் கொள்வோம். வியாழன் அன்று (பிப்ரவரி 24) ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக … Read more

ஆயுதம் ஏந்த தயாராக உள்ள எவரும் படையில் இணையலாம்: குடிமக்களுக்கு உக்ரைன் அரசு அழைப்பு

‘ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்’ என்று தனது குடிமக்களை உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் விடுத்த அறிவிப்பில், “ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்” என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதலில் ஏறத்தாழ 100 உக்ரைன் பாதுகாப்பு படையினர் பலியானதாகவும், உக்ரைன் அரசின் 8 இணையப் பக்கங்கள் … Read more

இந்தியாவின் உதவியைக் கேட்ட உக்ரைன் தூதர்.. ஆனால் நேருவை புகழ்ந்து பேசிட்டாரே!

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் பேசினால் அவர் நிச்சயம் கேட்பார். போரும் நிற்கும் என்று உக்ரைன் நாட்டு தூதர் இகோர் போலிகா கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து நகரங்களும் பற்றி எரிகின்றன. விமான நிலையங்கள், விமானப்படை தளங்களை ரஷ்யா படையினர் நிர்மூலமாக்கியுள்ளனர். ரஷ்யாவின் இந்த அதி வேக தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் தொடர்ந்து திணறி வருகிறது. பல நாடுகளிடமும் … Read more

உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ஜெர்மனி அவசர ஆலோசனை <!– உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ஜெர்மனி … –>

ஜெர்மனி நாடு அவசர ஆலோசனை ஐரோப்பாவின் அமைதிக்கு ஆபத்து என எச்சரிக்கை ரஷ்ய அதிபர் புடின் மீது ஜெர்மனி பிரதமர் பாய்ச்சல் உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஜெர்மனி அவசர ஆலோசனை வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஜெர்மனி பிரதமர் அழைப்பு ஐரோப்பாவின் அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது – ஜெர்மனி எச்சரிக்கை ஐரோப்பிய கண்டத்தின் அமைதியை சீர்குலைக்க ரஷ்ய அதிபர் புடின் முயற்சிப்பதாக, ஜெர்மனி குற்றச்சாட்டு Source link

உக்ரைன் உளவுத்துறை அலுவலகத்தை தகர்த்தது ரஷிய படை

உக்ரைன் மீது ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலும் ரஷிய படை பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.   உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது ரஷிய படை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு ஆசோவ் கடற்பகுதியில் தங்களது 2 சரக்கு கப்பல்களை … Read more