உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன்: கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து மிகக் குறைந்தவிலையில் உலகம் முழுவதற்கும் விநியோகித்த இந்திய நிறுவனங்களை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான சுகாதாரத்துறை உறவு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி கருத்தரங்கில் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு வரையிலான காலத்தில் 100 நாடுகளுக்கு 15 கோடிதடுப்பூசி மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இதன் காரணமாக குழந்தை உயிரிழப்புக்குக் காரணமாக அமையும் நிமோனியா மற்றும் ரோட்டா வைரஸ் நோய்களுக்கான தடுப்பூசியை உலகம் முழுவதும் … Read more

கனடாவில் அவசரநிலை வாபஸ் – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ <!– கனடாவில் அவசரநிலை வாபஸ் – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ –>

கனடா தலைநகர் ஒட்டவாவில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை திரும்பப் பெறப்படுகிறதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லாரி ஓட்டுநர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு நகரையே ஸ்தம்பிக்கச் செய்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் மூலம் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அவசர நிலையை திரும்பப் பெறுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.  Source … Read more

உலக நாடுகளுக்கு மலிவு விலையில் இந்தியா தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்திய- அமெரிக்க சுகாதார கூட்டாண்மை குறித்து காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது. உலக நாடுகளுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்க, இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு … Read more

ரஷ்யாவுடனான போர் பதற்றத்தால் உக்ரைனில் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் <!– ரஷ்யாவுடனான போர் பதற்றத்தால் உக்ரைனில் நாடு தழுவிய அவசர ந… –>

தங்கள் நாட்டு எல்லையில் 2 லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்திருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். போர் அபாயம் எழுந்துள்ளதால் உக்ரைன் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக, தேசிய அவசரகால நிலையை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ரஷியாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறவேண்டும் என உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது. போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா உருக்கமான … Read more

மக்கள் அமைதி காக்க வேண்டும் – உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

கியூ: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.  இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா அங்கீகரித்தது. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால் ரஷ்யா தனது படைகளை … Read more

உலகின் அழகிய கட்டடம் துபாயில் கோலாகல திறப்பு| Dinamalar

துபாய் :துபாயில் மிகப் பிரமாண்டமான ‘எதிர்கால அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், ‘புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது. இதையடுத்து, உலகிலேயே மிக அழகான கட்டடம் என்ற சிறப்பை எதிர்கால அருங்காட்சியகம் பெற்றுள்ளது.ஷான் கில்லா என்ற கட்டடக் கலை வல்லுனர் வடிவமைத்த இந்த அருங்காட்சியகத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீம் அல் மக்தும் திறந்து வைத்தார். திறப்பு விழாவின்போது … Read more

கம்போடியாவில் 3 – 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி <!– கம்போடியாவில் 3 – 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி –>

கம்போடியா நாட்டில் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சீனாவின் சினோவாக் தடுப்பூசி செலுத்தப்படுமென அந்நாட்டு பிரதமர் சாம்டெக் டெக் ஹுன் சென் அறிவித்திருந்தார். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் என்றும் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அதன் படி, கம்போடியா தலைநகர் புனோம் பென்-இல் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி … Read more

அவசரநிலை சட்டம் ரத்து – கனடா பிரதமர் அறிவிப்பு

ஒட்டாவா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லாரி  டிரைவர்கள் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.    … Read more

மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி இந்தியாவை பாராட்டிய பில் கேட்ஸ்

வாஷிங்டன்:உலக நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய நிறுவனங்களை, ‘மைக்ரோசாப்ட்’ இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டி உள்ளார்.சுகாதாரம் தொடர்பான இந்திய – அமெரிக்க கூட்டு நடவடிக்கை வளர்ச்சிக்காக, நம் துாதரகம் ஏற்பாடு செய்த, ‘ஆன்லைன்’ கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ‘மைக்ரோசாப்ட்’ இணை நிறுவனருமான பில் கேட்ஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள், கடந்த ஆண்டு 15 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை, 100க்கும் … Read more