ரஷியாவுடனான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிருப்தி

பெலாரஸ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் நேற்று சென்றனர். ரஷியாவின் சார்பில் அதிபர் புதினின் உதவியாளரான விளாடிமிர் மெடின்ஸ்கி … Read more

இந்தியாவை சீண்டும் சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு| Dinamalar

வாஷிங்டன்:’ஒவ்வொரு விஷயத்திலும் இந்தியாவை சீண்டுவதே சீனாவின் வேலையாக உள்ளது’ என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 2020ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து எல்லையில் இரு தரப்பிலும் இருந்து படைகள் குவிக்கப்பட்டன.பின் இந்தியா – சீனா இடையே நடந்த பல கட்ட பேச்சை அடுத்து லடாக் எல்லையில் நிறுத்தியிருந்த ராணுவத்தில் ஒரு பகுதியை மட்டும் சீனா திரும்பப் பெற்றது. எஞ்சிய ராணுவத்தையும் திரும்பப் பெற பேச்சு நடந்து … Read more

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. பொதுச்சபை வாக்கெடுப்பையும் புறக்கணித்தது இந்தியா

நியூயார்க்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து இத்துடன் மூன்றாவது முறையாக ஐ.நா. வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதனைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்தியா, சீனா, யுஏஇ வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தோற்கடித்தது. அதேபோல், ஐ.நா. பொதுச் … Read more

சரணடைந்த ரஷ்ய வீரருக்கு கேக் வழங்கி உபசரித்த உக்ரைனியர்கள் <!– சரணடைந்த ரஷ்ய வீரருக்கு கேக் வழங்கி உபசரித்த உக்ரைனியர்கள் –>

உக்ரைனியர்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரருக்கு அவர்கள் கேக் வழங்கும் காணொளி இணையத்தில் வைரல் ஆனது. உக்ரைனின் நோவி பக் நகரில், பாதையை தவறவிட்ட ரஷ்ய வீரர் ஒருவர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தார். அவருக்கு கேக் மற்றும் பானங்களை கொடுத்து உக்ரைனியர்கள் உபசரித்தனர். பின்னர் அங்கிருந்த பெண்மனி ஒருவரின் அலைபேசி மூலம் ரஷ்யாவில் உள்ள தனது தாயாரிடம் அவர் கண்ணீர் மலக உரையாடினார். ரஷ்ய வீரர்கள் பழைய வரைப்படங்களை பயன்படுத்துவதால் பாதை மாறி சென்று விடுவதாக … Read more

மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் வெராகுரூஸ் பகுதியில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 113 கிலோமீட்டர் ஆழம் கொண்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்…உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்படும் சீனா?

'உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் திட்டம்' – 2ம் சுற்று பேச்சுக்கு இடையே புதினின் இலக்கு குறித்து பிரான்ஸ் தகவல்

கீவ்: பெலாரஸ்-போலந்து எல்லையில் உக்ரைன் – ரஷ்யா இடையே இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கியுள்ளது. இதனிடையே, புதினின் நடவடிக்கை குறித்து புதிய தகவலை பிரான்ஸ் அதிபரின் உதவியாளர் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. துறைமுக நகரான கெர்னாஸ்கைக் கைப்பற்றியது. பெரும்பான்மையான கார்கிவ் பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் … Read more

அமெரிக்காவிற்கு ராக்கெட் எஞ்சின் வழங்கப்படுவது நிறுத்தம் – ரஷ்யா <!– அமெரிக்காவிற்கு ராக்கெட் எஞ்சின் வழங்கப்படுவது நிறுத்தம் … –>

அமெரிக்காவிற்கு ராக்கெட் எஞ்சின் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவித்த ரஷ்யா, அவர்கள் இனி துடைப்பம் போன்றவற்றில் பறந்து செல்லட்டும் என கேலி செய்துள்ளது. உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது அதேபோல், அமெரிக்காவுக்கு இனி ராக்கெட் இஞ்சின்களை வழங்குவதில்லை எனவும் ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இது குறித்து பேசிய ரஷ்ய … Read more

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்துவர 130 பேருந்துகள் தயார்- ரஷியா தகவல்

உக்ரைன் மீதான ரஷியா தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே குண்டு வெடிப்பு, ஏவுகணை உள்ளிட்ட தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருவதால் அங்கு வசிக்கும் உள் மற்றும் பிற நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். மேலும், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், போரினால் உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரை … Read more

ரஷ்யர்களுக்கு எதிராக உக்ரைன் புதிய சட்டம்| Dinamalar

மாஸ்கோ:உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிராக ரஷ்யர்கள் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில்உக்ரைனில் ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. போர் வேண்டாம் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த 8 நாட்களாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்ய தரப்பில் சுமார் 800க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி விட்டு ரஷ்ய படைகள் … Read more