வெடி விபத்தில் 59 பேர் பலி| Dinamalar

உகாடோவுகோ:புர்கினா பாசோவில், தங்க சுரங்கம் அருகே ரசாயன பொருட்கள் வெடித்த விபத்தில், 59 பேர் பலியாயினர்.மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், பாம்ப்லோரா கிராமம் அருகே தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இதன் அருகே, தங்க சுத்திகரிப்புக்கான ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.இந்த ரசாயன பொருட்கள் நேற்று முன்தினம் திடீரென வெடித்து சிதறின. இதில் அப்பகுதியில் இருந்த 59 பேர் பரிதாபமாக பலியாயினர். காயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.வெடிவிபத்தால் பலியானோர் உடல்கள், … Read more

Russia-Ukraine Crisis: அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,  ஆயுத பிரயோகம் ஏதும் இல்லாமல் உக்ரைனை மூன்றாகப் பிரித்துள்ளார். உக்ரைனின் இரு கிழக்கு மாகாண பகுதிகளையும் சுதந்திர நாடுகளாக விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். இந்தப் பகுதிகளில் உக்ரைனின் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாதப் பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதிகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் படைகளை நிறுத்திய ரஷ்யா: பாயும் பொருளாதாரத் தடைகள்

மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் படைகளை நிறுத்தியுள்ளது ரஷ்யா. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்காவின் மாக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் தெற்கு பெலாரஸில் உள்ள மோசிர் விமான தளத்தில் படைகளின் முகாமும், 100 வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான தளம் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ.-க்கும் குறைவான தொலைவிலேயே இருக்கிறது. இதுதவிர மேற்கு ரஷ்யாவின் போச்செப் பகுதியில் கூடுதல் … Read more

ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணிகள் முழுமையாக முடிந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படாத நிலையில் அதற்கான ஒப்புதலை … Read more

‘வெற்று பேச்சுகளால் ரஷ்யா எங்களை ஏமாற்ற முடியாது’: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: கிழக்கு உக்ரைனின் இரு மாகாணங்களையும் தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ரஷ்ய நடவடிக்கையால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளன.  மாஸ்கோவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. ரஷ்ய வங்கிகள் மற்றும் தன்னலக்குழுக்களுக்கு எதிராக கடுமையான நிதித் தடைகளை விதிக்க அமெரிக்கா உத்தரவிடுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாயன்று அறிவித்தார். ‘திருந்தாவிட்டால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்’ உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ளது என்று ஜோ … Read more

ராணுவ நடவடிக்கை எடுக்க புதினுக்கு அதிகாரம் அளித்த நாடாளுமன்றம்.. நிதிநெருக்கடி ஏற்படுத்தும் மேலை நாடுகள் <!– ராணுவ நடவடிக்கை எடுக்க புதினுக்கு அதிகாரம் அளித்த நாடாளும… –>

ரஷ்யாவுக்கு வெளியே ராணுவ நடவடிக்கை எடுக்க அந்நாட்டு நாடாளுமன்றம் புதினுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் எந்த நேரத்திலும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யா படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கக் காரணமாக இருப்பது உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் நேட்டோ படையில் இணையப் போவதாக வந்த தகவல்கள். உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சிக்கலாம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனின் ஜனநாயகத்தை நசுக்கவும் இறையாண்மையை அச்சுறுத்தவும் ரஷ்யா முயற்சிப்பதாக … Read more

நெதர்லாந்தில் பொதுமக்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்த மர்ம நபர்

நெதர்லாந்து: நெதர்லாந்து நாட்டு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மத்திய பகுதியில் உள்ள ஒரு கடையில் மர்ம நபர் துப்பாக்கியுடன் திடீரென புகுந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கடையில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். ஆனால் சிலரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மர்ம நபர் பிடித்து வைத்த பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே இருக்கும்படியும், … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை| Dinamalar

மாஸ்கோ : உக்ரைனின் கிழக்கே இரண்டு மாகாணங்களை, தன்னாட்சி பகுதியாக அங்கீகரிப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதையடுத்து ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. ரஷ்யாவின் கிழக்கே உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களைச் சேர்ந்த பிரிவினைவாதிகள், உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளித்து ரஷ்ய அதிபர் புடின், நேற்று புதிய அறி … Read more

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் – ‘சுவிஸ் ரகசியங்கள்’ ஆவணத்தில் தகவல்

சுவிட்ஸர்லாந்தில் உள்ள கிரிடிட் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி இருந்த உலகளாவிய அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள், போதை கடத்தல் தலைவர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெனரல்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் முஜாஹிதீன் அமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக கருதப்படுபவர். கிரிடிட் சுவிஸ் வங்கி மூலம் அவர் முஜாஹிதீன் … Read more

சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.! <!– சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் எரியும் தீயை அணைக்க… –>

போர்ச்சுகல், மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஷோர்ஸ் தீவில் ஒரு வாரமாக சொகுசு கார்களை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வோல்ஸ்வேகன் குழுமத்தின் போர்ஷே, அவுடி, பென்ட்லி உள்பட சுமார் 4 ஆயிரம் கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் திடீரென தீ பற்றியது. கப்பலில் இருந்த 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் முயற்சி கடந்த ஒரு வாரமாக நடைபெறுகிறது. மின்சார கார்களின் … Read more