மோடியுடன் விவாதிக்க இம்ரான் கான் விருப்பம்| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு முடிவு காண பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்க விரும்புவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இந்தியா – பாக். இடையே கடந்த 75 ஆண்டுகளாக உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில் ‘பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதுடன் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால் மட்டுமே பாக்.குடன் பேச்சு நடத்த முடியும்’ என பலமுறை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘டிவி’ பேட்டி ஒன்றில் … Read more

2 மாகாணங்களுக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கியது ரஷ்யா: உக்ரைனில் போர் பதற்றம் அதிகரிப்பு

மாஸ்கோ: உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இதனால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ளன. இதில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்தப் பின்னணியில் உக்ரைனின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. இதற்குபதிலடியாக, உக்ரைனுக்கு … Read more

கொரோனா கட்டுப்பாடுகளால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரைவில் சீனா திரும்ப நடவடிக்கை

பீஜிங் : சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து அங்கு பயின்று வந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு தாயகம் திரும்பினர். இந்த மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்விக்கூடங்களுக்கு செல்வதற்கு சீனா இதுவரை விசா அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மட்டங்களிலும் இந்தியா தனது கவலையை வெளியிட்டபோதும், தொடர்ந்து மவுனம் காத்து வந்த சீனா தற்போது முதல் முறையாக நேர்மறையான … Read more

ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம் – ஜோ பைடன் <!– ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனு… –>

ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உக்ரைனுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தரப்படும் என்றும் நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு நிலமும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ரஷ்யாவின் 2 நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தார். மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்த ஜோ பைடன், மேற்கத்திய நாடுகளில் … Read more

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன் : இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாகவும், இது தொடர்பான செயல்முறைகள் இந்த வார இறுதியில் தொடங்குவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:- ஏப்ரல் 1-ந் தேதி முதல் குளிர்காலம் முடிந்து வைரஸ் பரவல் குறைவாகிறபோது, பொதுமக்களுக்கு இலவச, அறிகுறி மற்றும் அறிகுறியற்ற பரிசோதனையை நாங்கள் நிறுத்துவோம். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை … Read more

21 இந்திய மீனவர்கள் விடுவிப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.நம் அண்டை நாடான இலங்கையின் சர்வதேச கடல் பகுதியில் பருத்தி துறை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜன. 31ல் கைது செய்தனர்.அவர்களின் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பிப். 21 வரை அவர்களை சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் பருத்தி துறை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் … Read more

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியுடனான சந்திப்பு ரத்து – ஆன்டனி பிளிங்கன் அறிவிப்பு

வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, உக்ரைன் எல்லையில் தனது படைகளை குறைப்பதாக கூறிய ரஷ்யா, தனது படைகளை தொடர்ந்து எல்லையில் நிலைநிறுத்தியது. உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷ்யா படையெடுக்கலாம் என அமெரிக்கா … Read more

ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம். ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன. உக்ரைன் பற்றிய ரஷ்ய ஜனாதிபதி புதினின் கூற்றுகளால் நாங்கள் யாரும் ஏமாற மாட்டோம். புதின் தொடர்ந்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும். உக்ரைனுக்கு அதிகளவில் … Read more