நிறைய குழந்தைகள் பெற போப் பிரான்சிஸ் அறிவுரை| Dinamalar

வாட்டிகன் சிட்டி:”வாட்டிகனில் வாழும் தம்பதியினர், செல்லப் பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டு, நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்,” என, போப் பிரான்சிஸ் அறிவுறுத்தி உள்ளார். இத்தாலியில் இருக்கும் தன்னாட்சி உடைய நாடான வாட்டிகனில், மகப்பேறு விடுப்பு கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, வாட்டிகன் சிட்டியில் நேற்று முன்தினம் போப் பிரான்சிஸ் வெளியிட்டார். அதன் விபரம்:வாட்டிகனில், பெண்களுக்கு உள்ள மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களாக உள்ளது. இந்த ஆறு மாதங்களுக்கும் முழு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மாற்றப்பட்ட கொள்கையின்படி, … Read more

ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம் – வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்த இந்தியா

ஜெனீவா, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த சிறப்புக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தீர்மானம் கொண்டு … Read more

குண்டு வீசுவதை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள்: ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

கீவ்: உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். சிஎன்என், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூட்டாக இணைந்து அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஒரு பேட்டி எடுத்துள்ளன. பேட்டிக்கான இடம், ராணுவக் கட்டுப்பாட்டில் பலத்த பாதுகாப்புடன் இருந்துள்ளது. அதிபர் ஜெலன்ஸ்கி தாடியை மழிக்காத முகத்துடன், ஒரு டிஷர்ட், பேன்ட், பூட் என்று காட்சியளித்துள்ளார். அந்தப் பேட்டியின்போது அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி, … Read more

ரஷ்ய விமானப்படை ஆக்ஷனில் "மிஸ்ஸிங்".. அடக்கி வாசிக்கும் புடின்.. வேற லெவல் ஸ்கெட்ச்!

உக்ரைன் போரில் ஒரு புரியாத புதிராக தனது விமானப்படையை அதிக அளவில் பயன்படுத்தாமல் ஓரம் கட்டி வைத்துள்ளார் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின். புடின், ஏன் விமானப்படையை பயன்படுத்தவில்லை. அதைப் பயன்படுத்தியிருந்தால் இன்னேரம் உக்ரைன் மொத்தமாக வீழ்ந்திருக்குமே.. விமானப்படையை மட்டும் சைலன்ட்டாக புடின் வைத்திருக்க என்ன காரணம் என்று அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டுள்ளன. ஆனால் விமானப்படையை புடின் ஓரம் கட்டி வைத்திருக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் விமானப்படையை பயன்படுத்தாமல் வைத்திருப்பது … Read more

உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய விளையாட்டு வீரர்கள் 3 பேர் பலி <!– உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய விளையாட்டு வீரர்கள் 3 பேர்… –>

உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய விளையாட்டு வீரர்கள் மூவர் ரஷ்யப் படையினருக்கு எதிரான போரில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தில் டாங்க் கமாண்டராகப் பணியாற்றிய விட்டலி சபிலோ, கால்பந்தாட்ட அணியில் கோல் கீப்பர் ஆவார். இவர் வெள்ளியன்று தலைநகரைக் காக்கும் போரில் உயிரிழந்தார். மற்றொரு அணியில் விளையாடிய திமித்ரோ மார்ட்டினென்கோவும் ராணுவத்தில் பணியாற்றியவர். அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்ய ராணுவம் குண்டு வீசித் தாக்கியதில் மார்ட்டினென்கோவும் அவர் தாயும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிரப் பனிச்சறுக்கு வீரரான மாலிசேவும் ரஷ்யாவுக்கு … Read more

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது – ரஷியா அதிரடி குற்றச்சாட்டு

கார்கிவ் : உக்ரைன் – ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.  கார்கிவ்வில் தங்கியுள்ள இந்தியர்கள்,  பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டிருந்தது.  இதற்காக உக்ரைன் நாட்டு நேரப்படி நேற்று மாலை 6 மணிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  … Read more

உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாவதற்கு சீனா வருத்தம்| Dinamalar

பீஜிங்:உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில், அப்பாவி மக்கள் பலியாவதற்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரனை மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், நேற்று ஏழாம் நாளாக தொடர்ந்தது.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாவது கவலையளிப்பதாக, சீன அமைச்சர் அவரிடம் தெரிவித்தார்.எனினும், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை விமர்சிக்காத சீன … Read more

உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேறவேண்டும் – ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், உக்ரைன் மீது … Read more

உக்ரைனின் கெர்சான் நகரையும் கைப்பற்றிவிட்டோம்: ரஷ்யா தகவல்

கீவ்: உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்சான் நகரையும் ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் தெற்குப் பகுதியின் நகரான கெர்சான் இப்போது ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்துள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து கெர்சானில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், கெர்சானில் தொடர்ந்து ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை … Read more

பழிக்குப்பழி: 6,000 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்!

ரஷ்யாவைச் சேர்ந்த 6,000 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதை அடுத்து அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏழு நாட்களாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் … Read more