ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் – இந்தியா பேசியது என்ன?

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில், இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது. ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு நாடுகளின் … Read more

சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்

ரியாத்: ஏமன் நாட்டில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளது. இப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதிஅரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் உள்ள விமான நிலையம், எண்ணை நிறுவ னத்தை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 பேர் பலியானார்கள். … Read more

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்: இம்ரான் ஆலோசகர் விருப்பம்| Dinamalar

லாகூர் : இந்தியா உடனான வர்த்தக உறவுகளை மீண்டும் துவக்க பாக். பிரதமர் இம்ரான் கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு – காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நம் அண்டை … Read more

பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியது டொனால்ட் ட்ரம்ப் ஆப்!

கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்து, ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில சர்ச்சைக்குரிய அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சில சமூக ஊடங்கள் அவரது கணக்கிற்கு தடை விதித்தது.  இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு போட்டியாக செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவரது டிரம்ப் மீடியா & டெக்னாலஜி க்ரூப் உடன் இணைந்து … Read more

2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு – ஆஸ்திரேலியா <!– 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்… –>

முழுவதுமான கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு ஆஸ்திரேலியா அனுமதி வழங்கி உள்ளது. முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் ஆஸ்திரேலியா வரலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள், பணியாளர்கள், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் இதற்கு முன்னர் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.  … Read more

உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடை – அமெரிக்கா நடவடிக்கை

நியூயார்க்: ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகரித்தார்.  இது அமைதி பேச்சுவார்த்தையை முறியடிக்கும் நடவடிக்கை என்று உக்ரைன் அதிபர்  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார்.  புதின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும் உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடைகளை அவர் விதித்துள்ளது. புதிய முதலீடு, … Read more

பாக்.,கில் அவதுாறாக பேசினால் சிறை| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு எதிராக அவதுாறு கூறும் நபர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஊடகங்களை கட்டுப்படுத்த இம்ரான் கான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சமீபத்தில் பாக். தகவல் தொடர்பு துறை அமைச்சர் முராத் சயீது குறித்து அவதுாறு கூறிய பிரபல பத்திரிகையாளர் மோசின் பைக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இங்கு ஊடகங்களை ஒழுங்குபடுத்தவும் அவதுாறு பேசுவோரை ஒடுக்கவும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. … Read more

உக்ரைன் விவகாரம் – ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்

ரஷ்யா, உக்ரைன்  இடையிலான போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் இனி டுனெட்ஸ், லுகன்ஸ் நகரங்கள் பிரச்சினைக்குரிய பகுதியாக இல்லாமல் தனி நகரங்களாக அழைக்கப்பட்டு, அதன் தலைவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யா பயணம்| Dinamalar

இஸ்லாமாபாத்: பாக். பிரதமர் இம்ரான் கான் நாளை (பிப்.,23) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. பாக். வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பாக். பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவின் அழைப்பை ஏற்று 23, 24 தேதிகளில் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க இருக்கும் பிரதமர் இம்ரான் கான் இருதரப்பு நலன் சார்ந்த முக்கிய … Read more

உக்ரைன் குண்டுவீச்சில் எல்லை கட்டமைப்புகள் சேதம்: ரஷ்ய பாதுகாப்புத் துறை குற்றச்சாட்டு

உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலில் தங்களது எல்லைப் பகுதிகட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம்காட்டுகிறது. இதனால், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. உக்ரைன் தரப்பிலும் படைகள் குவிக்கப்படுகின்றன. இதனால், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், … Read more