லண்டன் வீட்டை விஜய் மல்லையா காலி செய்ய வேண்டும்: யுபிஎஸ் வங்கிக் கடன் பாக்கி விவகாரத்தில் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: யுபிஎஸ் வங்கியில் பெற்ற கடன்தொகையை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் லண்டனில் உள்ள வீட்டை காலி செய்யுமாறு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள ரீஜன்ட்பூங்காவுக்கு எதிரில் அமைந்துள்ளது 18/19 என்ற எண்ணில் உள்ள கார்ன்வால் டெரஸ் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு. இதில் விஜய் மல்லையாவின் 95 வயதான தாய் லலிதா வசித்து வருகிறார். விஜய் மல்லையாவின் ரோஸ் கேபிடல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கியில் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை … Read more

இந்திய -சீன உறவு: அமைச்சரின் கருத்தால் சர்வதேச அரங்கில் பரபரப்பு!

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் முனிச் பாதுகாப்பு மாநாடு குழு விவாதத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அதன் பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 1975 முதல் இந்திய -சீன எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் எதுவும் இல்லை. 45 ஆண்டுகளாக நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. ராணுவப் படைகளை எல்லைக்கு கொண்டு வரக்கூடாது என்று சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை சீனா அண்மை காலமாக மீறி … Read more

ஜப்பானில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி <!– ஜப்பானில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி –>

மார்ச் 1ஆம் தேதி முதல் ஜப்பானில் வெளிநாட்டினர் வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை தவிர்த்து வணிக மற்றும் வியாபார நோக்கம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு வெளிநாட்டினர் ஜப்பான் வரலாம் என பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் அரசு அனுமதி தரும் வரை தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வேகமாக பரவியது. அங்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பரவியதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனிமைப்படுத்துதல் விதிகள் போன்ற மீதமுள்ள கொரோனா … Read more

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42.37 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 37 லட்சத்து 18 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 … Read more

Unique experiment: சூப்பர் ஐடியா! நீர் சேமிப்பு + மின்சார உற்பத்தி = சோலார் பேனல்கள்

Unique experiment: கால்வாய்களில் சோலார் பேனல்களை வைத்து, 63 பில்லியன் கேலன் தண்ணீர் சேமிப்பதுடன், 13 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூப்பர் திட்டம்… 4,000 மைல்கள் (6437 கிமீ) அளவிற்கு கால்வாய்களின் இரண்டு பக்கங்களிலும் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு இந்த அற்புதமான இயற்கையை மேம்படுத்தி, நவீன வசதிகளை பெறும் திட்டம் கலிபோர்னியாவில் செயல்படுத்தப்படுகிறது. நெவாடா மலைகள் மற்றும் கலிபோர்னியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களின் இருபுறமும் சூரியசக்தி பேனல்கள் … Read more

தலைநகரை மாற்றும் இந்தோனேசியா: காரணம் என்ன? 

ஜகர்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனப் பெயர் வைக்கவும் இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தோனேசியத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்த கோரிக்கை தற்போது நிறைவேறவுள்ளது. நாடாளுமன்றத்தில் தலைநகரை மாற்ற நாடாளுமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய தலைநகரை மேம்படுத்துவதற்கான பணியை இந்தோனேசியா தொடர்ந்துள்ளது. தேசிய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முகமையின் தரவுகளின்படி, புதிய தலைநகருக்கான மொத்த … Read more

உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு உக்ரைன் வீரர்கள் பலி.! <!– உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுக… –>

உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு உக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர். ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்தனர். டோனேடெஸ்க் மாகாணத்தில் உள்ள ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாத அரசின் தலைவரான டெனிஸ் புஷிலின் முழு அளவில் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். உக்ரைன் எல்லையருகே அந்நாட்டு ராணுவத்திற்கும் பிரிவினைவாத படைகளுக்கும் இடையே  வன்முறைத் தாக்குதல்களும் மோதல்களும் அதிகரித்துவருகிறது. இதனைப் பயன்படுத்தி ரஷ்யா உக்ரைன் … Read more

எல்லையின் நிலையே சீனாவுடனான உறவை தீர்மானிக்கும் – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி கருத்து

முனிச்: ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாடு குழு விவாதத்தில்  இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  பேசியதாவது: பிரச்சனை என்னவென்றால், 45 ஆண்டுகளாக நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் எதுவும் இல்லை. நாங்கள் ராணுவப் படைகளை கொண்டு வரக்கூடாது என்று சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். நாங்கள் அதை எல்லை என்று அழைக்கிறோம். ஆனால் அது … Read more