பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கிய கப்பல் <!– பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுட… –>

போர்ச்சுகல் மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் சொகுசு கார்களை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.  தீயை அணைக்கும் முயற்சியில் இழுவை படகுகள் களமிறக்கப்பட்டன. கப்பலில் இருந்த 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தது. ஆனால், கப்பலில் தீ கட்டுக்கடங்காமல் … Read more

முழுமையான படை பலத்துடன் நோட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்கப்படும்: ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம். உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புதின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது’’ என்றார். முன்னதாக,  சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு … Read more

'மிகவும் வருந்துகிறோம்’ – உக்ரைனிடம் வருத்தம் தெரிவித்த சீனா

பிஜீங், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் உச்சகட்டம்: இந்திய மாணவர்களுடன் 7 மீட்பு விமானங்கள் இன்று டெல்லி வருகை

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளிடையே 6-வது நாளாக நேற்று கடும் சண்டை நடைபெற்றது. உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 7 மீட்பு விமானங்கள் இந்திய மாணவ, மாணவியருடன் இன்று டெல்லி வருகின்றன. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளிடையே நேற்று 6-வது நாளாக கடும் சண்டை நீடித்தது. பெலாரஸின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் … Read more

துள்ளிக் குதிக்கும் குழந்தைகள்.. கவலைகளற்ற நிம்மதி.. ஹங்கேரியில் அமைதி காணும் உக்ரைன்!

உக்ரைனைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அண்டை நாடான ஹங்கேரிக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கணவன், சகோதரன், தந்தை என ஆண்களை மட்டும் வீட்டில் விட்டு விட்டு பெண்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். உக்ரைனில் போர்ப் பதட்டம் சற்றும் தணியவில்லை. காரணம், போரை நிறுத்தும் எண்ணத்தில் ரஷ்யா இல்லை. தொடர்ந்து தாக்கி வருகிறது. தலைநகர் கீவ் நகரை கைப்பற்றும் முயற்சியை ரஷ்யா சற்று தாமதித்து வருகிறது. இருப்பினும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போர் நிற்பதாக இல்லை. தொடர்ந்து வேகம் காட்டி … Read more

ரஷ்யா படைகள் முன்னேறுவதை தடுக்க பாலம் தகர்ப்பு: ஆற்றை கடக்க முடியாமல் உக்ரைன் மக்கள் தவிப்பு <!– ரஷ்யா படைகள் முன்னேறுவதை தடுக்க பாலம் தகர்ப்பு: ஆற்றை கடக… –>

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஆர்ப்பரித்து ஒடும் தண்ணீருக்கு மத்தியில் சேதமடைந்த பாலத்தை ஆபத்தான முறையில் மக்கள் கடந்து செல்கின்றனர். கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறுவதை தடுக்க இர்பின் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை உக்ரைன் வீரர்கள் வெடி வைத்து தகர்த்தனர். உருக்குலைந்து காணப்படும் பாலத்தில் நடக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பாதி உடைந்து காணப்படும் பாலத்தின் கைபிடியை பிடித்தவாறு ஆற்று நீருக்கு நடுவே மெதுவாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர்  நடந்து செல்கின்றனர்.  … Read more

ரஷிய படை தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலி

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 6-வது நாள் ஆகிறது. தொடர்ந்து குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி தாக்குதலில் ரஷிய படைகள் ஈடுபட்டு வருகின்றன. ரஷிய படை நடத்திய அதிரடி தாக்குதலில் 70 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதை ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகர் கீவ்வுக்கும்- கார்கிவ்வுக்கும் இடையே உள்ள ‘வொக்டியார்கா’ நகரில் உக்ரைன் ராணுவத் தளம் உள்ளது. இதன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளனர். … Read more

உக்ரைன் போர்… மிக சக்தி வாய்ந்த வேக்யூம் குண்டு வீசிய ரஷியா..!

கீவ், ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷிய படைகள் குண்டு … Read more

எந்த முன்னேற்றமும் இல்லாத ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை; உயிர் பலி 352 ஆக அதிகரிப்பு

கீவ்: பெலாரஸ் எல்லைப் பகுதியில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் … Read more