ஏமன் சிறைச்சாலை மீதான சவுதியின் தாக்குதல் 100 பேர் பலி: ஐ.நா கண்டனம்

ஏமனின் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏமன் செய்தித் தொடர்பாளர் பஷிர் உமர் கூறும்போது, “ஏமனின் சாடா நகரில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் இதுவரை 100 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். சிறைச் சாலைகளில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் காட்சிகளை காண முடிகிறது” … Read more

பெருவெடிப்பை நோக்கிச் செல்கின்றனவா ஊடகங்கள்?!

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகான உலகத்தை ஆட்டிப் படைக்கவிருப்பது நம்பிக்கையின்மை என்ற ஒற்றை வார்த்தைதான். வியாபாரம், சமூக உறவு, அரசு செயல்பாடு, ஊடகங்கள் என்று உலக இயக்கத்திற்கான ஒவ்வொன்றின் மீதும் நம்பிக்கை அதிகரிப்பதும் குறைவதுமாக இக்காலம் இருந்துவருகிறது. இதுவரையிலான போக்கை முற்றிலும் மாற்றக்கூடியதாகவும், புதிய வரவுகளைப் பெருமளவில் சார்ந்திருக்கக்கூடியதாகவும் உள்ளது. இது தொடர்பான அறிகுறிகளை முன்கூட்டியே உணர்த்துகின்றன ராய்ட்டர்ஸ், ஈடில்மேன் போன்ற ஊடக நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு அறிக்கைகள். அவற்றில், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஊடகங்களின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்துவருவதாகச் … Read more

பெண்களுக்கான நீச்சல் போட்டி: ஆதிக்கம் செலுத்திய மூன்றாம் பாலினத்தவர்கள்

வாஷிங்டன், அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் 2022 இவி லீக் பெண்கள் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இந்நிலையில், பெண்களுக்கான இந்த நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவர்களான (திருநங்கைகள்) ஐசக் ஹிங்க் மற்றும் லியா தாமஸ் ஆகிய இருவரும் பெண்களுக்கான இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆணாக பிறந்த லியா தாமஸ் 2019-ம் ஆண்டு பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். … Read more

ஜப்பானில் நிலநடுக்கம்: கட்டிடங்கள், சாலைகள் சேதம்: 13 காயம்

ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது. இதுகுறித்து ஜப்பான் புவியியல் மையம் தரப்பில், “ ஜப்பானில் இன்று (சனிக்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒய்டா, மியாசாகி ஆகிய பகுதிகளில் நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை” என்று … Read more

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா போர் தொடுக்கும் – அதிபர் ஜோ பைடன் உறுதி தகவல் <!– உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா போர் தொடுக்கும் – அதிபர் ஜோ பை… –>

உக்ரைன் மீது ரஷ்யா நிச்சயமாகப் படையெடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா உக்ரைன் இடையிலான மோதல் நிலவரம் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதின் முடிவெடுத்து விட்டதாகக் கூறினார். கடந்த மாதம் புதின் தமது மனதுக்குள் என்ன நினைக்கிறார் என்றே புரியவில்லை என்று ஜோ பைடன் கூறியிருந்தார்.ரஷ்யாவின் உயர் அதிகாரிகளுக்கும் புதின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்று புரியாமல் குழப்பம் நீடிப்பதாக அவர் தெரிவித்த நிலையில் இப்போது, புதின் … Read more

உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் – அமெரிக்க அதிபர் தகவல்

ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும் போது, ‘உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் முடிவு செய்துவிட்டார் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜோபைடன் நிருபர்களுக்கு பேட்டி … Read more

உக்ரைன் தலைநகரை ரஷியா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்- ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் ரஷியா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உக்ரைன் விவகாரத்தில் ரஷியா, உக்ரைன் மீது படையெடுப்பதற்காக  தவறான தகவல்களை அளித்துள்ளது. மேலும் தவறான தகவல்கள் ரஷ்ய மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.   ரஷியாவின் 40 சதவீத ராணுவ படைகள் தாக்குதல் நடத்த ஏதுவாக உக்ரைன் எல்லையில் முகாமிட்டுள்ளன. கடந்த வாரம் சில படைகளை ரஷியா பின் வாங்கியிருந்தாலும் இப்போதும் அங்கு 1,50,000 படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. … Read more

அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்?- ஜோ பைடன் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்: ரஷ்யப் படைகள் வரும் நாட்களில் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், எந்தநேரத்திலும் போர் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை … Read more

சுவிட்சர்லாந்தில் ஏறக்குறைய கொரோனா கட்டுப்பாடுகள் வாபஸ் <!– சுவிட்சர்லாந்தில் ஏறக்குறைய கொரோனா கட்டுப்பாடுகள் வாபஸ் –>

சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் உள்ளிட்ட ஏறக்குறைய அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. உணவகங்கள், மதுக்கூடங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகளில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்ற முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும்போது மட்டும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட  வெளிநாட்டு பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் தாக்குதல் – போர் பதற்றம் தீவிரம் அடைகிறது

கீவ்: ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது. எல்லையில் ரஷியா ஒரு 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. இவ்விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பஸ் மாகாணத்தில் ஒரு … Read more