பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டே உக்ரைன் அதிபருக்கு புதின் இழைத்த துரோகம்!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்த்து தெரிவித்த ரஷியா, கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது உக்கிரமாக தொடர் தாக்கல் நடத்தி வருகிறது. குண்டுமழை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதல் நடத்திவரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை சின்னாபின்னம் ஆக்கி வருகின்றன. இன்னும் ஒரு சில நாளில் ரஷிய படைகள் கீவ்வை கைப்பற்றிவிடும் என்று சொல்லும் அளவுக்கு வேகமாக முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் … Read more

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ள 3 நாடுகள்.! <!– உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ள 3 நாடுகள்.! –>

பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா ஆகிய நாடுகள் தங்களுக்கு 70 போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளன. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மூன்று நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. பல்கேரியா 30 விமானங்களையும், போலந்து 28 விமானங்களையும், சுலோவாக்கியா 12 விமானங்களையும் வழங்குகின்றன. … Read more

எனக்கு பயமாக இருக்கிறது..! உக்ரைனில் கொல்லப்படுவதற்கு முன், ரஷிய வீரர் அம்மாவிற்கு அனுப்பிய மெசேஜ்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷிய வீரர் ஒருவர் தனது தாய்க்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.   இதுகுறித்து ஐ.நாவுக்கான உக்ரைன் … Read more

சிவாலயத்திற்கு உரிமை கொண்டாடிய நாடுகள்! சர்வதேச நீதிமன்றத்தில் வென்றது யார்?

புதுடெல்லி: இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி நாள் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகள் கொண்டாடுகின்றன.  பல நாடுகளில் சிவபெருமானின் புராதனமான கோயில்கள் உள்ளன. ஒரு சிவன் கோவிலுக்கு (Lord Shiva Temple) இரு நாடுகள் உரிமை கொண்டாடி, அதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. இறுதியில்  எந்த நாட்டுக்கு அந்த முக்கியமான சிவன் அருள்பாலித்தார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். இதிலிருந்து புரியும் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிவ வழிபாடு என்பது … Read more

குண்டு வீச்சில் இந்திய மாணவர் பலி: கார்கிவ் நகரில் ரஷ்யா கடும் தாக்குதல்

கீவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் கடும் குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார். இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம் என்றும் இந்திய மாணவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. போர் பீதியால் உக்ரைனில் இருந்து … Read more

BREAKING: உருக்குலையும் உக்ரைன் – ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில், ரஷ்யப் படைகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டு மீது ரஷ்யப் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. கடந்த ஆறு நாட்களாக உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில், உக்ரைன் மட்டுமல்லாமல், உலகமே பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது. உக்ரைன் நாட்டு தலைநகர் கீவ், கார்கிவ் … Read more

உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி : கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் <!– உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி : கர்நாட… –>

கார்கிவ் நகரில் தாக்குதல் – இந்திய மாணவர் உயிரிழப்பு உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் இன்று காலை வான்வழி தாக்குதல் நடத்தின கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் எனத் தகவல் விடுதியில் இருந்து ரயில் நிலையம் சென்றபோது விபரீதம் இன்று காலை நடைபெற்ற வான் வழித் தாக்குதலில் பலி உக்ரைனின் 2ஆவது … Read more

கட்டிடங்களின் மொட்டை மாடியில் அடையாளங்களிட்டு ரஷிய ராணுவம் தாக்குதல்?

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று ரஷியா ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். கெர்சன், கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது. உக்ரைனை நோக்கி 64 கி.மீட்டர் தூரத்திற்கு ரஷிய ராணுவ வாகனம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் தாக்குதல் … Read more

ஆஸி.,யில் கனமழை கொட்டுது; வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி| Dinamalar

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவில் பெய்துவரும் கனமழையால், கிழக்கு கடற்கரை பகுதியான பிரிஸ்பேன் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில், கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. ஏராளமான கார்கள் வெள்ளத்தில் சிக்கி மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து, 50 வயது … Read more

வேகமெடுக்கும் உக்ரைன் மீட்பு பணி: களமிறங்கும் விமானப்படை?- பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களை விரைவாக அழைத்து வருவதற்காக விமானப்படை விரைவில் களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. … Read more