ரஷ்யா உடன் வர்த்தகம் தொடரும்: சீனா அறிவிப்பு| Dinamalar

பீஜிங் : உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உடனான வழக்கமான வர்த்தகம் தொடரும் என சீனா அறிவித்துள்ளது.இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக தன்னிச்சையாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை சீனா வன்மையாக கண்டிக்கிறது. ரஷ்யா உடன் பரஸ்பர மரியாதையையும் வழக்கமான வர்த்தகத்தையும் … Read more

‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன்

ஜெனிவா: ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்  (UNGA)  அவசரக் கூட்டத்தில், பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. ஐநாவின் 11வது அவசரகால சிறப்பு அமர்வில்  உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ராஜீய நிலையிலான பாதைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று புது தில்லி உறுதியாக நம்புகிறது என்றார். ‘இயன்ற அனைத்தையும் செய்கிறோம்’ டிஎஸ் திருமூர்த்தி உக்ரைனில் … Read more

ஐ.நா. பொதுச்சபையின் அவசரக் கூட்டத்துக்கான வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன்? – இந்தியா விளக்கம்

ஜெனிவா: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை. முன்னதாக, அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபை சார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. வாக்கெடுப்பை புறக்கணிப்பது … Read more

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விருப்பம்!

உக்ரைன் மீது ரஷ்யா 6ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தற்போது, சில உதவிகளை மட்டுமே உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இதனால், தனியாக தாங்கள் போராடி வருவதாக உக்ரைன் … Read more

உக்ரைனில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு <!– உக்ரைனில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு –>

உக்ரைன் மீது ரஷ்யா 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அங்கு உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில்  நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த அங்காடியில் மக்கள் வாங்குவதற்கு தேவையான எந்த உணவுப்பொருளும் இல்லாத நிலை காணப்படுகிறது. மருந்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நீண்டு காணப்படுகிறது. வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக உக்ரைனில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடியே கிடப்பதாக … Read more

உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 5300-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷிய ராணுவத்தின் … Read more

ரஷ்ய செல்வந்தர்களின் சொகுசு கப்பல், கார்களுக்குத் தடை; பிரான்ஸ் அதிரடி உத்தரவு| Dinamalar

பாரிஸ்: உக்ரைன் – ரஷ்ய போரத் தொடர்ந்து ரஷ்ய செல்வந்தர்களின் சொகுசு கப்பல், கார்களுக்குத் தடைவிதித்து பிரான்ஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யா மோதல் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடன் உலக நாடுகள் யாரும் நேரடியாக மோத முடியாத சூழலில் பல்வேறு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ரஷ்யாவுடனான வர்த்தக தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரஷ்ய அரசியல் தலைவர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. கனடா உள்ளிட்ட … Read more

போதும்..! போரால் உயிரிழப்பது பொதுமக்கள் தான் – ஐ.நா.பொதுச்செயலாளர் ரஷியாவிற்கு கண்டனம்

ஜெனீவா, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்பு அவசர 11-வது கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதன்பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷியாவின் தாக்குதல்களை கண்டித்து பேசினார். அவர் பேசியதாவது,  “போதும் – … Read more

உக்ரைனுக்கு ஃபைட்டர் ஜெட் விமானங்களை வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

பெல்ஜியம்: ரஷ்ய தாக்குதலால் தவிக்கும் உக்ரைனுக்கு ஃபைட்டர் ஜெட் விமானங்களை அனுப்ப ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வந்துள்ளன. இதனை ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் பிரிவு தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாங்கள் ஆயுதங்களைத் தாண்டி, ஃபைட்டர் விமானம் வரை உக்ரைனுக்குக் கொடுத்து உதவப் போகிறோம். ஒரு உக்கிரமான போரை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து விதமான ஆயுதங்களையும் உக்ரைனுக்கு அளிக்கவுள்ளோம் என்றார். முன்னதாக உக்ரனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும், … Read more

புடின் புது "ஸ்கெட்ச்".. ராணுவத் தாக்குதல் வேகம் திடீர் குறைப்பு.. உக்ரைன் குழப்பம்!

ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்து வருவதால் ரஷ்யா தனது தாக்குதல் வேகத்தை குறைத்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், அணு ஆயுதங்களை சிறப்பு தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய ராணுவத்துக்கு புடின் உத்தரவிட்டுள்ளதால், அவரது உத்திகளில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா, உக்ரைனைப் பணிய வைக்க வேறு ஸ்கெட்ச் போட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் … Read more