உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நேட்டோவின் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரஷியா கடும் எச்சரிக்கை

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷியாவுக்கு உக்ரைனும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், உயிர்சேதங்களும் அதிகமாக உள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட தகவலின் படி, ரஷிய வீரர்கள் 4,500 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷியா இணங்கி வந்துள்ளது. பல்வேறு நாடுகளின் … Read more

ரஷ்ய தாக்குதல் 5-ம் நாள் | உக்ரைனில் இதுவரை பலி 352 – எதிர்நோக்கப்படும் அமைதிப் பேச்சு; அவசர ஆலோசனைக்கு தயாராகும் ஐ.நா.

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. போர் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி, உக்ரைன் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய இரவு வான்வழித் தாக்குதல் இல்லாத இரவாக உக்ரைனுக்கு அமைந்தது. 4 நாட்களுக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் நிம்மதியுடன் நித்திரை கொள்ள ஏதுவான ஓர் இரவாக அமைந்தது. பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்காக … Read more

உலகில் எந்தப் போர் நடந்தாலும்.. முக்கியக் காரணமான மூலப் புள்ளி.. "அமெரிக்கா"!

ஒன்று யாருடனாவது தான் சண்டையிட வேண்டும் .. அல்லது யாரையாவது சண்டையில் இழுத்து விட வேண்டும்.. சண்டையில்லாத உலகமே இருக்கக் கூடாது.. இதுதான் அமெரிக்காவின் அடிப்படை நோக்கமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு உலகப் போர்களின் போக்கையும், அந்தப் போர்கள் உருவாகக் காரணமாக இருந்தவை குறித்தும் சிந்திக்கத் தோன்றுகிறது. உலகில் எந்த மூலையில் எந்த போர் நடந்தாலும் அதற்கு ஒரு முக்கிய காரணம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதுதான் அமெரிக்கா. எந்தப் போராக இருந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்களிப்பு … Read more

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய முடிவுக்கு ரஷ்யா கண்டனம் <!– உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய முடிவுக்கு ரஷ… –>

உக்ரைனுக்கு போர் ஆயுதங்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு ரஷ்யாவுக்கு எதிரான போக்கு எனவும், ஆபத்தான செயல் எனவும் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு உக்ரைன் – ரஷ்யா இடையேயான தற்போதைய … Read more

பெலாரஸ் எல்லையில் ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது

கோமல்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் … Read more

காற்று மாசை குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்: ஐ.நா.,

நியூயார்க் : ‘உலகில் பருவ நிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருவதால் அடுத்த, 18 ஆண்டுகளில் மக்கள் நோய், பசி, பட்டினி, வறுமையால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என, ஐ.நா., எச்சரித்துள்ளது. ஐ.நா., விஞ்ஞானிகள் குழு, பருவ நிலை மாற்ற அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் ஆண்டுகளில் பருவ நிலை மேலும் மோசமாகும். உலகில் கரியமில வாயு வெளியேற்றத்தால் வெப்பம் அதிகமாகும். இந்நிலையில், வெப்ப அளவு இயல்பை விட 2 டிகிரி … Read more

ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!

வாஷிங்டன், ரஷிய ஆதரவு நாடான பெலாரஸில், தூதரக செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தியது. ரஷியாவிலிருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் குடும்பத்தினருடன் வெளியேறலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.  மாஸ்கோவில் உள்ள அமெரிக தூதரகத்தில் பணியாற்றும் ‘மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து’ பிற ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாமாகவே வெளியேறும்படி அறிவுறுத்தி உள்ளது. பெலாரசில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.  US Dept of State suspends operations at US Embassy Minsk, Belarus and … Read more

தண்டனை, தனிமை: மேற்கத்திய நாடுகளின் தடைகளால் ரூபிள் வரலாறு காணாத சரிவு

மாஸ்கோ: பொருளாதாரத் தடைகள், ஸ்விஃப்ட்டில் இருந்து விலக்கி வைப்பு, ரஷ்யன் சென்ட்ரல் பேங்கை முடக்கும் முயற்சிகளால் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக ஜி 7 நாடுகள், இன்னும் பிற ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளில் தைவான், சிங்கப்பூர், தென் கொரியா எனப் பல நாடுகளும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் அறிவித்துள்ளன. இந்தத் தடைகள் தான் ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்புக்கு தண்டனை, இதன் மூலம் ரஷ்யாவை தனிமைப்படுத்துவதே நோக்கம் … Read more

இன்னும் சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை: பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா ஐந்து நாட்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சரமாரியாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதையடுத்து, ரஷ்யா அடங்கிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன் … Read more

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விருப்பம் <!– உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விருப்பம் –>

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக ரஷ்யா அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை அவசர கூட்டத்தில் ரஷ்ய பிரதிநிதி பேச்சு உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் திட்டவட்டம் நேட்டோ அமைப்பில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதால் போர் மூண்டது உக்ரைனுக்கு எதிரான போருக்கு காரணம் என்ன என்பது குறித்தும் விளக்கம் உக்ரைனும், ஜார்ஜியாவும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன ரஷ்யாவின் நலனை … Read more