உக்ரைனில் இருந்து 1,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றம் – இந்திய தூதரகம் தகவல்

கீவ்: தென்-கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா நகரிலிருந்து 1,400 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேறும் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: வார இறுதி ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாணவர்களும் மேற்குப் பகுதிகளுக்கு பயணம் செய்ய ரயில் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். உக்ரைன் ரயில்வே  சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. எனவே ரயில் நிலையங்களில் ஒரு பெரிய கூட்டம் காணப்படும் … Read more

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை| Dinamalar

காதம்பரி படத்தில் அறிமுகமானவர் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான இவர், நடிப்போடு, பாடகியாகவும் மாறினார். தற்போது, அமெரிக்க ராணுவத்தில் இணைந்து, பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து, அந்நாட்டு ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார். இதன் வாயிலாக, அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆப் மியூசிக்’ என்ற இசை பள்ளியையும் ‘ஆன்லைனில்’ நடத்தி வருகிறார். காதம்பரி படத்தில் அறிமுகமானவர் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான … Read more

கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு என தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  ரஷிய அழைப்பை ஏற்று பெலாரசில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் … Read more

உக்ரைன் மீட்பு நடவடிக்கையிலும் இனவெறி: ஆப்பிரிக்க மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு?

உக்ரைனிலிருந்து ஆப்ரிக்க மாணவர்கள் வெளியேறிச் செல்ல பாரப்பட்சம் காட்டப்படுவதாகவும், ரயில் மற்றும் பேருந்துகளில் ஏற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. போர் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி, உக்ரைன் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய இரவு வான்வழித் தாக்குதல் இல்லாத இரவாக உக்ரைனுக்கு அமைந்தது. … Read more

சரிதான் ஏதோ சம்பவம் இருக்கு… ரஷியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு போன அலர்ட் மெசேஜ்!

உக்ரைன் மீது ரஷிய படைகள் 5வது நாளாக தாக்குதல் நடத்துகிறது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததுடன், உக்ரைனுக்கு உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் தடைகளை விதித்துவருகிறது. இன்றோ, நாளையோ முடிவுக்கு வந்துவிடாதா என்று ஒட்டுமமொத்த உலகமே எதிர்பார்த்திருக்க, உக்ரைன் -ரஷியா போர் நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி சென்றிருக்கிறது. … Read more

ரஷ்யா மீதான தடைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடும் – பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ <!– ரஷ்யா மீதான தடைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடும் – பெலார… –>

ரஷ்யாவின் மீது மேற்கு நாடுகள் விதிக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகள் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் என பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 5ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக பெலாரஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கட்டான தருணத்தில் ரஷ்யா மீது அத்தகைய தடைகள் விதிப்பது போரை விட மோசமானது என்றும் பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் அமெரிக்கா தான் அதிகம் பயனடைவதாக குறிப்பிட்ட … Read more

ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா. வலியுறுத்தல்

ஜெனீவா: உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது. இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ்,  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில்… ஒதுங்கியே இருக்கிறோம்?

நியூயார்க்:உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஐ.நா., பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் ஒதுங்கியே இருக்க முடிவு செய்துள்ள இந்தியா, இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல், தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திடாமல் தவிர்த்துள்ளது.சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பின், அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வந்தது. … Read more

பாகிஸ்தான்: பஸ் – லாரி மோதி விபத்து – 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் வரை காயமடைந்துள்ளனர். முன்னதாக பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் மாவட்டத்தில் பயணிகள் பேருந்தும் லாரி ஒன்றும் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

அணு ஆயுத மும்முனைப் படைகள் தயார் – பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ரஷ்யாவின் அறிவிப்பு

கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கார்கிவ் நடந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அணு ஆயுதப் படை தயாராக உள்ளது என ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்து இருநாடுகளும் பெலாரஸில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நேரப்படி … Read more