உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மாணவர்கள் சென்றது ஏன்?

உக்ரைன் – ரஷ்யப் போரில் மேற்குலக நாடுகள் உக்ரைனை ஆதரிக்கும் போது இந்திய அரசு ரஷ்யாவை மறைமுகமாக ஆதரிக்கிறது. அல்லது நடுநிலை வகிக்கிறது. கடந்த 26ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் ரஷ்யப் படைகள் உடனே உக்ரைனிலிருந்து திரும்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. தற்போது ஐ.நா. பொதுச்சபை அவரசக் கூட்டத்தைக் கூட்டும் … Read more

வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்ய ராணுவம் திட்டம்.. கீவை விட்டுப் பொதுமக்கள் வெளியேற அறிவிப்பு <!– வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்ய ராணுவம் திட்டம்.. கீவை விட்ட… –>

உக்ரைனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதில் ரஷ்யா வலிமையாக உள்ளதாகவும், கீவ் நகரைவிட்டுப் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்றும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யப் படையினரை எதிர்த்து உக்ரைன் ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர். ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வான்வழித் தாக்குதலில் தாங்கள் வலிமையாக உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.   கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் சுதந்திரமாக நகரைவிட்டு வெளியேறலாம் என்றும், கீவ் – வாசில்கிவ் … Read more

பெலாரசில் உள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஷியா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்நிலையில், பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடி உள்ளது. மேலும், ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற … Read more

துவங்கியது போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ரஷ்ய படைகள் வெளியேற உக்ரைன் வலியுறுத்தல்| Dinamalar

கோமல்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெற்றது. இதில், ரஷ்ய படைகள் முழுமையாக வெளியே உத்தரவிடுமாறு உக்ரைன் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். உக்ரைன் மீது தொடர்ந்து 5வது நாளாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதம் தெரிவித்தன. அதன்படி, பெலாரஸ் நாட்டின் கோமல் நகருக்கு உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் குழு பெலாரஸ் சென்றடைந்தது. இதனைத்தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பெலாரஸில் … Read more

Safety Pin: சேப்டி பின் கண்டுபிடிப்பு குறித்த ஆச்சர்ய தகவல்கள் !

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி பின் என்ற பொருள் மிகவும் பயனுள்ளது. புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம் . அத்தகைய சேப்டி பின்னின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் பெயருக்குப் பின்னால் உள்ள கதை என்ன, அது ஏன், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.  ஹூக்கு எனப்படும் … Read more

பெலாரஸ் பேச்சுவார்த்தையில் திருப்புமுனை வருமா? – உக்ரைன் அதிபரின் நிபந்தனைகள், கெடுபிடிகள், எச்சரிக்கைகள் எழுப்பும் சந்தேகம்

கீவ்: ஒட்டுமொத்த உலகமும் ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. பெலாரஸ் எல்லையில் ரஷ்ய குழுவும், உக்ரைன் குழுவும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் திருப்புமுனை வருமா என்பது சதேகமே என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ஒலக்ஸி ரெஸ்னிகோவ், வெளியுறவு இணை அமைச்சர் அலக்ஸாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ரஷ்ய தரப்பில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனட் … Read more

"யூதர் குலத்து சிங்கம்".. சும்மாவா ஜெலன்ஸ்கியை தூக்கிப் பிடிக்குது அமெரிக்கா!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக அமெரிக்கா இத்தனை உறுதியாக நிற்க முக்கியக் காரணமே அவர் யூதர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான். உலகமெங்கும் உள்ள யூத இனத்தவர்களின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார் விலாடிமிர் ஜெலன்ஸ்கி. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஐரோப்பாவில் யூதர்கள் சிந்திய ரத்தத்தின் கறையை இன்னும் கூட பார்க்கலாம். மாறாத வலி அது.. மறக்க முடியாத அடி அது. ஹிட்லர் என்ற ஒற்றை நாகத்தின் கொடுக்குகளில் சிக்கி, துடி துடித்து சிதறி ஓடிய இனம்தான் யூத இனம். … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக லட்வியர்கள் போர் செய்ய செல்லலாம் என அறிவிப்பு <!– உக்ரைனுக்கு ஆதரவாக லட்வியர்கள் போர் செய்ய செல்லலாம் என அற… –>

உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் அந்நாட்டிற்கு சென்று ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிய செல்லலாம் என லட்வியா அறிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் லட்வியா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களில் யார் வேண்டுமானாலும் போர் செய்ய செல்லலாம் என்றும் லட்வியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். Source link

இந்தியர்கள் விசா இல்லாமல் போலந்து எல்லைக்குள் வரலாம்- தூதர் தகவல்

வர்சா: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்தவண்ணம் … Read more

ரஷ்யாவின் வங்கி சேவைகளை முடக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், ‘ஸ்விவ்ட்’ எனப்படும், சர்வதேச வங்கி சேவை ஒத்துழைப்பு முறையில் இருந்து ரஷ்ய வங்கிகளை நீக்க, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன. 11 ஆயிரம் வங்கிகள்’ஸ்விவ்ட்’ எனப்படும் உலகளாவிய வங்கிகள் இடையேயான நிதி தகவல் தொடர்பு சொசைட்டி வாயிலாக, உலகில் உள்ள வங்கிகள் இடையே தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதில், 200 நாடுகளைச் சேர்ந்த, 11 ஆயிரம் வங்கிகள் இடம்பெற்றுள்ளன. இதன் வாயிலாக, ஒரு நாட்டில் இருந்து … Read more