கொஞ்சம் கூட படைகளைக் குறைக்கலை.. உக்ரைனுக்கு ரஷ்யா போடும் அதிரடி ஸ்கெட்ச்!

உக்ரைன் எல்லைப் பகுதியில் படைகளைக் குறைத்துள்ளதாக ரஷ்யா கூறினாலும் கூட உக்ரைன் எல்லையோரம் பல முக்கியப் பகுதிகளில் தொடர்ந்து ரஷ்யா படைகளைக் குவித்து வருவது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் திட்டம் இன்னும் அப்படியேதான் இருப்பதாக கணிக்கப்படுகிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் எல்லை நெடுகிலும் குவிந்து கிடப்பது தொடர்பான புதிய செயற்கைக் கோள் படங்கள் வெளியாகியுள்ளன. பெலாரஸ் பகுதியில் ரஷ்யாவின் ராணுவ நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. பெலாரஸ் மட்டுமல்லாமல், … Read more

விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் திட்டம் அமல் – பெல்ஜியம் அரசு <!– விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் திட்டம் அமல… –>

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் 4 நாள் வேலைத் திட்டத்தை ஸ்காட்லாந்து கொண்டு வந்தது. அதேபோல், ஸ்பெயின், ஐஸ்லாந்து, ஜப்பானும் இத்திட்டத்தை அறிவித்திருந்தன. இந்நிலையில், 4 நாட்கள் வேலை திட்டத்திற்கு மெல்ஜியம் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இத்திட்டம் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் … Read more

உக்ரைன் எல்லையில் படைகளை குறைப்பதற்கு பதில் அதிகரிப்பதா? ரஷியாவுக்கு நேட்டோ கண்டனம்

கீவ்: ரஷியா, உக்ரைன் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து தற்போது எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. பதற்றத்தை தணிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.   எல்லைப்பகுதியை ஒட்டி படைகளை நிறுத்தி உள்ள ரஷியா, எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதனை ரஷியா மறுத்து வருகிறது. எனினும், போர் பதற்றம் தணியவில்லை.  ராணுவ பயிற்சியை நிறைவு செய்ததால் உக்ரைன் எல்லையில் உள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ள வீரர்களில் … Read more

சிங்கப்பூர் பிரமதருக்கு கண்டனம்| Dinamalar

சிங்கப்பூர்: இந்திய எம்.பி..,க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சிங்கப்பூர் பார்லிமென்ட் கூட்டம் கூடியது. அதில் பேசிய 70 வயதான அந்நாட்டு பிரதமர் லீ சியென் லுாங் , இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த நேரு உருவாக்கிய இந்தியாவில், இன்று கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களில் பாதிக்குமேற்பட்டோர் பாராளுமன்ற எம்.பி.,க்களாக உள்ளனர் என்றார். பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் ,டில்லியில் … Read more

விந்தை மனிதர்! காதலிகள் 1000; கருத்தடை மாத்திரைகள் 69,000; தண்டனை 1075 ஆண்டுகள்!

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அட்னான் ஒக்தார் என்பவரின் பல ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  அட்னான் ஒக்தார் தீவிரவாதத்தைப் பற்றி மக்களுக்குப் போதிப்பதோடு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்களுடன் அட்னான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனமாடினார். அவர் பெண்களை ‘பூனை’ என்று அழைப்பார். கிரிமினல் குற்றவாளி கும்பலை உருவாக்கியது … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 100 டாலர்கள்: அல்ஜீரியா அதிபர் அறிவிப்பு

அல்ஜீரியாவில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 100 டாலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அப்தில்மஜித் அறிவித்துள்ளார். கரோனாவுக்குப் பிறகு உலக அளவில் வேலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனை குறைக்க உலகத் தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், அல்ஜீரிய அதிபர் தனது நாட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு துணைபுரியும் வகையில் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அப்தில்மஜித் கூறும்போது, “வேலையில்லா இளைஞர்களின் கண்ணியத்தைக் காக்க மாதம்தோறும் உதவித் தொகையை வழங்க … Read more

பீர் குடிப்பதால் இப்படியொரு ஆபத்தா?- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஊட்டச்சத்தியல் இதழில் அண்மையில் ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியாகி ஒட்டுமொத்த உலகையே கலக்கி வருகிறது. உலகத்தையே கலக்கும் அளவுக்கு அதில் எந்த விஷயம் என்கிறீர்களா? கடந்த இரண்டு வருஷத்துக்கு மேலாக இந்த உலகையே கதிகலங்க செய்து கொண்டிருக்கும் கொரோனாவையும், மனிதனை எளிதில் அடிமையாக்கும் மதுலையும் இணைத்து அந்த கட்டுரை பேசியுள்ளதுதான் இன்று டாக் ஆஃப் தி வேர்ல்டு. அதில், வாரத்துக்கு 1 -4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவது, கொரோனா தொற்று ஏற்படும் … Read more

வெளிநாடுகளுக்கு கடத்த துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குரங்குகள் மீட்பு.. <!– வெளிநாடுகளுக்கு கடத்த துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டி… –>

தாய்லாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த குரங்குகளை மக்கள் விடுவித்தனர். சராபுரி (Saraburi) மாகாணத்தில் உள்ள ஆளில்லாத வீட்டில் இருந்து குரங்குகளின் சத்தம் வருவதை கவனித்த கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு, நூற்றுக்கணக்கான குரங்குகள் தனித்தனி துணிப்பைகளில் வைத்து கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அதிகாரிகள் வருவது வரை தாமதிக்காமல் குரங்குகளை அவிழ்த்து விட்டனர். பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டிருந்த 29 குரங்குகளை வனத்துறையினர் மீட்டு உயிரியல் காப்பகத்தில் சேர்த்தனர். … Read more

Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!

அறிவு மற்றும் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கொண்டு வந்தாலும், அதில் சில ஆபத்துக்களும் உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் உக்ரைனில் நடந்த சைபர் தாக்குதல். ஹேக்கர்கள் உக்ரைனின் கணினி நெட்வொர்க் அமைப்பிற்குள் நுழைந்து வங்கியியல் முதல் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளைத் ஸ்தம்பிக்க செய்துள்ளனர். இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஹேக்கர்கள் அல்லது ரஷ்யாவின் சைபர் ராணுவம் இருப்பதாக ஊகிக்கப்பட்டது. இருப்பினும் உக்ரைனில் நடந்த சைபர் மோதலில் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. … Read more

மாறிய உலகம்… மாறாத ஜொனாதன்… – 190 வயது ஆமையும் வியத்தகு பின்புலமும்

ராணி விக்டோரியா பதின்பருவத்தில் வலம் வந்துகொண்டிருந்த காலத்தில் ஜொனாதன் பிறந்தது. 120 வருடங்களுக்கு முன்னர், தனது 81 வயதில் ராணி விக்டோரியா மரணித்துவிட்டார். ஆனால், இன்றும் ஜொனாதன் இன்னமும் செயின்ட் ஹெலினா தீவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் 190-வது பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம், இதுவரை வாழ்ந்த ஆமைகளில் மிகவும் வயதான ஆமை என்ற பெருமை, ஜொனாதனுக்கு கிடைக்கவுள்ளது. 1832-ஆம் ஆண்டு பிறந்ததாகக் கருதப்படும் ஜொனாதன், சர் வில்லியம் கிரே-வில்சன் என்பவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இவர் 1882 … Read more