ரஷிய அருங்காட்சியகத்தில் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் காட்சிக்கு வைக்கப்படுகிறது

மாஸ்கோ: ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் கோரி அகிம்சை வழியில் போராடி வந்த இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தி, ஜெர்மனியில் யூதர்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த வலியுறுத்தி 1939-ம் ஆண்டு ஹிட்லருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். காந்தி, ஹிட்லருக்கு எழுதிய … Read more

பிரான்ஸ்: விளையாட்டுகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்துவதை தடைசெய்யும் மசோதா – தேசிய சட்டமன்றத்திற்கு அனுப்பி வைப்பு

பாரிஸ், பிரான்சில் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் வெளியே தெரியும்படி மத அடையாளங்களை வெளிப்படுத்துவதை தடைசெய்யும்  வரைவு மசோதாவிற்கு செனட் சபை வாக்களிக்க மறுத்ததை அடுத்து, இந்த மசோதா பிரான்சின் தேசிய சட்டமன்றத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மசோதாவில் பழமைவாத மேல் சபையால் திருத்தமாகச் சேர்க்கப்பட்ட ஒரு ஷரத்து உள்ளது. அது விளையாட்டு கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் ‘வெளியே தெரியும்படி மத அடையாளங்களை வெளிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடுகிறது. இந்த மசோதா கீழ்சபையில் … Read more

பிரிட்டனில் டெல்டாக்ரான் பாதிப்பு கண்டுபிடிப்பு: கூர்ந்து கவனிப்பதாக சுகாதாரத் துறை தகவல்

லண்டன்: பிரிட்டனில் கரோனா வைரஸின் இன்னொரு திரிபான டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கரோனா உலகம் முழுவதும் பரவியது. கரோனா வைரஸ் பரவ ஆரம்பத்ததில் இருந்து அதன் உருமாற்றங்களை உலக சுகாதார நிறுவனம் ஆல்பா, பீட்டா, காமா, லாம்ப்டா, டெல்டா, ஒமைக்ரான் என பல்வேறு திரிபுகள் வந்துவிட்டன. இவற்றில் இந்தியாவில் கண்டறியப்பட்ட … Read more

நேரு உருவாக்கிய இந்தியாவின் இன்றைய நிலை.. சிங்கப்பூர் பிரதமர் பரபரப்பு பேச்சு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டு பிரதமர் லீ சியன் லூங், மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை புகழ்ந்து பேசியுள்ளார். நேரு உருவாக்கிய இந்தியாவில் இன்று “கிரிமினல்” வழக்குகளை சுமப்போர்தான் பாதிக்கும் மேல் எம்.பிக்களாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் சிலர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நேருவைப் பற்றி ஏதாவது பேசுவதே இவர்களின் வாடிக்கையாகவும் மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி இதைத் தொடர்ந்து கண்டித்து வருகிறது. இந்த நிலையில் … Read more

தலிபான் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிறுவர்களுக்கு இலவசமாக பாடம் கற்பிக்கும் பெண்

ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு பல்வேறு தடைகளை விதித்தது. குறிப்பாக, குழந்தைகள், பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்து மக்களை துன்புறுத்தியது. தலிபான் கட்டுப்பாடு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. மேலும், ஆப்கானிஸ்தான் அரசாங்க சொத்துக்கள் முடக்கம் மற்றும் தாலிபான் மீதான சர்வதேச தடைகள், வெளிநாட்டு உதவி நிறுத்தம், ஆகியவற்றால் அந்நாட்டு மக்கள் கடும் வறுமையில் சிக்கியுள்ளனர். இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வேலைக்கு … Read more

ஸ்வஸ்திக்கை அவமானப்படுத்த கூடாது கனடாவில் ஹிந்து அமைப்பு வலியுறுத்தல்| Dinamalar

வாஷிங்டன்:’ஹிந்துக்கள் புனிதமாக கருதும் ‘ஸ்வஸ்திக்’ சின்னத்தை, ‘நாஜி’க்களின் சின்னத்துடன் ஒப்பிட்டு பேசி அவமானப்படுத்த கூடாது’ என, வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த ஹிந்து அமைப்பு தெரிவித்துள்ளது.‘கனடாவில் லாரி ஓட்டுனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்; தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர்’ என அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி ஓட்டுனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.12 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 79 லட்சத்து 21 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே … Read more

அதிர்ச்சி சம்பவம்! இரு ஆண்டுகள் மாயமான சிறுமி; வீட்டு படிக்கட்டின் கீழ் கண்டுபிடிப்பு

நியூயார்க்: இரண்டு ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த சிறுமி, அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் உள்ள ரகசிய அறையில் கண்டுபிடிக்கப்பட்ட சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை தங்களிடம் இருக்க வேண்டும் என்ற பெற்றோர் கோரி வந்த நிலையில், அதற்கு அனுமதி கிடைக்காததால், தங்கள் நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்று இரண்டு ஆண்டுகளாக ஒரு ரகசிய மறைவிடத்தில் மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. பெண் குழந்தைக்கு இப்போது 6 வயது. கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி காணாமல் … Read more

3 மணி நேரத்தில் 25.8 செ.மீ மழை பதிவு; வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்: 58 பேர் பலி

பிரேசிலில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். இதுகுறித்து அரசு ஊடகம் தரப்பில், “பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேரத்தில் 25.8 செ.மீ மழை பதிவாகியது. கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக பெய்த மழை, இந்த மூன்று மணி நேரத்தில் பெய்துவிட்டது. இந்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் … Read more

ரஷ்யா படையெடுத்தால்.. இந்தியா எங்கள் பக்கம் நிற்கும்.. அமெரிக்கா பரபர தகவல்!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார். ஆனால் இந்தியா, ரஷ்யாவைப் பகைத்துக் கொள்ளுமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசுகள் பதவியில் இருந்த வரை இந்தியாவின் மிக நெருக்கமான பங்காளியாக ரஷ்யா இருந்து வந்தது. மிகச் சிறந்த வரலாற்று உறவாக இது நீடித்து வந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் வெளியுறவுக் கொள்கையில் தலைகீழ் … Read more