60 ஆண்டுகளில் முதல் முறையாக சுறா தாக்கி ஒருவர் பலி: சிட்னி கடற்கரை மூடல்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஒருவரை பெரிய சுறா மீன் ஒன்று தாக்கியது. இதில் அந்த நபர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வளைத்தளங்களில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சிட்னி கடற்கரையில் நுழைய பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுறா மீன் தாக்குதல் நடத்திய இடத்தைச் சுற்றி அபாயப் பகுதி … Read more

நான்கு நாள் வேலை பெல்ஜியம் அறிவிப்பு| Dinamalar

பிரசல்ஸ்:வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.கடந்த, 2021 செப்.,ல் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தன. எனினும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான், முதன் முதலாக, 2021 டிச.,ல் நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் … Read more

பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

பிரேசிலியா, தென்அமெரிக்க நாடான பிரேசிலில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக இந்த கனமழையால் … Read more

Russia-Ukraine crisis: ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை என அமெரிக்கா குற்றசாட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றம் இருந்து வரும் சூழ்நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது. இரு நாடுகளும் இடையில் பதற்றம் நிலவுகிறது.  உக்ரைன் – ரஷ்ய எல்லைப்பகுதியில் ரஷ்யாவின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படைகளை கடந்த ஒரு மாத காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை நிலவியது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா … Read more

எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெற்றதாக ரஷ்யா பொய் சொல்கிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெற்றதாக ரஷ்யா பொய் சொல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய … Read more

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு.. 90 நிமிடம் உடற்பயிற்சி செய்தால்.. ரொம்ப நல்லதாம்!

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் மிதமான அளவில் உடற்பயிற்சி செய்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் பிரிஸ்க் வாக் செய்தாலோ அல்லது நிறுத்தப்பட்ட சைக்கிளை மிதமான வேகத்தில் ஓட்டினாலோ நமது உடலில் ஆன்டிபாடிகள் உருவாவது அதிகரிக்கிறதாம். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு நான்கு வாரங்களில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் … Read more

பிரேசிலில் கனமழை- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டிஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய மழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள்ள தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. முதல் கட்ட தகவலில் 54 பேர் … Read more

உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள் கவலை தெரிவிக்கும் பார்லி., நிலைக்குழு| Dinamalar

‘உக்ரைன் நாட்டில், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலர், தங்களது பாதுகாப்பு குறித்து அச்சத்தில் இருப்பது கவலையாக உள்ளது. அவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்க வேண்டும்’ என, பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்து உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லையில், ரஷ்யா தன் படையினரை குவித்துள்ளது. எந்த நேரத்திலும், போர் மூளலாம் என்பதால், சர்வ தேச அரங்கில் பதற்றம் நிலவுகிறது. அறிவுறுத்தல்இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம், ‘அவசியம் இல்லை என்றால், இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுவதே சரி. … Read more

பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இளவரசர்: எந்த நாட்டில் தெரியுமா..?

லண்டன்,  இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என … Read more

Death Lake: உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!

இந்த பூமி பல மர்மங்களைக் கொண்டுள்ளது. மலைகள், ஆறுகள், ஏரிகள் என இயற்கை தன்னுள் பல ரகசியங்களை பொதித்து வைத்துள்ளது.  மனிதர்களால் அறிய முடியாத பல விஷயங்கள் உள்ளன.  இருப்பினும், மனிதர்களின் விடா முயற்சி, இந்த மர்மங்களின் முடிச்சுக்களை அவிழ்க்க விளைகிறது.  அவற்றில் சில வெற்றியடைந்தாலும், பெரும்பாலும் ரகசியங்கள் மர்மமாகவே தொடர்கின்றன. அப்படி மர்மமாய் தொடரும் ஒரு ஏரி தென்னாப்பிரிக்காவின் ஃபுண்டுஜி.  பார்ப்பதற்கு பேரழகாய் காட்சியளிக்கும் இந்த ஏரியை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் தனது … Read more