கண்களை கூசாத புது ஹெட்லைட்| Dinamalar

டெட்ராய்ட்:எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உயர் தொழில் நுட்ப முகப்பு விளக்கை வாகனங்களில் பொருத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதுகுறித்து, அமெரிக்க நெடுஞ்சாலை பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாகனங்களில் பயன்படுத்தப்படும் முகப்பு விளக்குகளில் அதீத ஒளியால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. இதையடுத்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன. தற்போது, ‘அடாப்டிவ் டிரைவிங் பீம் ஹெட்லைட்ஸ்’ என்ற முகப்பு விளக்கு மிகவும் பாதுகாப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உயர் … Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் சரிவு..!! உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா,  உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 75 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலியாகி உள்னனர். * உலகளவில் ஒரு வார கால தொற்று பாதிப்பு 19 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இறப்புகள் நிலையாக உள்ளன. * … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார் என புதின் அறிவிப்பு: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க தீவிரம்

மாஸ்கோ: உக்ரைனில் போர்ப்பதற்றம் நிலவு வதால் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று … Read more

பிரேசில் நாட்டில் தொடர் கனமழை.! வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு <!– பிரேசில் நாட்டில் தொடர் கனமழை.! வெள்ளம் மற்றும் நிலச்சரிவ… –>

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மொரோ டா ஆஃபிசினாவில் 80 வீடுகள் வரை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை … Read more

‘ஒயின்’ பருகுவது கொரோனாவில் இருந்து காக்கும்: புதிய ஆய்வில் தகவல்

மெல்போர்ன் : ‘தண்ணி அடிப்பவர்களை கொரோனா ஒண்ணும் செய்யாது’ என்று மதுப்பிரியர்கள் சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அது சரியாக இருக்குமோ என்று எண்ணத் தூண்டும் வகையில், சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது. ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல இதழில் வெளியான அந்த ஆய்வுக்கட்டுரை, அதன் கண்டுபிடிப்புகளுக்காகவே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரம் 1 முதல் 4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவது, கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கிறதாம். அதேவேளையில், … Read more

நடுக்கடல் விபத்தில் தப்பி, கவிழ்ந்த படகில் தத்தளித்த இளைஞர் – உலகை உலுக்கும் புகைப்பட பின்புலம்

அமெரிக்காவின் புளோரிடா நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேலே தனி ஆளாக அமர்ந்து வந்த இளைஞரின் புகைப்படம், உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவி, மனதை உலுக்கி வருகிறது. அந்தப் புகைப்படத்திலிருந்தவர் கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ஜுவான் ஸ்டிபன் மோண்டோயா. இந்தப் பயணத்தின் பின்புலமும் வலி மிகுந்தது. விபத்துக்குள்ளான படகில் பல மணி நேரமாக நடுக்கடலில் பயணித்து வந்த ஜுவான், அமெரிக்க கடற்படையால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டபோது, அவரது உடலில் இருந்த அனைத்து நீர்ச்சத்தும் இழந்து … Read more

மியான்மரில் ஏரியில் போர் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு <!– மியான்மரில் ஏரியில் போர் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு –>

மியான்மரில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். சாகாயிங் என்ற இடத்தில் போர் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த போர் விமானம் அதே பகுதியில் உள்ள ஏரியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி உயிரிழந்ததாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக மியான்மர் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  Source link

பார்லியில் பொய் தகவல் கூறிய எதிர்க்கட்சி தலைவரை விசாரிக்க அனுமதி| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பார்லி.,யில் பொய்யான தகவல் கூறிய குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் உள்பட இரு எம்.பி.,க்களிடம் அரசு வழக்கறிஞர் விசாரணை நடத்த வேண்டும் என பார்லி., பரிந்துரைத்துள்ளது. இந்திய வம்சாவளி தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பார்லி.,யில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீத்தம் சிங் உள்ளார். இவர் மற்றும் இவரது கட்சி எம்.பி., பைசல் மனாப் மீது பார்லி.,யில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக பார்லி., … Read more

இரண்டு ஆண்டுகளாக தொற்றிலிருந்து தப்பித்த நாட்டையும் தாக்கியது கரோனா!

2019-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், கரோனாவின் கோரத் தாக்குதலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சில நாடுகள் தப்பித்து இருக்கின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், பசிபிக் நாடுகளில் ஒன்றான கிரிபாட்டி தனது எல்லையை இரண்டு ஆண்டுகள் மூடியதால் கரோனா தொற்று பரவலைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், இந்த சாதனை நீடிக்கவில்லை. கிரிபாட்டியில் தற்போது கரோனா பரவத் … Read more