அடங்க மறுக்கும் ரஷ்யா – சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்!

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்த, உடனடியாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கூறி, உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சோவியத் யூனியன் அமைப்பில் இருந்து, உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, ரஷ்யா – உக்ரைன் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, உக்ரைன் அச்சுறுத்தும் வகையில், … Read more

ராணுவத்திற்கு புதின் புதிய உத்தரவு.. பேச்சுவார்த்தைக்கு முன்வந்த உக்ரைன்..! <!– ராணுவத்திற்கு புதின் புதிய உத்தரவு.. பேச்சுவார்த்தைக்கு ம… –>

அணு ஆயுத தடுப்பு படைகளை அதிக உஷார் நிலையில் வைக்க ரஷ்ய ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு முன்வந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 4 நாட்களை எட்டியுள்ள நிலையில், பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடத்த குழு அனுப்ப தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்திருந்தது. இந்நிலையில், உக்ரைனை தாக்க பெலாரஸ் நாட்டை ரஷ்யா பயன்படுத்துவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது … Read more

மாதம் ரூ.2.52 லட்சம்… உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார் அதிபர்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள், தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக … Read more

கனடா வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை..!!

ஒட்டாவா, இன்று 4-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். இதனிடையே ரஷியாவில் உள்ள தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள இரு பெரிய நகரங்களை சுற்றிவளைத்துள்ளதாக ரஷியா தெரிவித்தது. உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள இரண்டு பெரிய நகரங்களை முற்றுகையிட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.  உக்ரைன்- ரஷிய எல்லை, … Read more

இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கு செல்ல விரும்பும் காரணம் என்ன?

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் எதிரொலியால், யுத்த பூமியாய் உருமாறியிருக்கும் உக்ரைனில் படிக்கும்  ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் நிலைமை கவலையளிக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பயமும், அச்சமும் எப்போது தீரும்? போரினால் படிப்பு தடைபட்ட நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வெளியேற்றும் இந்திய அரசின் முயற்சியும் தடைபட்டுள்ளது. உக்ரைன் தனது வான்வெளியில் சிவிலியன்கள் விமான பறப்புக்கு தடை செய்ததால், இந்தியர்களை வெளியேற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் பல இந்திய … Read more

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க், ஜப்பானிய பணக்காரர்!

கீவ்: ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போரில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைனுக்கு உலக நாடுகளும், தனிநபர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதில், எலான் மஸ்க் மற்றும் ஜப்பானிய பணக்காரர் ஒருவரின் உறுதுணை கவனத்துக்குரியதாக இருந்தது. போர் தொடங்கியது முதல் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்து வந்தார். ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 350 … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு?

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் … Read more

கனடா நாட்டின் வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைப்பு … Read more