உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க், ஜப்பானிய பணக்காரர்!

கீவ்: ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போரில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைனுக்கு உலக நாடுகளும், தனிநபர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதில், எலான் மஸ்க் மற்றும் ஜப்பானிய பணக்காரர் ஒருவரின் உறுதுணை கவனத்துக்குரியதாக இருந்தது. போர் தொடங்கியது முதல் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்து வந்தார். ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 350 … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு?

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் … Read more

கனடா நாட்டின் வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைப்பு … Read more

Toilet Rules: கழிப்பறை பயன்பாடு தொடர்பாக கடுமையான விதிகள் உள்ள ‘நாடுகள்’ !

ஒவ்வொரு நாட்டிலும் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமலில் உள்ளன. சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்ட விதிக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால், உலகில் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடர்பாக சில விதிகள் உள்ளன என்றால், ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா. இதில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அடங்கும். சிங்கப்பூரில் மோசமான பழக்கவழக்கங்களுக்கு கடுமையான தண்டனைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கழிப்பறையை உபயோகப்படுத்தியக்குப் பிறகு ஃப்ளஷ் செய்யாத பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொது கழிப்பறையை பயன்படுத்தும் பலர் இது போன்று பொறுப்பில்லாமல் … Read more

ரஷ்ய ராணுவ நடவடிக்கை | கார்கிவ் மீட்பு; சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு – உக்ரைன் பலப்பரீட்சை

கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை 4வது நாளை எட்டியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தின் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை கோரி முறையிட்டுள்ளது. தனது படையெடுப்பை நியாயப்படுத்தி இன அழிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யா தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையில், உடனடியாக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட … Read more

BREAKING: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் சம்மதம்!

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த நான்கு நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும், ரஷ்ய … Read more

நாட்டை விட்டு வெளியே செல்ல கூட்டமான ரயிலில் ஏற முயன்று சிக்கி தவிக்கும் தாய், குழந்தையின் புகைப்படம்.! <!– நாட்டை விட்டு வெளியே செல்ல கூட்டமான ரயிலில் ஏற முயன்று சி… –>

உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நோக்கில் போலந்து செல்லும் ரயிலில் செல்வதற்காக ஒரே நேரத்தில் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஏற்கனவே கூட்டமாக வரும் ரயிலில் எப்படியாவது ஏறிச்சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பரிதாபமாக அவர்கள் காத்திருந்தனர். அதில் ஒரு தாயும், அவரது குழந்தையும் ரயிலுக்காக கூட்ட நெரிசலுக்குள் தவிப்புடன் காத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  Source link

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்- அமைதி திரும்ப வாய்ப்பு

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் … Read more

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புதல்| Dinamalar

மாஸ்கோ: பெலாரஸ் நாட்டில் வைத்து ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்து இருப்பதாவது: பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் நாட்டின் கோமல் நகருக்கு உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் செல்வார்கள் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. முன்னதாக பெலாரஸ் நாட்டின் வழியாக உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யபடைகள் நுழைந்துள்ளதால் பெலாரஸ் நாட்டில்வைத்து ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை … Read more