அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்க வலியுறுத்தி ஆப்கான் மக்கள் பேரணி.. <!– அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்க வல… –>

அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ள 67,500 கோடி ரூபாய் சொத்துக்களை விடுவிக்க வலியுறுத்தி ஆப்கான் மக்கள் பேரணி சென்றனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதும் அந்நாட்டு மத்திய வங்கிக்கு சொந்தமாக வெளிநாடுகளில் இருந்த 67,500 கோடி சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியது. அதில் இருந்து 26,250 கோடி ரூபாயை நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனை கண்டித்து தலைநகர் காபூலில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் முன் மக்கள் பேரணி … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து தொடர்ந்து படைகளை குறைக்கும் ரஷ்யா| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து, மேலும் சில படைகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது. உக்ரைன் எல்லையில் தனது படைகளை ரஷ்யா குவித்தது. இதனால், அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. கிரிமியா உள்ளிட்ட உக்ரைன் எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ரஷ்யா படைகளை குவித்து போர் பயிற்சி அளித்து வந்தது. இதனால், அப்பகுதியில் உருவான பதற்றத்தை தணிக்க மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் தொடர்ந்து ரஷ்யாவுடன் … Read more

HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்; சாத்தியமாக்கிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

வாஷிங்டன்: HIV என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய வைரஸ் ஆகும். இந்த தொற்று ஏற்பட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இது இதுவரை குணப்படுத்த முடியாததாக கருதப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த வகையில்  பெரும் வெற்றியை அடைந்துள்ளனர். ஸ்டெம்செல் அறுவை சிகிக்சை மூலம்  இது சாத்தியம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்து, HIV தொற்றில் இருந்து குணமடைந்த … Read more

கனடாவில் பதற்றம்: குடும்பத்துடன் தலைமறைவான ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பலமாக எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது. நூற்றுக்கணக்கானவர்கள் தலை நகரில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுத்த திடீர் முடிவு?

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக, கடந்த 10 நாட்களுக்கும் மேல் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் வெலிங்டன் உட்பட பல இடங்களில், வாகனங்களை சாலைகளில் … Read more

ஜெர்மனியில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- ஒருவர் பலி

பெர்லின்: ஜெர்மனியின் மத்திய மாகாணமான பவேரியாவில் உள்ள முனிச் நகரில் இருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் மற்றொரு பயணிகள் ரெயில் வந்தது. அப்போது 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் … Read more

கனடா: மீனவர்களின் விசைப்படகு மூழ்கி விபத்து; 7 பேர் பலி, 14 பேர் மாயம்

மாட்ரிட், நேற்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக, நேற்று அதிகாலை காலை 5:24 மணியளவில் கலீசியா துறைமுகத்தைச் சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடிக் கப்பலில் இருந்து மாட்ரிட்டிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல்பகுதியில் அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசைப்படகு, இரண்டு உயிர்காக்கும் படகுகளைக் கண்டுபிடித்தது. அதில் … Read more

Bizarre World: விந்தையுலகம்! சுவற்றிலும் ஆண்குறி! நாற்காலியிலும் ஆணுறுப்பு

உலகம் விந்தையானது. உலகின் ஓரிடத்தில் புனிதமாக கருதப்படுவது வேறொரு இடத்தில் கலையாக பார்க்கப்படுகிறது.  உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. சில நாடுகளில் புழக்கத்திலும் வழக்கத்திலும் உள்ளது பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.   சில நாடுகளில், சுவர்களில் ஆண்குறியின் படங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டால், சில ஊர்களில் அப்படி இருப்பது அவமதிப்பாக கருதப்படுகிறது. பூட்டானில் உள்ள ஃபல்லஸ் ஓவியம் – உலகெங்கிலும் உள்ள பூட்டானிய வீடுகளில் நிமிர்ந்த லிங்கத்தின் ஓவியத்தை நீங்கள் காணலாம். இது ஃபாலஸ் பெயிண்டிங் … Read more

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குறைப்பு: போர் பதற்றம் தணியும் என எதிர்பார்ப்பு

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில், உக்ரைன் எல்லையில் இருந்து சில படைப்பிரிவுகள் தங்கள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், போர் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. இதனால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் … Read more