சைபர் தாக்குதல்: உக்ரைன் அரசு இணையதளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்

உக்ரைன்: உக்ரைனின் தகவல் பாதுகாப்பு மையம் கூறும்போது, ‘உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இரண்டு வங்கிகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த சைபர் குழு உக்ரைன் அரசின் இணையதளத்தை முடக்கி உள்ளன. பிரைவாட்-24 வங்கி மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.  இதையும் படியுங்கள்…தேர்தல் ஆணையம் தி.மு.க.வினரின் அத்துமீறலை தடுக்க வேண்டும்- … Read more

மாஜி அதிபருக்காக மலராத பூக்கள்; தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை| Dinamalar

பியோங்யாங் : வட கொரிய முன்னாள் அதிபர் பிறந்தநாளான இன்று, அவரது பெயரிலான பூக்கள் மலர ஏற்பாடு செய்யாத தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்- உன். அண்டை நாடுகளுடன் விரோத போக்கை கடைபிடிக்கும் இவரது தலைமையிலான அரசின் சட்டங்களும் மக்களை அச்சுறுத்துவதாக இருக்கும். கிம் ஜாங் உன்னின் தந்தையும், முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு நாள், கடந்த ஆண்டு … Read more

கனடாவில் அவசர நிலை பிரகடனத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

ஒட்டாவா, கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் கடந்த மாதம் 29-ந்தேதி … Read more

உக்ரைனில் உச்சகட்ட பதற்றம்; ரஷ்யாவை மீண்டும் எச்சரிக்கும் அமெரிக்கா..!!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது. இரு நாடுகளும் இடையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.   ரஷ்ய படைகள் இன்று தாக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) அறிவித்துள்ளார். ரஷ்யா  உக்ரைன் எல்லையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும், உக்ரைன் எல்லையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் கூடாரம் போட்டு, … Read more

மேற்கத்திய நாடுகளின் மனநோய் தீர மருத்துவ நிபுணர்கள் உதவி தேவை: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கிண்டல்

மாஸ்கோ: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாட்டவருக்கு தேவையற்ற பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது சித்தப்பிரம்மை தெளிய நிபுணர்கள் தேவையென கிண்டல் செய்துள்ளது ரஷ்யா. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. இதனால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவ திட்டமிட்டுள்ள தாகவும் இதற்காக தனது … Read more

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் உக்ரைனில் இனப்படுகொலை நடக்கிறது.. புடின்

ரஷ்யா ஒரு போதும் விரும்பியதில்லை. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தீர்வு காணவே நாங்கள் விரும்புகிறோம் என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் கூறியுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக உரசல் இருந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் துணை நிற்கிறது. ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா எது செய்தாலும் உடனே அமெரிக்கா வந்து ஆஜராகி விடுகிறது. இந்த நிலையில் கிரிமீயா தீபகற்பப் பகுதியை … Read more

உக்ரைனை ரஷ்யா தாக்க அதிக வாய்ப்பு உள்ளது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்தது. நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா படைகளை குவித்ததால் உக்ரைனை தாக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, உக்ரைனை தாக்கினால் ரஷ்யா கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. மேலும் கிழக்கு ஐரோப்பியாவுக்கு அமெரிக்கா கூடுதல் … Read more

பாக்., ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்; ஐ.நா சபையில் இந்தியா சரமாரி புகார்| Dinamalar

நியூயார்க்:“மும்பை மற்றும் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ஒரு நாட்டின் ஆதரவுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்,” என, ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார் பாகிஸ்தானை குறிப்பிட்டு சாடினார். ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில், பயங்கரவாத தடுப்புக்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2008ல், மும்பை பயங்கரவாத தாக்குதல்; 2016ல், பதான் கோட் பயங்கரவாத … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33.84 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 57 லட்சத்து 69 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே … Read more

DDoS: உக்ரைனில் சைபர் தாக்குதல்! DDoS தாக்குதலால் இணையதளங்கள் முடக்கம்

கியேவ்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், முக்கிய வங்கிகள் மற்றும் ராணுவம் மீது செவ்வாய்கிழமையன்று சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் நாட்டு அதிகாரிகள் இந்தத் தகவலை தெரிவித்தனர்.  உக்ரைனில் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் கலாச்சார அமைச்சகங்களின் இணையதளங்கள் உட்பட குறைந்தது 10 இணையதளங்களை முடங்கிப் போவதற்குக் காரணமானது DDoS தாக்குதல். இவற்றைத் தவிர இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளின் இணையதளங்களும் பாதிக்கப்பட்டன. Сайт МОУ зазнав, ймовірно, DDoS-атаки: фіксувалася надмірна кількість … Read more