வெள்ளை மாளிகைக்கு வந்த புது விருந்தாளி

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வில்லோ என்ற பூனை புதிதாக வருகை புரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லப் பிராணிகள் மீது மிகுந்த ஆர்வ கொண்டவர். அதன் பொருட்டு வெள்ளை மாளிகைக்கு புதிய பூனை ஒன்றை வரவு செய்திருக்கிறார். வில்லோ என்ற இரண்டு வயதான கிரே கலர் நிற பூனை ஒன்று வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது. இப்பூனை குறித்து ஜோ பைடனின் மனைவி ஜெல்லி பைடன், கூறும்போது, ”ஜோ பைடனின் சொந்த ஊரான பென்சில்வேனியாவில் உள்ள வில்லோ … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலையை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 159 ரூபாய் 86 பைசாவாக உள்ளது.  ஒரு லிட்டர் டீசல் விலை 9 ரூபாய் 4 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் டீசல்  154 ரூபாய் 15 காசுகளுக்கு விற்கப்படுகிறது.  மண்ணெண்யை விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணை விலை 10 ரூபாய் … Read more

உலகக் கோப்பை வென்றால் ரூ. 9.94 கோடி| Dinamalar

துபாய்: பெண்கள் உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 9.94 கோடி பரிசுத் தொகை தரப்பட உள்ளது. நியூசிலாந்தில் மார்ச் 4 – ஏப். 3ல் பெண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதற்கான மொத்த பரிசு தொகை ரூ. 26.36 கோடி. கடந்த 2017 தொடரை (ரூ. 11.30 கோடி) … Read more

ஆப்கனில் வறுமை, பட்டினியால் சிறுநீரகங்களை விற்கும் மக்கள்: தடையை விலக்க உலக வங்கிக்கு கோரிக்கை

ஹெரத்: ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங் களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டி ருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா பிப்.16 ஆம் தேதி படையெடுக்கும் – முகநூல் பக்கத்தில் உக்ரைன் அதிபர் ஜெலனெஸ்கி அறிவிப்பு <!– உக்ரைன் மீது ரஷ்யா பிப்.16 ஆம் தேதி படையெடுக்கும் – முகநூ… –>

உக்ரைன் மீது நாளை 16 ஆம் தேதி ரஷ்யா போர்தொடுத்து தாக்குதல் நடத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஜெலன்ஸ்கி தமது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதனால் உக்ரைன் ரஷ்யா எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது .சுமார் ஒருலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா எல்லையில் குவித்துள்ளது. இது குறித்த சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் ரஷ்யா போர்ப் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது. பயிற்சி முடித்து வீரர்கள் ரஷ்யா … Read more

ரஷ்யாவுடனான போர் பதற்றம் – இந்தியாவின் அணுகு முறைக்கு நன்றி தெரிவித்தது உக்ரைன்

ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைன் மற்றும் உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை கடினமானது. ஆனால் சிக்கலானது அல்ல. எங்களது நட்பு … Read more

கரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்: கனடா பிரதமர் குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு சென்றார்

ஒட்டாவா: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப் பாடுகளை கடுமையாக்கி உள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. … Read more

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்துவருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது – ஐநா.சபையில் இந்தியா <!– பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்துவ… –>

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் நிதியுதவி அளித்துவருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருவதாக இந்தியா ஐநா.சபையில் முறையிட்டது. தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்திய ஐநாவுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், தீவிரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் விளங்குவதாகக் குறிப்பிட்டார். புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இந்தியா இழந்ததை சுட்டிக் காட்டிய அவர், அவர்களைக் கொன்ற தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தனர் என்பது உலகத்திற்கே தெரியும் என்று கூறினார். மும்பைத் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் சுட்டிக்காட்டிய … Read more

உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவி – கனடா முடிவு

ஒட்டாவா: உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. பெலாரஸ், ​​கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்த செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்காக உக்ரைனுக்கு இராணுவ … Read more