அமெரிக்காவின் அச்சுறுத்தலை கேட்டு பின்வாங்கப் போவதில்லை: ரஷ்யா

வாஷிங்டன்: ‘அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் கேட்டு நாங்கள் பின்வாங்கப் போவதில்லை’ என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனின் எல்லையில் ரஷ்யா நிறுத்தியதால் ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்தன. உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால், ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று திங்கள்கிழமை அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள ரஷ்யா … Read more

13 மாணவியர் பலாத்காரம் பள்ளி முதல்வருக்கு ஆயுள்| Dinamalar

பாண்டுங்:இந்தோனேஷியாவில், 11 முதல், 14 வயதிற்கு உட்பட்ட 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணம் பாண்டுங் நகரில் முஸ்லிம் மாணவியருக்கான உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.இதன் முதல்வராக இருந்தவர் ஹெர்ரி விராவன். இவர், 2016 முதல் 2021 வரை, 11 முதல், 14 வயதிற்கு உட்பட 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற ஒன்பது மாணவியர் குழந்தை பெற்றுள்ளனர்.இந்தப் … Read more

 லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை: ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டா: “லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, “இந்த கரோனா காலம் அனைவரையும் வெறுப்படைய செய்துள்ளது. நாம் இன்னமும் கரோனாவுக்கு எதிரான போரில் வெல்லவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக நாட்டின் தலைநகரில் போராட்டம் நடத்தும் சிலரின் நடவடிக்கையால் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் கனடா பயப்படவில்லை. இந்த நடத்தைக்கு கனடாவில் இடமில்லை. நான் மிகவும் தெளிவாக இருக்க … Read more

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசர நிலை பிரகடனம்..! <!– கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசர நிலை பிரகடனம்..! –>

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை அடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கனடா அரசின் உத்தரவை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலம் முடக்கப்பட்டது. இந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் போராட்டக்காரர்களை … Read more

அதிவேகமாகப் பரவும் உருமாறிய ஒமைக்ரான் 57 நாடுகளில் கண்டுபிடிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 10 வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2021 நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. இதற்கு BA.1 என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இப்போது உலகளவில் உள்ள 96% தொற்றுக்கு BA.1, BA.1.1 திரிபுகளே காரணமாக உள்ளன. இதுதவிர BA.2, BA.3 கண்டறியப்பட்டன. ஆனால் இப்போது BA.2 திரிபு அதிகமாகப் பரவிவருவதாக ஜிஐஎஸ்ஏஐடி அமைப்பு … Read more

நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் திடீர் அறிவிப்பு!

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. அதே போல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லாரி டிரைவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு … Read more

குளிர்கால ஒலிம்பிக்கில் மொழி பிரச்சனையை கடக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா <!– குளிர்கால ஒலிம்பிக்கில் மொழி பிரச்சனையை கடக்க தொழில்நுட்ப… –>

சீனாவில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், செயற்கை நுண்ணறிவு செயலி உதவியுடன் சீன வணிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் , பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு வேண்டியதை ஸ்மார்ட் போனில் குரல் மூலம் பதிவு செய்ய, அதை அந்த பிரத்யேக செயலி மாண்டரினுக்கு மொழி பெயர்ப்பு செய்து வணிகர்களுக்கு குரல் வடிவில் தெரிவிக்கிறது. அதே போல வணிகர்கள் … Read more

அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயார்- புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற செய்தி பரவி வருவதால், போர் பதற்றம் நீடிக்கிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா, படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. இந்த நெருக்கடி குறித்தும், எல்லையில் படைகள் … Read more

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மனைவிக்கும் கோவிட்| Dinamalar

லண்டன் : பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மனைவி கமீலாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு, 73, கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது சில நாட்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. அரண்மனையிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், சார்லஸ் மனைவி கமீலாவுக்கும்,74, தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கமீலாவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த வாரம், விண்ட்சர் மாளிகையில் ராணி எலிசபெத்தை சார்லஸ் சந்தித்துள்ளார். இதையடுத்து, எலிசபெத்துக்கும் பரிசோதனை … Read more

2 பேருக்குக் கரோனா: டோங்காவில் ஊரடங்கு அமல்; எரிமலை சீற்றத்திலிருந்து விடுபடுவதற்குள் புதிய சிக்கல்

நுகு அலோபா: பல மாதங்களுக்குப் பின் புதிதாக இரண்டு பேருக்குக் கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று ஒரு நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தீவு தேசமான டோங்கா. ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான தீவுக் கூட்டம்தான் டோங்கா. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் கடல் தேசமாகப் போற்றப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. இந்த … Read more