ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா. வலியுறுத்தல்

ஜெனீவா: உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது. இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ்,  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில்… ஒதுங்கியே இருக்கிறோம்?

நியூயார்க்:உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஐ.நா., பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் ஒதுங்கியே இருக்க முடிவு செய்துள்ள இந்தியா, இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல், தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திடாமல் தவிர்த்துள்ளது.சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பின், அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வந்தது. … Read more

பாகிஸ்தான்: பஸ் – லாரி மோதி விபத்து – 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் வரை காயமடைந்துள்ளனர். முன்னதாக பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் மாவட்டத்தில் பயணிகள் பேருந்தும் லாரி ஒன்றும் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

அணு ஆயுத மும்முனைப் படைகள் தயார் – பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ரஷ்யாவின் அறிவிப்பு

கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கார்கிவ் நடந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அணு ஆயுதப் படை தயாராக உள்ளது என ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்து இருநாடுகளும் பெலாரஸில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நேரப்படி … Read more

உயிர்ப் பிச்சை தர்றேன்.. ஓடிப் போயிருங்க.. ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

ரஷ்ய வீரர்கள் தங்களது தாக்குதலை நிறுத்தி விட்டு, உக்ரைனை விட்டு வெளியேறி உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கிட்டத்தட்ட உயிர்ப் பிச்சை தருகிறேன், ஓடிப் போய்ருங்க என்று உக்ரைன் அதிபர் மறைமுகமாக கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து நான்கு நாட்களாகிறது. போர் நிற்பதாகத் தெரியவில்லை. உக்ரைனும் சரி, ரஷ்யாவும் சரி தங்களது நிலைப்பாட்டிலிருந்து விலகவில்லை. ரஷ்யாவோ ஒரு படி மேலே போய், அணு ஆயுதங்களை சிறப்பு ஆயத்த … Read more

ரஷ்யா – உக்ரைன் போரை அமெரிக்கா தடுக்கத் தவறியதாக டிரம்ப் குற்றச்சாட்டு <!– ரஷ்யா – உக்ரைன் போரை அமெரிக்கா தடுக்கத் தவறியதாக டிரம்ப் … –>

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தடுக்கத் தவறியது அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கையாளாகதத் தனத்தை காட்டுவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். பொதுகூட்டம் ஒன்றில், ரஷ்ய அதிபர் புடினின் போர் தந்திரங்களை டிரம்ப் வெகுவாகப் பாராட்டினார். பல்வேறு உலக நாடுகள் புடினுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டிரம்ப் இவ்வாறு பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்த டிரம்ப், புடின் புத்திசாலியாக இருப்பதில் பிரச்சனை இல்லை என்றும், அமெரிக்க … Read more

ஆபத்து… ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்- அமெரிக்கா அறிவுறுத்தல்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 5வது நாளாக தாக்குதல் நடத்துகிறது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததுடன், உக்ரைனுக்கு உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் தடைகளை விதித்துவருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே ரஷியாவுக்கு அமெரிக்கர்கள் … Read more

கால்பந்து மைதானத்தில் உக்ரைன் வீரரை நெகிழ வைத்த ஆதரவுக் குரல்! – வைரல் வீடியோ

வார்சா: ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி மைதானத்தில் உக்ரைன் வீரரை ஆதரவுக் குரல்கள் நெகிழ்ந்து உதடு துடிக்க அழவைத்தன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்த அணிகளின் போட்டிதான் இந்த ப்ரீமியர் லீக் போட்டி. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்திக் கொண்டிருக்கிறது. போரை நிறுத்துமாறு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகர் தென் கொரியாவின் சீயோல் நகர் வரை போராட்டங்கள் நடந்து வருகின்றன. போர் எதற்கும் தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து … Read more

4,500 ரஷ்ய வீரர்கள் பலி – உக்ரைன் பதிலடி!

ரஷ்யாவைச் சேர்ந்த 4 ,500 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. சோவியத் யூனியன் அமைப்பில் இருந்து, உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, ரஷ்யா – உக்ரைன் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, உக்ரைன் அச்சுறுத்தும் வகையில், எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. … Read more