தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.! <!– தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவி… –>

தெற்கு பொலிவியா Chuquisaca மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர். Chuquisaca மாகாணத்தில் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தில் சரிந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா

லண்டன் : இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரை கொரோனா தொற்றிய நிலையில், தற்போது 2-வது முறையாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் சார்லசின் மனைவியும், இளவரசியுமான கமிலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று … Read more

48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவுக்கு, உக்ரைன் `கெடு'

1 லட்சம் படை வீரர்கள் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த … Read more

தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ; போராட்டத்தை ஒடுக்க அவசர நிலை அதிகாரம் அமல்!

கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில், தீவிரமடையும்  டிரக்கர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவசரகால அதிகாரங்களை ஜஸ்டின் ட்ரூடோ கோருகிறார். தேசிய நெருக்கடியாக மாறியுள்ள டிரக்கர்கள் தலைமையிலான போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர,  தனது தந்தையும் முன்னாள் பிரதமரும் ஆன பியர் ட்ரூடோ  வழியை பின்பற்றி, கூடுதல் அதிகாரங்களை வழங்க, அவசரகாலச் சட்டத்தை ட்ரூடோ செயல்படுத்துகிறார். அவசர அதிகாரத்தை அமல்படுத்துகையில், இராணுவம் நிறுத்தப்படாது என்றாலும் முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்களை அகற்றும் பொருட்டு எதிர்ப்பாளர்களை கைது செய்வதற்கும் அவர்களின் டிரக்குகளை கைப்பற்றுவதற்கும், அத்துடன் … Read more

தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: “தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்“ என அமெரிக்க ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத் தெரிவித்துள்ளார். உலகளவில் மிக அதிகமான கரோனா நோயாளிகளையும், கரோனா உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது அமெரிக்கா. ஆனால், அங்கு இன்னும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கலகம் செய்து கொண்டிருக்கின்றனர். ராணுவத்திலும் ஒரு குறிப்பிட்ட சாரார் தடுப்பூசி போடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத், “ராணுவத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களால் படைகளின் மற்ற வீரர்களுக்கு அச்சுறுத்தல். படைகளை எப்போதும் தயார்நிலையில் … Read more

ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி.! <!– ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண… –>

ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Ebenhausen-Schaeftlarn ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களும் வந்த தால் விபத்து நேரிட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த தும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். Source link

எல்லைப் போராட்டம் எதிரொலி – 50 ஆண்டுக்கு பின் கனடாவில் அவசரநிலை சட்டம் அமல்

கனடா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் … Read more

ஹாங்காங்கில் 3 வயது குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி!| Dinamalar

ஹாங்காங் : ‘மூன்று வயது குழந்தைகளுக்கும் இன்று(பிப்.,15) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என, ஹாங்காங் அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐந்து வயது குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முதல் மூன்று வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே … Read more

இந்தியாவும், சீனாவும் எல்லை ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும் ஜெய்சங்கர் கருத்துக்கு சீனா பதில்

பீஜிங்,  ஆஸ்திரேலியாவில் ‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு சீனாதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு பதில் கூறும் விதமாக சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியா-சீனா இரு நாடுகளும் தாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும், எல்லைப் பகுதியில் கூட்டாக … Read more

இனி ‘துருக்கி’ அல்ல ‘துருக்கியே’ : துருக்கி அதிபர் எர்டோகன்

இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என்று தன்னை வர்ணிக்கும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது நாட்டின் பெயரை மாற்றியுள்ளார். இனி துருக்கி (Turkey) இல்லை, அதை துர்க்கியே (Turkiye) என்று அழைக்கப்படும் என துருக்கி அதிபர் அறிவித்தார். அதாவது, இப்போது துருக்கிக்கு பதிலாக துருக்கியே என்ற பெயர் தான் அனைத்து வகையான வணிகம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திர வேலைகளுக்கு பயன்படுத்தப்படும். அதிபரின் அறிவிப்பு துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். … Read more