3 வயது குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி| Dinamalar

ஹாங்காங் : நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில்உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இன்று முதல், 3 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் : நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில்உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more

பிரான்சில் உள்ள மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..!

பாரிஸ்,  தெற்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) காலை தெற்கு பிரான்சின் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது. பின்னர் தீ மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியது.  இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட … Read more

சாலையில் ஹாக்கி விளையாட்டு… – கனடாவை திணறிடிக்கும் லாரி ஓட்டுநர்களின் போராட்டம்

ஒட்டாவா: கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்டுநர்களுக்கு … Read more

பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை செய்யப்பட்ட வழக்கு – சகோதரரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்

லாகூர்: பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆணாதிக்க கொள்கைகளை எதிர்த்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக் களையும் வெளியிட்டதன் மூலம் சமூக வலைத்தள நட்சத்திரமாக கருதப்பட்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன குவான்டீல் பலூச், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட முல்தான் நகரில் உள்ள வீட்டில் கடந்த 2016ம் ஆண்டு பிணமாக கிடந்தார்.  குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் அவரை கழுத்தை நெறித்து கொன்று விட்டதாக பலூச்சின் சகோதரர் முகமது வாசிம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில்  … Read more

இம்ரானிடமிருந்து 3வது மனைவி பிரிவு?| Dinamalar

இஸ்லாமாபாத் : பாக்., பிரதமர் இம்ரான்கானை விட்டு அவரின் மூன்றாவது மனைவி, புஷ்ரா மனேகா பிரிந்து தனியே வசிப்பதாக தகவல்வெளியாகியுள்ளது.பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,பாகிஸ்தான் – டெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், ஜெமீமா கோல்டுஸ்மித், ரெஹம் கான் ஆகியோரை மணந்து பிரிந்தவர். கடந்த, 2018ல் புஷ்ரா மனேகா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். புஷ்ராவுக்கு முன்னாள் கணவர் வாயிலாக, ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்கள் யாரும் தன் வீட்டிற்கு … Read more

விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்: ஆப்கன் வெளியுறவு அமைச்சர்

விரைவில் சர்வதேச அங்கீகரம் பெறுவோம் என்று ஆப்கனில் ஆட்சி செய்யும் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை … Read more

ஜிம்பாப்வே நாட்டில் 90 சதவீத ஆசிரியர்கள் இடை நீக்கம்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக  அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.  பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் கடந்த வியாழன் அன்று எச்சரித்திருந்தது. எனினும் போராட்டம் தொடரும் நிலையில், பொதுப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 1, 40,000 பேரில் 1,35,000 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீத ஆசிரியர்களை அரசு இடை நீக்கம் … Read more

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் – அபு இப்ராஹிம் அல் குரேஷி யார்?

வாஷிங்டன்: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி நேற்று இரவு கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பைடன், “நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷியை கொன்றுள்ளோம். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் எல்லை மற்றும் … Read more

மாஸ்க்குக்கு பதில் இனி கோஸ்க்?- தென் கொரியாவில் அறிமுகம்

சியோல்: தென் கொரியாவில் கரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து பரவிய கரோனா, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலகில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று அதன் வேற்றுருக்கள் அடுத்தடுத்து தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கரோனாவிலிருந்து நம்மை முழுவதுமாக காப்பது முகக்கவசமும், … Read more

கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை 2 சிறுத்தை பூனைகள் மீட்பு <!– கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை 2 சிறுத்தை பூனைக… –>

பாகிஸ்தானில் கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த இரண்டு சிறுத்தை பூனைகள் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. பார்ப்பதற்கு சிறுத்தை குட்டி போல் இருக்கும் இந்த அரியவகை காட்டுப்பூனைகளை வீட்டில் வளர்ப்தற்கும், அவற்றின் ரோமங்களுக்காகவும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. கராச்சி நகரில் 85,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த சிறுத்தை பூனை ஜோடியை, வனத்துறையினர் மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி பின் மர்கலா மலைப்பகுதியில் விட்டனர். Source link