மதத்தை அவமதித்ததாக ஒருவரை அடித்து கொன்ற கும்பல்- 80 பேர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த ஆலை மேலாளர் பிரியந்தகுமாரா என்பவரை கும்பலாக சேர்ந்து அடித்து கொன்றனர். பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது போன்ற சம்பவம் மீண்டும் பாகிஸ்தானில் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் கானேவால் மாவட்டத்தில் மதத்தை அவமதித்ததாக கூறி ஒருவரை பலர் கும்பலாக சேர்ந்து … Read more

Russia – Ukraine: உக்ரைனில் போர் மேகங்கள்; உச்சகட்ட பதற்றம்; விமானங்களும் ரத்து!

மாஸ்கோ: உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும்நோக்கில், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே வார இறுதியில் பேச்சு வார்த்தையில் எந்த வித பயனும் ஏற்படாத நிலையில்,  உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.  உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு அறிவுறுத்திய நிலையில்,  இஸ்ரேலும் தன் குடிமக்களை அவசரமாக நாட்டை விட்டு கிளம்ப சொல்லி மீட்டுகொண்டிருப்பதால் உக்ரைன் யுத்தம் தவிர்க்கபட முடியாதது போன்ற  தோற்றம் நிலவுகின்றது. இங்கிலாந்து உள்ளிட்ட … Read more

மூத்த பணியாளர்களை 'டைனோபேபிஸ்' என அழைத்த ஐபிஎம் மின்னஞ்சல்கள்: நீதிமன்றம் சென்ற சர்ச்சையின் பின்புலம்

நியூயார்க்: வயதில் மூத்த பணியாளர்களை ஐபிஎம் நிறுவனத்தின் மேலதிகாரிகள் ‘டைனோபேபிஸ்’ (Dinobabies) எனக் குறிப்பிட்டு, அவர்களை காலஞ்சென்ற உயிரினமாகக் கருதி வேலையைவிட்டு நீக்கிவிட்டு இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று பேசிக்கொண்ட இ-மெயில் கசிந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஐபிஎம். உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 3,50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும் தொழில் போட்டி, வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் நெருக்கடியை இந்நிறுவனம் … Read more

கோவிட் "அலைகள் ஓய்வதில்லை".. அடுத்தடுத்து வரும்.. ஒழியாது.. விஞ்ஞானிகள்

கொரோனாவைரஸ் பரவல் இப்போதைக்கு ஓயாது.. நிரந்தரமாக அது இருக்கவே வாய்ப்புள்ளது. அடுத்தடுத்து புதிய புதிய அலைகள் வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனாவைரஸ் பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. அடுத்தடுத்து 3 அலைகளை இந்தியா கண்டு விட்டது. பிற நாடுகளிலும் அடுத்தடுத்து அலைகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது ஓமைக்ரான் பரவல் உள்ளது. இந்தியாவில் இந்த பரவல் தற்போது தணிந்து வரும் நிலையில் ஓமைக்ரானோடு கொரோனா பேரிடர்காலம் முடிவுக்கு வரும் என்று … Read more

எல்லையில் படைகளை குவித்திருப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு உக்ரைன் அழைப்பு <!– எல்லையில் படைகளை குவித்திருப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை … –>

உக்ரைன் எல்லையில் படைகளை குவித்திருப்பது தொடர்பாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் வியன்னா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் விடுத்த கோரிக்கைகளுக்கு ரஷ்யா பதிலளிக்க தவறிவிட்டதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இதன் விளைவாக தாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் தங்கள் நாட்டு எல்லையிலும், கிரீமியா பகுதியிலும் ரஷ்யா படைகளை வலுப்படுத்தி வருவது குறித்தும் அவற்றை … Read more

எல்லையில் போர் பதற்றம்: உக்ரைனுக்கு விமான போக்குவரத்து ரத்து

கீவ்: ரஷியா – உக்ரைன் நாடுகள் இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்த படியே இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடி மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தூதரகங்களும் … Read more

கனடா போராட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை; பலரை கைது செய்ய உத்தரவு

கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில்  பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கனடாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. டிரக் ஓட்டுநர்கள் முக்கிய சாலைகளை அடைத்துக் கொண்டு போராடுவதால்,  பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்க கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  கனடா தலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுநர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாடினார். போராட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் … Read more

ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு; பதவியேற்பு விழாவில் ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சு <!– ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர… –>

ஜெர்மனியின் அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபரை தேர்வு செய்யும் சிறப்பு கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள் மற்றும் 16 மாகாணங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் 2 வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் உரையாற்றிய பிரான்க் ஸ்டீன்மையர், உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரம் குறித்து பேசினார். … Read more

ஆஸி., கிரிக்கெட் வீரர் திருமணத்துக்கு தமிழில் பத்திரிகை அடித்து அசத்தல்| Dinamalar

மெல்பர்ன்:பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை, மார்ச் 27ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இதற்காக தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்துள்ளது, நிச்சயதார்த்தம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 31, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியான வினி ராமன், 26, என்ற தமிழ்ப் பெண்ணை சந்தித்தார். அவர்களுக்கு இடையில் காதல் ஏற்படவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.இதையடுத்து 2020ல் இருவீட்டாரின் சம்மதத்துடன் … Read more

Wi-Fi இணைப்பை துண்டித்ததால், குடும்பத்தையே சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவன்!

இணையம் பல்வேறு வகையில் நமது தகவல்களை அள்ளிக் கொடுக்கும் களஞ்சியமாக இருந்தாலும், அதனிடம் அடிமையாகி, அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று வெறித்தனமான செயலுக்கு சிலர் தூண்டப்படுகின்றனர். அதிலும் சிறுவர்கள் சிலரும் அடிமையாகி, அது கிடைக்காமல் போனால், கொலை, கொள்ளை என இறங்கி விடும் சம்பவங்கள் அதிர்ச்சிகளை கொடுப்பதாக உள்ளன. ஸ்பெயினில் இது போன்ற சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் ஒருவர் Wi-Fi இணைப்பை துண்டித்ததால், ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன் ஒருவன் … Read more