மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் முடிவு!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து … Read more

பீட்சாவை போல் காட்சியளிக்கும் வியாழன் கோள்.. பீட்சா தினத்தை முன்னிட்டு நாசா வெளியிட்டுள்ள வீடியோ..! <!– பீட்சாவை போல் காட்சியளிக்கும் வியாழன் கோள்.. பீட்சா தினத்… –>

பீட்சாவை போல் காட்சியளிக்கும் வியாழன் கோளின் புதிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. ஜூனோ விண்கலம் பதிவு செய்த வியாழன் கோளின் மேல்பரப்பின் காட்சிப் பதிவை, பீட்சா தினத்தை முன்னிட்டு நாசா அமைப்பு வெளியிட்டது. இது குறித்து தெரிவித்த அந்த அமைப்பு, பீட்சா போல் காட்சியளிக்கும் வியாழனின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிறப் பகுதி மிக வெப்பமானதாகவும், கரு நிறப்பகுதி குளிர்ச்சி மிகுந்ததாகவும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இணையதளத்தில் அதிக நபர்களால் … Read more

மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு – அரசு திடீர் விளக்கத்தால் பரபரப்பு!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, … Read more

கனடாவில் வலுக்கும் போராட்டம் – லாரி டிரைவர்களுக்கு ஆதரவாக இணைந்த பொதுமக்கள்

கனடா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு … Read more

முதல் லாட்டரி சீட்டிலேயே ₹35 கோடி; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பெண்மணி!

இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு அதிர்ஷ்டம் என்பது கூரை பிய்த்து கொண்டு கொட்டியுள்ளது. கணவர் பல வருடங்களாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தார். ஆனால் தற்போது வரை லாட்டரியில் இருந்து ஒரு ரூபாய் கூட வெல்ல முடியவில்லை. ஆனால்,  மனைவி முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கி முதல் முறையாக ₹35 கோடி மதிப்புள்ள பங்களாவை வென்றார். பென் என்ற நபர் பல ஆண்டுகளாக ஓமேஸின் லாட்டரியை வாங்கும் பழக்கம் இருந்தது. இருந்தாலும் இந்த முறை … Read more

மெக்சிகோவில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை <!– மெக்சிகோவில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை –>

மெக்சிகோவில் அண்மையில் 3 செய்தியாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் 5 பத்திரிக்கையாளர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். வியாழன் அன்று ஓவஹாக்கா  மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்ட ஹெர்பெர் கோபஸின் அஞ்சலி கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.   Source link

உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

லண்டன்: உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- “ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்படுவது … Read more

Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குரானை அவமதித்ததாகக் கூறி நடுத்தர வயது நபர் ஒருவரை பொது மக்கள் கல்லெறிந்து கொன்றனர். மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஜங்கிள் தேரா கிராமத்தில் ஒரு நபர் குர்ஆனின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்ததாக செய்திகள் வந்ததையடுத்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் அங்கு திரண்டனர். குரானின் பக்கங்களை எரித்ததாக கூறி, நடுத்தர வயது நபரை சுற்று வளைத்து, கல் எறிந்து படு கொலை செய்ததோடு, அவரின் சடலத்தை … Read more

போராட்டக்காரர்களை கலைக்க பலத்த சப்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்த போலீசார்-நடனமாடி போலீசாரை வெறுப்பேற்றிய போராட்டக்காரர்கள் <!– போராட்டக்காரர்களை கலைக்க பலத்த சப்தத்துடன் பாடல்களை ஒலிக்… –>

நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் அதீத சப்தத்துடன் பாடல்களை ஒலிக்க விட்ட நிலையில், சற்றும் பின்வாங்காத போராட்டக்காரர்கள், பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி போலீசாருக்கு வெறுப்பேற்றினர். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றம் செல்லும் சாலைகளின் குறுக்கே கனரக வாகனங்களை நிறுத்தியும், கூடாரங்களை அமைத்தும் 6 நாட்களாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். கனமழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்தனர். அதற்கும் அசராத ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆடி பாடி உற்சாகமடைந்தனர். … Read more

நியூசிலாந்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- புதிதாக 810 பேர் பாதிப்பு

கொரோனா தொற்று பரவல் ஒரு சில நாடுகளில் குறைந்து வந்தாலும். நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. நியூசிலாந்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 9ம் தேதி 334, 10ம் தேதி 476, 11ம் தேதி 464 என பதிவாகியருந்தது. இந்நிலையில், நியூசிலாந்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மட்டும் 623 பேருக்கு கொரோனா … Read more