ஸ்பெயினில் பறவைக் காய்ச்சல் எதிரொலி.. ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் கொன்று அழிப்பு <!– ஸ்பெயினில் பறவைக் காய்ச்சல் எதிரொலி.. ஒரு லட்சத்து 30 ஆயி… –>

ஸ்பெயினில் பறவைக் காய்ச்சல் பரவுவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்டன. பறவைகளிடம் இருந்து வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிகள் கொல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இனப்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, செர்பியா நாடுகளில் இருந்து வந்த பறவைகள் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Source link

தைவானில் கடும் நிலநடுக்கம்

தைவான் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியன் கவுண்டி என்ற இடத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக சீன நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

பாக்.,கில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை; இம்ரான் கான் ஒப்புதல்| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைப்புகளில் உள்ள கோளாறு காரணமாக, ஆட்சிக்கு வந்த புதிதில் அளித்த உறுதிப்படி, நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். சிறப்பாக செயல்பட்ட அமைச்சகங்கள் மற்றும் பிரிவுகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த புதிதில், புரட்சிகரமான நடவடிக்கை மூலம் உடனடியாக மாற்றங்களை கொண்டு வர விரும்பினோம். ஆனால், பின்னர் தான் அதிர்ச்சியை தாங்கும் திறன் எங்கள் அமைப்பிற்கு இல்லை என்பதை … Read more

ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

உக்ரைன் எல்லையில் ரஷ்ய தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  எல்லையில் எந்த ந்நேரமும் போர் மூளலாம் என்ற வகையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், யாருடைய பேச்சையும் ரஷ்யா கேட்கும் நிலையில் இல்லை.  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு … Read more

பொதுவெளியில் மக்கள் முககவசம் அணிய அவசியமில்லை – இத்தாலி அரசு <!– பொதுவெளியில் மக்கள் முககவசம் அணிய அவசியமில்லை – இத்தாலி அரசு –>

இத்தாலியில் பொதுவெளியில் மக்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை கொண்டாடும் விதமாக மக்கள் முக கவசத்தை துறந்து மற்றவர்களை புன்னகையால் வசீகரிக்குமாறு அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டும் அதிக கூட்டம் கூடும் இடங்கள் மற்றும் உள்ளரங்கு நிகழ்வுகளில் மட்டும் மக்கள் முக கவசம் அணிய வேண்டுமென அரசு அறிவுறுத்தி உள்ளது. தொற்று நாளுக்கு நாள் குறைந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் … Read more

ஜப்பான் தொழிற்சாலையில் தீ- 4 தொழிலாளர்கள் பலி

டோக்கியோ: ஜப்பானில் வடகிழக்கு பகுதியான நிஜிகாடே என்ற இடத்தில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் 22-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 … Read more

இரண்டே நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: அடுத்த இரண்டு நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என வெள்ளை மாளிகை கணித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. ஆனால், எந்த சமாதானத்தையும் ஏற்காத ரஷ்யா இன்னும் இரண்டே நாட்களில் உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் கணித்துள்ளன. … Read more

இந்தியாவுக்கு அபாயம் காத்திருக்கு.. சீனா வாலாட்டப் போகிறது.. அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவின் பூகோள அமைப்பில் மாற்றங்கள் வரப் போகிறது. குறிப்பாக சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு பெரும் சவால்கள் காத்துள்ளன என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதே எச்சரிக்கையைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கொடுத்து வருகிறார். எல்லைப் பகுதியில் சீனா பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. குடியிருப்புகளைக் கட்டுகிறது, பாலம் கட்டுகிறது. ஆனால் இந்தியா கவலைப்படாமல் இருப்பதாக ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். சீனாவும், பாகிஸ்தானும்தான் இந்தியாவுக்கு அபாயகரமானவையாக உள்ளன. அதுகுறித்து இந்தியா தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரி … Read more

தொழில்நுட்பக் கோளாறால் டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கம்.. <!– தொழில்நுட்பக் கோளாறால் டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்க… –>

டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர் கணக்கில் பயனாளர்கள் பதிவிட இயலாத நிலை காணப்பட்டது. இப்பிரச்சினை உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும் நிலைமை சீராகி இயல்புக்கு வந்துவிட்டதாகவும் டிவிட்டரின் தொழில்நுட்பக் குழுவினர் அறிவித்துள்ளனர் Source link

2-வது மனைவியை விவாரத்து செய்த நாளில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 49 வயது அரசியல் பிரமுகர்

பாகிஸ்தானின் பிரபல கட்சியின் பிரமுகராக இருப்பவர் ஆமிர் லியாகத். இவருக்கு 49 வயதாகிறது. இவர் ஏற்கனவே, முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்திருந்தார். 2-வது மனைவி கடந்த புதன்கிழமை ஆமிர் லியாகத்திடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்தார். உடனடியாக, லியாகத் 18 வயதான இளம் பெண்ணை அன்றைய தினமே திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை அவர் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ள லியாகத், … Read more