உலக அளவில் திடீரென முடங்கிய டுவிட்டர், யூடியூப் – பயனாளர்கள் அவதி…!

வாஷிங்டன், டுவிட்டர் மற்றும் யூடியூப் சமூகவலைதளங்களில் முன்னோடியாக உள்ளது. இந்த இணையதள பக்கங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடங்கின. இதனால், டுவிட்டர் மற்றும் யூடியூபை பயன்படுத்தமுடியாமல் பயனாளர்கள் அவதியடைந்தனர். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் டுவிட்டர், யூடியூப் சேவை முடங்கியது.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய டுவிட்டர், … Read more

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை <!– உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு ஜோ … –>

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் என்று அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார், உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் பீரங்கி பயிற்சிகள், படைகள் குவிப்பு காரணமாக எந்நேரமும் படையெடுப்பு நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. போரைத் தவிர்க்க பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரைனில் மீதமிருக்கும் அமெரிக்கர்கள் இப்போதே வெளியேற வேண்டும் என்றும், பிரச்னை விரைவில் மோசமடையக் கூடும் என்றும் பைடன் கூறியுள்ளார். ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் அமெரிக்கர்களைக் காப்பாற்ற அமெரிக்காவும் படைகளை அனுப்பினால் அது … Read more

ஆப்கானிஸ்தானின் நிலைமை அண்டை நாடுகளுக்கு கவலையளிக்கிறது: வெளியுறவுத் துறை இணை அமைச்சர்

புது டெல்லி,  ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, அண்டை நாடுகளுக்கு கவலையை அளிப்பதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்தார். இதுகுறித்து மக்களவையில் அவர் கூறும்போது, மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. உச்சிமாநாட்டில், மனிதாபிமான உதவி, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், பாதுகாப்பு உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் குறித்த பிரச்சினைகள் அண்டை நாடுகளுக்கு இயற்கையாகவே கவலையை அளிப்பதாக பல நாடுகளின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் … Read more

Quad 2022: வடகொரியா, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு குவாட் மாநாட்டில் மறைமுக எச்சரிக்கை!

மெல்பர்ன்: சுதந்திரமான மற்றும் சிறப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது குவாட் தலைவர்களின் மாநாடு. இந்தச் சந்திப்பில் வட கொரியாவுக்கு நேரடியாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு மறைமுகமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (2022, பிப்ரவரி 11) மெல்போர்னில் நடைபெற்ற குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டின் 4வது பதிப்பில், ​​இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.   எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், இந்தியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் … Read more

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு

வாஷிங்டன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது. இதனால்,உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.  இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசியதாவது: உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.உளவுத்துறை மூலம் … Read more

அமெரிக்கா தங்கள் நோக்கங்கள் நிறைவேற பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டது – இம்ரான்கான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3-ம் தேதி முதல் 6 வரை சீனா சென்றார். அங்கு பிஜீங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இம்ரான்கான் பங்கேற்றார். சீன பயணத்தின் போது இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இம்ரான்கான், தேவைப்படும்போது அமெரிக்கா பாகிஸ்தானுடன் உறவை ஏற்படுத்துகிறது. இதனால், ரஷியாவுக்கு பாகிஸ்தான் எதிரியாகிறது.  தங்கள் நோக்கங்கள் … Read more

நேபாளத்தில் காலணி கடையில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு

லும்பினி, நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் துளசிபூர் நகரில் காலணி கடை ஒன்று அமைந்து உள்ளது.  இந்நிலையில், கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  தீ விபத்தில் 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அவர்கள் சஜிதா கட்டூன் (வயது 13), ஹசன் பக்ஷ் (வயது 14), மசின் … Read more

திடீரென முடங்கியது டுவிட்டர் வலைதளம் – அவதியடைந்த பயனாளர்கள்

உலகம் முழுவதும் நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைதள சேவை திடீரென முடங்கியது.  இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகாரளித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் பிறகு டுவிட்டர் வலைதளம் செயல்பாட்டிற்கு வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. ட்வீட்களை இடுகையை தடுக்கும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது, நிலைமை சீரடைந்து விட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் … Read more

எய்ட்ஸ் நோய்க்கான வைரசை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி காலமானார்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வைரஸ் விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவரான லக் மான்டேக்னீயர் பாரீஸ் புறநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.  அவருக்கு வயது 89.  எய்ட்ஸ் எனப்படும் ஆள்கொல்லி நோயை ஏற்படுத்த கூடிய எச்.ஐ.வி. எனப்படும் வைரசை கண்டறிந்தவர்களில் லக் ஒருவர் ஆவார். கடந்த 2008ம் ஆண்டு பிரான்கோயிஸ் பர்ரே-சினோவ்சி மற்றும் ஹரால்டு ஜர் ஹாசன் ஆகியோருடன் அவர் மருத்துவ துறைக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார். லக் மற்றும் சினோவ்சி ஆகிய … Read more

லிபியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்ல முயற்சி <!– லிபியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்ல முயற்சி –>

லிபியாவில் பிரதமர் Abdulhamid al-Dbeibah கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பிரதமரின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த எந்த தகவலுமில்லை என்றும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு குளறுபடிகளால் பிளவுபட்டு கிடக்கும் லிபியாவில், தேர்தல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. தேர்தலுக்கு பின்னரே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகுவேன் என Abdulhamid al-Dbeibah … Read more