உலக செய்திகள்
உடனே வெளியேறுங்கள்: நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்!
உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி … Read more
அதிபராக பதவிவகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை கிழித்து கழிவறையில் டிரம்ப் கொட்டியதாக தகவல் <!– அதிபராக பதவிவகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை கிழித்து… –>
அமெரிக்கா அதிபராக பதவிவகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை கிழித்தெறிந்து வெள்ளை மாளிகையின் கழிவறையில் டொனால்ட் டிரம்ப் கொட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. புளோரிடாவில் உள்ள டிரம்பின் பண்ணை வீட்டில் இருந்து 15 பெட்டிகளில் அரசு சார்ந்த ஆவணங்களை திங்கட்கிழமையன்று அந்நாட்டின் தேசிய ஆவண காப்பக அலுவலகம் மீட்டது. அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப், இந்த ஆவணங்களை தன்னுடனே எடுத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகை ஆவணங்கள் … Read more
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் குவாட் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு
சிட்டி: உக்ரைன் மற்றும் பல்வேறு விஷயங்களில் ரஷியா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் குவாட் நாடுகளின் கூட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று நடக்கிறது. இந்த குவாட் நாடுகள் கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளியுறவுத்துறை மந்திரி ஹயாஷி யோஷிமாசா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் … Read more
அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை| Dinamalar
வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் பீரங்கி பயிற்சிகள், படைகள் குவிப்பு காரணமாக எந்நேரமும் ஊடுருவல் நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அமெரிக்கர்களை விரைந்து வெளியேறும்படி அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா – அமெரிக்கா இடையே பனிப்போருக்கு பின்னர் தற்போது உச்சக்கட்ட பதட்டம் நிலவுகிறது. உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 1.3 லட்சம் ரஷ்ய வீரர்கள் படைப் பிரிவுகளாக உள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. மேலும் ரஷ்யாவின் கூட்டு நாடான பெலாரசிற்கு சமீபத்தில் பீரங்கிகளை … Read more
"வேர்டில் ஸ்கோர்" வரலையே.. மம்மிக்கு என்னாச்சோ.. பதறிய மகள்.. மீட்கப்பட்ட பாட்டி!
வேர்டில் விளையாட்டு ஒரு மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும் பாஸ். அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. வேர்டில் என்பது ஒரு வார்த்தை விளையாட்டு.. அதாவது ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு 6 சாய்ஸ் தரப்படும். நீங்கள் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க உங்களுக்கு ஸ்கோர் ஏறிக் கொண்டே வரும். இந்த விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. ஆறிலிருந்து 60 வயது வரை அனைவருமே இந்த வேர்டில் … Read more
வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை – ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் <!– வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப… –>
வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் யாரும் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள SETI அமைப்பின் ஆய்வாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள முர்ச்சிசன் வைட்ஃபீல்ட் அரே என்ற உலகின் மிக உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்தனர். 144 வெளிக் கோள்களையும், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் SETI ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட நீண்ட ஆராய்ச்சியின் போது, நட்சத்திரங்கள் மற்றும் … Read more
மேற்கில் காட்டுத் தீ, கிழக்கில் கனமழை- ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கும் கடுமையான வானிலை
ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ இன்னும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை அறிவித்துள்ளது. மேலும், சில உள்ளூர் பகுதிகளுக்குள் நுழையவும் … Read more
பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு <!– பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் … –>
தென் அமெரிக்க நாடான பெருவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். Pataz மாகாணத்தில் மலைப்பாதையில் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த 100 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்காலம் என அதிகாரிகள் தெரிவித்தனர். Source link
உக்ரைனில் பதட்டம் நீடிக்கும் நிலையில் பெலாரஸ் நாட்டில் ரஷியா போர் பயிற்சி
மின்ஸ்க்: சோவியத் யூனியன் கடந்த 1991-ம் ஆண்டில் சிதறிய போது அதில் அங்கமாக இருந்த உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உக்ரைன் எல்லை அருகே சுமார் 1 … Read more