காடுகள் வழியாக ஊருக்குள் புகுந்து.. உள்ளூர்க்காரர்களாக மாறி.. தாக்கும் ரஷ்ய ராணுவம்!

ரஷ்ய ராணுவத்தினர், மாறு வேடத்தில் உக்ரைனுக்குள் புகுந்து, உள்ளூர்க்காரர்கள் போல செயல்பட்டு, உள்ளூர்க்காரர்களையே கொல்வது அதிகரித்து வருகிறது. இதனால் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் வசிக்கும் உக்ரைனியர்கள் பீதியடைந்துள்ளனர். ரஷ்யர்களுக்கும் ,உக்ரைனியர்களுக்கும் இடையே வேறுபாடு காண்பது சிரமம். மொழிப் பிரச்சினையும் கிடையாது. இதனால் யார் ரஷ்யர், யார் உக்ரைனியர் என்று பிரித்துப் பார்க்கவே முடியாது. இதைப் பயன்படுத்தி உக்ரைனுக்குள் கால் நடையாக ஊடுறுவுகிறார்கள் ரஷ்யர்கள். எல்லைப் பகுதியில் உள்ள காடுகள் வழியாக உக்ரைனுக்குள் நுழையும் ரஷ்யர்கள், உள்ளூக்காரர்கள் போல … Read more

கீவ்வில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அடுத்தடுத்து 4 குண்டுவீச்சால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் <!– கீவ்வில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அடுத்தடுத்து 4 குண்… –>

உக்ரைன் தலைநகர் கீவ்வில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில் மக்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவுறித்தி உள்ளது. Druzhby Narodiv மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து கீவ், லிவிவ், கீவ் ஓபிளாஸ்ட், உள்ளிட்ட பகுதிகளுக்கு விமான தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இதனிடையே கெர்சன் பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரைச் சுற்றி ரஷ்யப் படைகள் … Read more

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு கொரோனா

கான்பெர்ரா : ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு (வயது 53) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளன. அடுத்த வாரம் குணம் அடைவேன். நான் பிரதமராக தொடர்வேன்” என கூறி உள்ளார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுள்ளார். மேலும் 2 கூடுதல் ‘டோஸ்’களையும் செலுத்தி உள்ளார். இந்த நிலையில்தான் கொரோனா … Read more

“உக்ரைனில் பணயக் கைதிகளாக இந்திய மாணவர்கள்”- ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி, உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷிய அதிபர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதிலும் குறிப்பாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் கார்கிவ் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவது குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் … Read more

நீடித்துவரும் போரை முடிவுக்கு கொண்டுவர 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ரஷ்யா அறிவிப்பு: உக்ரைன் ஆலோசனை

மாஸ்கோ: உச்சகட்ட போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதுபற்றி ஆலோசனை நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனிடையே, போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் … Read more

ஒரே ஒரு "மிஸ்ஸைல்".. மொத்த பில்டிங்கும் காலி.. பற்றி எரியும் கார்கிவ் போலீஸ் தலைமையகம்!

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யத் தாக்குதல் வேகம் பிடித்துள்ளது. அந்த நகரில் உள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட போலீஸ் தலைமயைகத்தை ரஷ்யப் படையினர் ஏவுணை மூலம் தாக்கி அழித்தனர். மொத்த கட்டடமும் பெரும் சேதமடைந்துள்ளது பல மாடிகள் நொறுங்கிப் போய் விட்டன. கட்டடமே பற்றி எரிந்து வருகிறது. கீவ் நகருக்கு அடுத்த பெரிய நகரம் கார்கிவ் தான். இங்குதான் தற்போது ரஷ்யப் படைகள் கடுமையாக தாக்கி வருகின்றன. இந்த நகரை விட்டு … Read more

ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்.! <!– ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி குடியிரு… –>

உக்ரைன் நாட்டின் Zhytomyr நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி கிடந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்நாட்டு அரசின் அவசர சேவை மையம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் புகைந்து கொண்டிருந்த கட்டிட இடிபாடுகளை கிளறி உள்ளே சிக்கியிருந்தவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன. குடியிருப்பு பகுதியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்த விமான தளத்தை குறிவைத்து ஏவுகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதில் அது குறி … Read more

பாகிஸ்தான் மாணவர்களை காப்பாற்றும் இந்திய மூவர்ண கொடி – இந்திய மாணவர்கள் தகவல்

புகாரெஸ்ட்: உக்ரைனில் சிக்கியுள்ள பல்வேறு நாட்டு மாணவர்கள் எல்லை வழியே அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து தங்களது சொந்த நாட்டிற்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒடேசா நகரில் இருந்து ருமேனியாவின் புகாரெஸ்ட் நகருக்கு வந்த இந்திய மாணவர்கள் சிலர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: இந்தியர்களாக இருப்பதாலும், இந்தியக் கொடியை ஏந்தியிருப்பதாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று உக்ரைனில் கூறப்பட்டது. நான் இந்திய மூவர்ண கொடியை … Read more

நிறைய குழந்தைகள் பெற போப் பிரான்சிஸ் அறிவுரை| Dinamalar

வாட்டிகன் சிட்டி:”வாட்டிகனில் வாழும் தம்பதியினர், செல்லப் பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டு, நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்,” என, போப் பிரான்சிஸ் அறிவுறுத்தி உள்ளார். இத்தாலியில் இருக்கும் தன்னாட்சி உடைய நாடான வாட்டிகனில், மகப்பேறு விடுப்பு கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, வாட்டிகன் சிட்டியில் நேற்று முன்தினம் போப் பிரான்சிஸ் வெளியிட்டார். அதன் விபரம்:வாட்டிகனில், பெண்களுக்கு உள்ள மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களாக உள்ளது. இந்த ஆறு மாதங்களுக்கும் முழு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மாற்றப்பட்ட கொள்கையின்படி, … Read more

ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம் – வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்த இந்தியா

ஜெனீவா, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த சிறப்புக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தீர்மானம் கொண்டு … Read more