கடந்த 24 மணி நேரத்தில்1,377 பேர் வெளியேற்றம்: மத்திய அமைச்சர்

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கீவ் நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முக்கிய நகரங்களில் ரஷிய வீரர்கள் வான்வெளி மூலம் தரையிறங்கி வருவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வருகிறது. தற்போது நிலையை விட மோசமான வகையில் சண்டை நடைபெற வாய்ப்புள்ளதால், கீவ் நகரில் இருந்து பொதுமக்கள் … Read more

பாரத் மாதா கீ ஜெய் கோஷத்துடன் இந்திய தேசிய கொடி உதவியால் தப்பிய பாக்., மாணவர்கள்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் இந்திய தேசிய கொடியுடன் ‛பாரத் மாதா கீ ஜெய்’ கோஷம் எழுப்பி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு, ‛ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் அனுப்பி, இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருகிறது. அவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்தியா வந்தடைகின்றனர். இதற்காக அண்டை நாடுகளிடம் … Read more

டிராக்டரில் இணைத்து ரஷ்யாவின் பீரங்கியை திருடிய உக்ரைன் விவசாயி: இணையத்தில் வைரலாகும் வீடியோ

உக்ரைன் மீது கடந்த 6 நாட்களாக ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து கைப்பற்ற முயற்சித்து வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கீவ் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை, உக்ரைன் விவசாயி ஒருவர் தனது டிராக்டர் மூலம் திருடிச் சென்றுவிட்டார். இந்த வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதியும், பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி.யுமான ஜானி மெர்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

உக்ரைன் மீது ரஷ்யா 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் … Read more

கீவ்வில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டதாக அறிவிப்பு <!– கீவ்வில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டதாக அறிவிப்பு –>

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யப் படைகள் நாளை கீவ் நகரின் ஏனைய பகுதிகளை தாக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு மேற்கு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கீவ்வில் இருந்து வெளியேற இனி இந்தியர்களை யாரும் இல்லை என்பதால் தூதரகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய அதிகாரிகள் மேற்கு பகுதிகளுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள ஏறத்தாழ 12 ஆயிரம் இந்தியர்களை கூடுதல் … Read more

அமெரிக்க வான்வெளியில் பறக்க ரஷிய விமானங்களுக்கு தடை- அதிபர் ஜோபைடன்

வாஷிங்டன்: ரஷியா-உக்ரைன் போருக்கு இடையே இன்று அமெரிக்கா பாராளுமன்றம் கூடியது. கூட்டத்தில் அதிபர் ஜோபைடன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ரஷிய அதிபர் புதினையும் மிக கடுமையாக தாக்கி பேசினார். அவரது பேச்சு விவரம் வருமாறு:- ரஷிய அதிபர் புதின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நியாயமில்லாதவை. அவரது செயல்பாடுகள் உலகை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ரஷியா நடத்தி வரும் போர் மிகவும் தவறானது. புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். இதனால் உலகுக்கு மாபெரும் ஆபத்தும், அச்சுறுத்தலும் ஏற்பட்டு … Read more

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை| Dinamalar

வாஷிங்டன்: ‛உக்ரைன் மீதான தாக்குதலால் ரஷ்ய அதிபர் புடின் ஆதாயம் பெறலாம் ஆனால், நீண்ட காலத்திற்கு அதற்கான அதிகமான விலையை அவர் கொடுக்க வேண்டியிருக்கும்’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அமெரிக்க பார்லிமென்டில் அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரை: நாங்கள், அமெரிக்கா மற்றும் உக்ரேனிய மக்களுடன் துணை நிற்கிறோம். அமெரிக்காவும் நமது நட்பு நாடுகளும் நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நமது கூட்டு சக்தியின் முழு பலத்துடன் பாதுகாப்போம். உக்ரைன் மக்கள் தைரியத்துடன் போராடுகிறார்கள். … Read more

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யாவின் ‘ஸ்பெட்ஸ்நாஸ்’ சிறப்பு கமாண்டோக்கள்

மாஸ்கோ: உக்ரைன் எல்லையை கடந்து அந்த நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவப் படைகளில் ‘ஸ்பெட்ஸ்நாஸ்’ என்ற பிரிவும் உள்ளது. இது அதிநவீன சிறப்பு ராணுவப் பிரிவாகும். பெலாரஸ் நாட்டுடன் ரஷ்யாகூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டபோது, அங்கு இப்படை அனுப்பி வைக்கப்பட்டது. உலகெங்கிலும் போர்க் காலம் மற்றும் அமைதிக் காலத்தில் இப்படை பணியாற்றியுள்ளது. இது ரஷ்யாவின் ராணுவப் புலனாய்வு அமைப்பான ஜிஆர்யு-வின் பிரத்யேக கமாண்டோ பிரிவாகும். 1949-ல் ஸ்பெட்ஸ்நாஸ் உருவாக்கப்பட்டது. உளவு மற்றும் நாசவேலைகள் நடத்துவதே இதன் நோக்கமாகும். … Read more

ரஷ்ய விமானங்களுக்கு அமெரிக்க வான்வெளியில் பறக்க தடை!

உக்ரைன் மீது ரஷ்யா 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய படைகளுக்கு அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளதால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் … Read more

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கிய கப்பல் <!– பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுட… –>

போர்ச்சுகல் மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் சொகுசு கார்களை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.  தீயை அணைக்கும் முயற்சியில் இழுவை படகுகள் களமிறக்கப்பட்டன. கப்பலில் இருந்த 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தது. ஆனால், கப்பலில் தீ கட்டுக்கடங்காமல் … Read more